முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் -
குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 10 கிராம்
2. மஞ்சள் – ஹரித்ரா 5 “
3. பாச்சோத்திப்பட்டை – லோத்ராத்வக் 5 “
4. கோரைக்கிழங்கு – முஸ்தா 5 “
5. சித்தரத்தை – ராஸ்னா 5 “
6. விளாமிச்சம்வேர் – உசீர 5 “
7. குருவேர் – ஹ்ரீவேர 5 “
8. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 5 “
9. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்5 “
10. தாழம்பூ மடல் – கேதகீ புஷ்ப 5 “
இவைகளை
ஒன்றிரண்டாகப் பொடித்து அவற்றைச் சிறு கொதி கிளம்பும் அளவிற்குச் சூடாக்கப்பட்ட 160 கிராம் நல்லெண்ணெய்யில் (திலதைல) தூவிச் சிறிது
சூடாக்கிப் பின்னர் அத்துடன் தண்ணீர் 640 மில்லி லிட்டர் சேர்த்து ஒரு சிறு கொதி வருமளவிற்குச் சூடு செய்து இறக்கி
நன்கு மூடிப் பத்து நாட்கள் வைக்கவும். பின்னர் சரக்குகளைப் பிழிந்தெடுத்து மணம்,
நிறம் இவைகளுடன் கூடிய
எண்ணெய்யைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கவும். இது “மூர்ச்சித தைலம்” எனப்படும் பிறகு அதைச் சிறிது சூடுசெய்து பிறகு
அதைச் சிறிது சூடு செய்து தேன் மெழுகு (மதுச்சிஷ்ட) 40 கிராம் சேர்த்துத் கறைந்தவுடன் வடிக்கட்டிக்
கலவையைக் களிம்பு போல் உறையுமளவிற்கு ஆற வைக்கவும்
.
பின்னர் அத்துடன்
1. சுத்தி செய்த ரஸஸிந்தூரம் – ஷோதிதரஸ ஸிந்தூர 2.500 கிராம்
2. இந்துப்பு – ஸைந்தவ லவண 5.000 “
3. குங்குமப்பூ – குங்கும 1.000 “
4. கோரோசனை – கோரோசன 0.125 “
5. பச்சைக்கற்பூரம் – கற்பூர 8.000 “
6. கஸ்தூரி – கஸ்தூரி 62.500 மில்லி கிராம்
இவைகளைத்
தனித்தனியே அரைத்துப் பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்தரைத்துக் கலந்து சந்தன தைலம்
(சந்தன தைல) 10 கிராம். அத்தர்
(அத்தர்) 0.250 கிராம்
சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
பயன்படுத்தும்
முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி
உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
பருக்கள் (யௌவன பிடக), மருக்கள் (நீலிகா), முகத்தில் கருமையுடனும் வேறு நிறங்களுடனும்
உண்டாகும் ’வ்யங்கம்’
என்னும் வட்டங்கள்,
தோல் நிறமாற்றம்
(வர்ணவிகார) மற்றும் முகத்தின் அழகைக் கெடுக்கும் தோல் நோய்கள் (சரும ரோகங்கள்).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- முப்பருக்களை இந்த லேபம் மிகவும் சிறந்த முறையில் குணப்படுத்தும்
- இரத்தம் சுத்தம் செய்யும் மருந்துகள் மற்றும் ,உடல் சூட்டை
குறைக்கும் மருந்துகளோடு இந்த மருந்தை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடக்க
வாய்ப்புள்ளது