சனி, ஆகஸ்ட் 14, 2010

உடலுக்கு நன்மை பயப்பதில் சிறந்தவை -பாகம் -2

ஆச்சார்யர் சரகர் சொன்னது ...இவை ..ஆராச்சியில் நிரூபணம் செய்யப்பட்டவை ..


21. குரலைக்கெடுப்பது - விளாங்காய்

22. இதயத்திற்கு தீமை பயக்கும் 
பொருட்களில் - செம்மறியாட்டு நெய்

23. உடலுருக்கி நோயைப் போக்க - வெள்ளாட்டுப் பால்

24. தாய்பாலை வளர்ப்பதில் - வெள்ளாட்டுப்பால்

25. இரத்தநோய், இரத்தபித்தம் நீக்க - வெள்ளாட்டுப் பால்

26. பித்த கபங்களை வளர்ப்பது - செம்மறியாட்டுப் பால்

27. உறக்கத்தை அளிப்பது - செம்மறியாட்டுப் பால்

28. கபத்தை வளர்ப்பது - நன்கு தோயாத மந்தகம் எனும்  தயிர்

29. உடலை இளைக்கச் செய்வதில் - (கோதுமை) கவேதுகம்

30. வறட்சியை உண்டாக்குவதில் - காட்டுக் கேழ்வரகு

31. சிறுநீரை வளர்ப்பதில் - கரும்பு

32. மலத்தை வளர்ப்பதில் - யவதானியம்

33. வாத வளர்ச்சிப் பொருட்களில் - நாவல்

34. கப-பித்த வளர்ச்சிப் பொருட்களில் - எள்ளின் கல்கம்

35. புளிப்பு, பித்தங்களை உண்டாக்கும்
பொருட்களில் - எள்ளின் கல்கம்

36. பித்த கபம் உண்டாக்கும் பொருட்களில் - உளுந்து

37. வாந்தி, ஆஸ்தாபநம் அநுவாஸனம் 
என்னும் வஸ்தி கர்மாக்களில் - மரக்காரக்காய்

38. பேதிக்குக் கொடுக்கும் பொருட்களில் - சிவதை வேர் 

இன்னும் தொடரும் ..

39. மென்மை பேதிக்கும் கொடுக்கும் 
பொருட்களில் - சரக்கொன்றை

40. கடுமை பேதிக்கும் கொடுக்கும் 
பொருட்களில் - கள்ளிப்பால்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக