வீக்கமுள்ள மூட்டுக்கு -ஆமவாத தைலம்
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. தண்ணீர் – ஜல 3.6 லிட்டர்
2. தயிர்த்தெளிவு – ததிமஸ்து 1.800 கிலோ கிராம்
3. புளியிலைச் சாறு – திந்திரிணி பத்ரரஸ 1.800 “
4. நல்லெண்ணெய் – திலதைல 0.900 “
இவைகளை ஒன்று
கலந்து அதில்
1. கோஷ்டம் – கோஷ்ட 12.500 கிராம்
2. சுக்கு – சுந்தீ 12.500 “
3. வசம்பு – வச்சா 12.500 “
4. முருங்கப்பட்டை – சிக்ருத்வக் 12.500 “
5. பூண்டு – லசுன 12.500 “
6. கார்த்தோட்டி வேர் – ஆதொண்டன் 12.500 “
7. தேவதாரு – தேவதாரு 12.500 “
8. கடுகு – ஸ்வேதஸர்ஸப 12.500 “
9. சித்தரத்தை – ராஸ்னா 12.500 “
இவைகளை அரைத்துக்
கல்கமாகக் கலக்கிக் காய்ச்சி கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.
குறிப்பு: நல்லெண்ணெய்
800 கிராம் சேர்ப்பது
சம்பிரதாயம். தயிர் தெளிவு 900 கிராம், புளிய இலைச் சாறு 3.600 கிலோ கிராம் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
பயன்படுத்தும்
முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி
உபயோகத்திற்கு மட்டும். தைலம் பூசிய பின் சூடான ஒத்தடம் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
பொதுவாக வாத நோய்கள் (வாத ரோக), குறிப்பாக கீல்வாயு (சந்தி வாத), வீக்கங்கள்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- வீக்கமுள்ள எந்த மூட்டுக்கும் பொதுவாக எந்த தைலத்தையும் நாங்கள்
தேய்க்க சொல்வதில்லை..வீக்கமுள்ள மூட்டுகளில் நிறைய தைலங்கள் வலிகளை
அதிகமாக்குமே தவிர குறைக்காது ..ஆனால் வீக்கமுள்ள மூட்டில் தேய்க்க ஆமவாத
தைலத்தை பயன்படுத்தலாம்
- ஆமவாத தைலம் -சூடு செய்து தேய்த்து பின் ஒத்தடம் கொடுக்க நல்ல பலன் ஆமவாதம் ,முடக்கு வாதத்தில் ,நீர்வாததில் நல்ல பலனை தரும்