செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

பொய் சொல்லாத மூலிகைகள் ..பாகம் 4

இந்த மூலிகைகள்  பொய் சொல்லாது ..சொன்னபடி வேலை செய்யும் ..முழு சரக சம்ஹிதை என்னும் ஆயுர்வேத சாஸ்திர நூலின் ஒரு பக்கம் விடாமல் படித்து சாறு எடுத்து ஸ்பூன் பீடிங் என்பது போல் ,வாழை பழத்தை தோல் உரித்து வாயில் வைப்பது போல் இந்த தொடர்ச்சி ...படியுங்கள் ..

சவால் ..இந்த வேலையை இந்த மூலிகைகள் செய்யாது என்று யாராவது நிரூபணம் செய்தால் லட்சம் பரிசு ..காத்திருக்கிறது ..



ஆச்சார்யர் சரகர் சொன்ன தனி மூலிகையின் சிறந்த பயன்பாடுகளின் தொடர்ச்சி இது ..

காடு மலை தேடி அலைந்தாலும் கிடைக்காத மூலிகைகளா இது ?இல்லவே இல்லை ..எளிதாக கிடைக்கும் மூலிகைகளின் சிறந்த பயன்பாடு -இதைதான் ஆங்கிலத்தில் single herb treament -என சொல்வார்கள் ..

61. மலக்கட்டு, இரத்த பித்த நீக்கம் இவற்றில் - நெய்தல்

62. பித்தம், கபம் இவைகளைத் தணிப்பதில் - காஞ்சோரி 

63. பித்தம், கபம் இவைகளைத் தணிப்பதில் - ஞாழல்

64. கபம், பித்தம், இரத்தம் இவற்றைக் 
கட்டுப்படுத்தி உலரச் செய்வதில் - வெட்பாலைப் பட்டை

65. இரத்த பித்தத்தை தணிக்கும் பொருட்களில் - குமிழப்பழம்


66. மலக்கட்டு, உந்தித் தீ தூண்டல், 
வாதநீக்கம் ஆண்மை வளர்த்தல்
ஆகியவற்றில் - மூவிலை வேர் 

67. ஆண்மையை வளர்த்து எல்லா 
தோஷங்களையும் நீக்குவதில் - பால் முதுக்கன் கிழங்கு

68. மலத்தை கட்டி, உடல் வலிமையை தந்து
வாதத்தை நீக்குவதில் - சிற்றாமுட்டி வேர் 

69. கஷ்டப்பட்டு  சிறுநீர் கழித்தல், வாத நீக்கம்
இவற்றில் - நெருஞ்சில்

70. வாதகபங்களைச் சமப்படுத்தி 
வாதகபங்களைத் தணியச் செய்வதில் - பெருங்காயம்

71. தோஷங்களை வெளிப்படுத்தி, 
உந்தித் தீயை தூண்டி, வாதகபங்களை
நீக்கும் பொருட்களில் - புளிவஞ்சி

72. மலமிளக்கியும், சீரணத்தைப் பெருக்கி,
மூலநோயை நீக்கும் பொருட்களில் - யாவக்ஷாரம் 

73. கிரஹணி நோயை நீக்குவதும், மூலத்தை
போக்குவதும், மிக்க நெய் பருகுவதால்
தோன்றிய நோயை நீக்குவதில் - மோர்

74. க்ரஹணிநோய், உடலுருக்கி, மூலநோய்
இவற்றைப் போக்குவதில் - மாமிசத்தை தின்னும் உயிரினங்களின் மாமிசம்

75. உடலுக்கு ஊட்டமளிக்கும் பொருட்களில் - நெய், பால் பருகுவது

76. ஆண்மையை வளர்த்து உதாவர்த்தம் எனும்
மேல்நோக்கிச் செல்லும் வாயுவை தடுத்து
நிறுத்தும் பொருட்களில்- சமஅளவில் நெய், சத்து மாவு இவற்றை சேரத்து உண்ணுதல்

77. பற்களுக்கு வலிமையூட்டுதிலும் உணவில்
சுவை உண்டுபண்ணுவதில் - எண்ணெய் கொப்புளித்தல்

78. துர்நாற்றத்தைப் போக்கவதும், எரிச்சலைத்
தணிப்பதும் - சந்தனப்பூச்சு

79. தோல் நோய், வியர்வை இவற்றை நீக்கும்
பொருட்களில் -  வெட்டிவேர் , விளாமிச்சவேர் 

80. வாதத்தை போக்கும் எண்ணெய் குளி,
பூச்சு இவைகளில் - கோஷ்டம்

சாவலை ஏற்றவர்கள் .....பின்னூட்டம் எழுதுங்கள் ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக