செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

விந்துவின் குணம் -ஆயுர்வேத ஆண்மை இரகசியங்கள் --வாஜீகரணம்

ஆயுர்வேதத்தில் ஆண்மை ரகசியங்கள்

(இக்கட்டுரை -விந்து முந்துதல் ,கனவில் தூக்கத்தில் விந்து வெளியேற்றம் ,விந்துவின் தன்மை ஆகியவற்றை ஆராய்கிறது )


1) முதுமையின்றி வாழும் துறை (ரசாயனம்) 
3) குழந்தை மருத்துவம் (கௌமாரம்)
 4) பொதுமருத்துவம் (காயசிகிச்சை)
 5) அறுவை மருத்துவம் (சல்யம்)
 6) கண், காது, மூக்கு, தொண்டை பல் தலை மருத்துவம் (சலாக்யம்) 
7) நுண்கிருமிகள் மற்றும் கண்களுக்கு தெரியாத  சத்திகள் பற்றிய துறை (பூத   விஞ்ஞானம் ) 
8) விஷங்கள் விஷமுறிவுகள் பற்றியது (அகதம்)

இவற்றில் வாஜீரணம் என்னும் முறை எப்படி மனிதன் தனது ஆண்மை தனத்தை வளர்ப்பது  என்றும், குதிரையை (வாஜீ என்றால் குதிரை) போன்று வேகமாகவும் , யானையை போல பலம் கொண்டும், சிட்டுக்குருவி போல அதிக தடவை உறவு கொள்வது என்பது பற்றி உணவு முறைகள், செயல் முறைகள், மருந்துகள் எனும் முத்தலைப்புகளில் அணுகுகிறது.

ஆயுர் வேதத்தின் உயிர் நாடி ஆரோக்கியத்தை நிலைநாட்டுவது (prevention) நோய் நீக்குவதனை காட்டிலும் முதன்மையாக உள்ளது.


விந்துவைப்பற்றி ஆயுர் வேதம் என்ன சொல்கிறது

‘சுக்ரம் (விந்து) சர்வ சரீர வயாபத்’ விந்து உடல் முழுவதும் பரவி உள்ளது.  தயிரில் நெய் உள்ளது. போல, எள்ளில் எண்ணை உள்ளது போல, கரும்பில் சாறு உள்ளது போல சுக்கிர தாது விதைகளில் மட்டுமல்லாது என்றும் உடல் முழுவதும் பரவியுள்ளது என்று உறுதிபடக் கூறுகிறது.  அதனாலேயே புணரும் போது உடல் முழுவதும் ஒவ்வொரு செல்களும் சந்தோஷமாகிறது.

விந்துவின் தன்மை -சுக்கிரம் இனிப்பு சுவை, கெட்டியான தன்மை (சில நிமிடங்களுக்கு) திரவத்தன்மை, வெண்மை , துர் நாற்றம் எதுவுமில்லாமல், எண்ணை தன்மையோடு (ஸ்னேகம்) சீத (குளிர்ச்சி )குணத்தோடு இருக்க வேண்டும். எனவே தான் சந்திரனுக்கு ஒப்பு சுக்கிரம், சூரியனுக்கு ஒப்பு பெண்ணின் ஆர்த்தவம் (Acitic Ph)

விந்து என்னும் -சுக்கிரம் எனும் ஏழாவது தாதுவானது ரஸரத்த மாம்ச மேத அஸ்தி மஜ்ஜை எனும் முதல் ஆறு தாதுக்களின் சாரம்சமாகிறது. மேலும் சுக்கிரம்(விந்து ) இத்தாதுக்களுடனும் பஞ்ச பூத விகிதாச்சாரத்தில் கலந்து ஓஜஸ் என்னும் உயிர் நாடியை (பலம், Immunity power,Vital force ) தனை உருவாக்குகிறது. 

 இந்த ஓஜஸ் இருவகைப்படும். பரம் (8 துளி அளவு) அபரம் (அரை கையளவு) என்பனவே அவைகள்.  இவ்விரு ஒஜஸும் உடல் முழுவதும் இருதயத்தை இடமாக கொண்டு சுற்றுகிறது.  

எப்போதெல்லாம் அது ஓஜஸ்; எனும் விந்து முதலான எழுதாதுக்களின் சாராம்சம்  குறைகிறதோ அப்போதெல்லாம் ஓஜஸ் எனும் உயிர் நாடியில் சிறிது அளவில் மாற்றம் உண்டாக்குகிறது.  மனது என்ற மாயைக்கும் இருதயம் தான் இருப்பிடம். இந்த ஓஜஸூம் இருதயத்தில் உள்ளது.  எனவே ஓஜஸூடைய குறைவு, குணமாற்றம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 

சுக்கிரம்(விந்து-semen ) மிக அதிகமாக வெளியேற பலம் எனும் ஓஜஸூம் குறைந்துவர பலகீனம் உடலளவிலும் மனதளவிலும் வெளிப்படுகிறது.  எனவேதான் விந்துவிட்டான் நொந்து கெட்டான். எனும் ஓர் பழமொழிக்கு காரணமாயிற்று இதனை அனைத்து ஆயுர்வேத நூல்களும் எப்படி எடுத்துறைக்கும் அடிப்படை உண்மை, ஓர் ஈரத்துணியைப் பிழிந்தால் எப்படி தண்ணீர் வருகிறதோ அதுபோல உடல் முழுவதும் பரவியுள்ள சுக்கிரம் வெளிவருகிறது.

விந்து வெளியேற்றத்தை 8 காரணங்கள் செய்கின்றன. அவைகள்

1. ஹர்ஷம்  (சந்தோஷம் மனதிருப்தி உத்கேம் மற்றும்  பெண்ணை பற்றிய சிந்தனை) 
2. தர்ஷம்  (விரக தாபம் எண்ணங்கள் அனைத்தும்  உறவு கொள்வது பற்றியும் நடவடிக்கைகள் சினிமா பேச்சு பாட்டு அவைகளை தூண்டுவது போலவும் நடப்பது)
3. பிச்சிலம் (பிசுபிசுப்புத்தன்மை குணம்)
4. திரவம் (பாயும்  தன்மை உடைய திரவத்தன்மை)
5. குருகுணம் (பாரத்தன்மை அல்லது கெட்டியான தன்மை)
6. அணுத்வம் (மிக நுண்ணிய தன்மை)
7. அபான வாயுவின் தன்மை (மிக முக்கியமான காரணம்)

தொடர்து படியுங்கள் ..
நாளை -கனவில் விந்து வெளி ஏற்றம் ஏன்?
நாளை மறுநாள் -சுய இன்பம், தவறா ?-ஆயுர்வேதம் என்ன சொல்கிறது ..

Post Comment

10 comments:

கருத்துரையிடுக