ஞாயிறு, ஜூலை 18, 2010

மூட்டு வலிக்கான எளிய பயிற்சிகள் -பல படங்களுடன்

மூட்டு தேய்மானத்திற்கு பயிற்சிகள் மிகவும் அவசியம் ..

ஆனால் மூட்டில் அதிகமாக உராய்வு சத்தம் வரும் பொது மருத்துவரின் அறிவுரை படிதான் கீழே உள்ள பயிற்சிகளை செய்யவேண்டும் ..

மூட்டுக்கு பயிற்சிகள் மிக அவசியம் ஏன்?
  1. மூட்டினை  சுற்றி உள்ள சதைகளும் சதை நார்களும் சத்தாக,வலுவாக இருந்தால் தான் மூட்டும் பலமாக இருக்கமுடியும் 
  2. மூட்டுக்கு குறிப்பிட்ட அசைவுகள் அதன் இயங்கு திறனை அதிகபடுத்த வாய்ப்புள்ளது 
  3. மூட்டின் நரம்புகள் வலு வடையும் 
  4. மூட்டுக்கு சிறந்த சரியான அமைப்பை கொடுத்து வீக்கத்தை குறைக்கும் 
  5. மூட்டின் சத்தத்தை குறைக்க உதவும் 
  6. மூட்டின் ஆற்றலை அதிகபடுத்தும் 
  7. மூட்டினை தவறாக ,முறையற்ற ,தாறுமாறாக பயன்படுத்துவதை திருத்தி-சரியாக நடக்க ஏதுவாகும் 
  8. கவனத்தோடு நம்மை நடக்கவைத்திடும் 
  9. இன்னும் பல பல நன்மைகளே உண்டு ...
  10. நடப்பதை விட இந்த பயிற்சிகள் தான் நல்ல பலன் கொடுக்க முடியும் 
இந்த பயிற்சிகளை செய்யும் பொது முதலில் வலி கூடலாம் ,தொடர்ந்து செய்ய செய்ய வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும் ..

கீழே உள்ள பயிற்சிகளை கவனமாக ,நிறுத்தி நிதானமாக -ஐந்து முதல் பத்து தடவை செய்யலாம் 

படுத்து கொண்டு காலை கையால் பிடித்து கொண்டு பொறுமையாக தூக்கி ,விட்டு ...

நின்று கொண்டு பொறுமையாக பக்கத்தில் உள்ள ஸ்டூலின் மேல் காலை வைத்து -முன் பின்னாக அசைதல் -ஐந்து தடவைகள் 

சுவரில் சாய்ந்து கொண்டு மெதுவாக் உடகார்ந்து ,பின் மெதுவாக எழுந்திரித்தல்(வலி சில பேருக்கு அதிகமானால் செய்யவேண்டாம் )

ஒரு சாய்ந்து படுத்து கொண்டு காலை மடக்கி நீட்டுதல் 

படுத்து கொண்டு காலை மெதுவாக தூக்கி இறக்குதல் 

நாற்காலியில் உடகார்ந்து ஒரு காலை தூக்கி மடக்குதல் 

படுத்து கொண்டு காலை நீட்டி மடக்குதல் (கணுக்காலையும் முன்னே அசைத்தலுடன் நல்லது )

படுத்து கொண்டு மூட்டின் பின் பக்கம் சிறிய  தலையணை வைத்து கொண்டு மடக்கி மேல் நோக்கி நீட்டுதல்  


படுத்து கொண்டு ஒரு காலை மடக்கி வைத்து கொண்டு மறு காலை சிறிது மேலே தூக்குதல்  
நாற்காலியில் உட்கார்ந்து காலை அதிகமாக நீட்டி மடக்குதல் 

படியில் ஏறுவது போல் நின்று காலை முன் பின்னாக அசைத்தல் 

படுத்து கொண்டு இருகாலையும் முடிந்த மட்டில் மடக்குதல் 

படத்தில் காட்டியவாறு அதே திசையில் செய்தல் 

மூட்டு ,கணுக்காலை அசைத்தல் 

படுத்து கொண்டு இரு காலையும் மடக்கி இடுப்பை சேர்த்து வளைத்தல் 

சூர்யாசந்தில் இது ஒரு பகுதி -அனுமாசனாசனம் என்று சொல்வார்கள் 

கட்டிலின் விளிம்பில் படுத்து கொண்டு காலை மடக்கி நீட்டுதல் 

படுத்து கொண்டு காலை மடக்காமல் இரு பக்கமும் அசைதல் 

படுத்து கொண்டு கால் மேல் கால் போட்டுகொண்டு காலை அசைத்தல் 

இந்த பயிற்சிகளின் கோர்வை -சதை நார் கிழிந்து இருந்தாலும் கேட்கும் 

இந்த பயிற்சிகளின் கோர்வை -சதை நார் கிழிந்து இருந்தாலும் கேட்கும் 

இந்த பயிற்சிகளின் கோர்வை -சதை நாரை வலு படுத்தும்  

மூட்டு வலிக்கான யோகா பயிற்சிகள் 

வலிக்கு மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி இந்த பயிற்சிகளை செய்து பாருங்கள் ..நல்ல பலன் விரைவில் கிடைக்கும் 
இதற்க்கு வயது தடையே இல்லை 



Post Comment

5 comments:

Sakthivel சொன்னது…

Thank you for sharing useful information.

curesure Mohamad சொன்னது…

நன்றி சக்தி வேல் ..

meenamuthu சொன்னது…

மிக பயனுள்ள பயிற்சிகள் தந்திருக்கிறீர்கள்!நன்றி.

மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதில் எந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்?

மூட்டு மிகவும் தேய்ந்து போய்விட்ட நிலையில் இந்த பயிற்சிகளினால் பலன் கிடைக்குமா?

curesure Mohamad சொன்னது…

@meenamuthuநன்றி மீனா முத்து ..
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களும் இதனை செய்யலாம் (ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி )
மூட்டு தெய்மான்முள்ளவர்கள் இதனை செய்யலாம் ..நிச்சயம் பலன் அளிக்கும்

யா.மணி சொன்னது…

மிகபயநுள்ள பகுதி உங்களுக்கு நன்றி

கருத்துரையிடுக