வியாழன், ஆகஸ்ட் 12, 2010

இயற்கையாகவே மிக்க நன்மை பயக்கும் உணவுப் பொருட்கள்( சரகர் சொன்னது )
1. ஊகுமுள் கொண்ட தானியங்களில் - சிவப்புச்சம்பா
2. சமதானியங்களில் - பயறு(சிறு பயிறு )
3. நீர்களில் - மழைநீர் 
4. உப்புகளில் - இந்துப்பு
5. கீரை வகைகளில் - கீரைப்பாலை(பாலைக்கீரை )
6. மான் மாமிசங்களில் - ஏணம் எனும் மானின் மாமிசம்(இப்ப சாப்பிட்டா -போலிஸ் பிடிச்சுடும் -சும்மா தெரிஞ்சுக்க )
7. பறவைகளில் - லாவகமெனும் பறவை
8. பொந்துகளில் வாழும் பிராணிகளில் - உடும்பு(இப்ப சாப்பிட்டா -போலிஸ் பிடிச்சுடும் -சும்மா தெரிஞ்சுக்க )
9. மீன்களில் - ரோகிதம்
10. நெய் வகையில் - பசுநெய்
11. பால் வகையில் - பசும்பால்
12. தாவரவகை எண்ணெய்களில் - நல்லெண்ணெய்
13. மீன் வகைகளில் - சூலூகி எனும் மீன் வகை
14. நீர்  வாழ் பறவைகளின் வசைகளில் - வெள்ளை  அன்னத்தின் வசை
15. கொத்தித் தின்னும் பறவைகளின் வசைளில் - கோழியின் நிணநீர் 
16 தழைகளைப் புசிக்கும் பிராணிகளின்  மேதசுகளில் - ஆட்டுக்கொடுப்பு
17. கிழங்குகளில் - இஞ்சி
18. பழங்களில் - திராட்சை
19. கரும்பினால் தயாரிக்கப்படும் வகைகளில் - சர்க்கரை

Post Comment

2 comments:

கருத்துரையிடுக