இயற்கையாகவே துன்பம் விளைவிப்பவைகளில் வலுவுள்ளவை..
மோசத்தில் மோசம் .கெட்டவற்றில் கெட்டது-இவைகள் ..ஆச்சார்யர் சரகர் இதனை தனது சரக சம்ஹிதையில் வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார் ..
- அறிவு தைரியம் நினைவாற்றல் இவற்றை நீக்க - கள் வெறி
- அஜீர்ணம் உனாக்கும் பொருட்களுள் -மிகுதியாக புசித்தல்
- நோயின் அறிகுறிகள் -மலம் சிறுநீர் இவற்றின் வேகங்களை அடக்குதல்
- உடலுருக்கி நோயை வளர்ப்பது -பெண்களுடன் மிக்க தொடர்பு
- அலிதன்மையை வளர்ப்பது -விந்துவை தடை செய்தல்
- உணவில் வெருப்புண்டாக்குவதில்-கசாப்புக் கடையை காணுதல்
- ஆயுள் குறைவை உண்டாக்குவது -உணவு புசியாமல் இருத்தல்
- உடல் இளைக்க -குறைந்த அளவு உணவு உட்கொள்ளுதல்
- சாட்றாக்னியை-பசியை தணிக்க செய்வதில் -இயல்புக்கு முரணான உணவு புசித்தல்
- குஷ்டம் போன்ற கொடிய நோய்கள் உண்டாக காரணம் -மீன் ,பால் போன்ற முரணான வீர்யமுள்ள பொருட்களை ஒரே சமயத்தில் புசித்தல்
- தீமை பயப்பது -தன் ஆற்றலுக்கு அதிகமாக உழைத்தல் .
- நோய் உண்டாக்குவது -உணவு ,உடல் பயிற்சிகளின் தவறான தொடர்பு
- வறுமை உண்டாக்குவது -மாதவிடாய் காலத்தில் புணர்வது
- ஆயுளை குறைப்பது -மாற்றான் மனைவியை காமுறுதல்
- ஆண்மையை அழிப்பது -அமைதி இழந்த மனம்
- உயிரை பறிப்பது-ஆற்றலுக்கு அதிகமாக செயலாற்றுதல்
- நோயை வளர்ப்பது -வருத்தம் கொள்ளுதல்
- சோம்பலுக்கு -மிகுந்த உறக்கம்
- வலிமையை அழிப்பதில்-ஒரே சுவையுள்ள பொருட்களை உண்ணுதல்
- சீக்கிரம் வெளியே எடுக்க வேண்டியது -உயிரற்ற கரு
- நோய்களில் -காய்ச்சல்
- நீண்ட நோய்களில் -குஷ்டம்
- நோய் கூட்டங்களில் -உடலுருக்கி நோய்
- தொடர்ந்து தோன்றும் நோயில் -நீரழிவு நோய்
- உடலுக்கு நன்மை அளிக்காத இடம் -நீர்பாங்கான இடம்
- விட வேண்டியவற்றுள் -கடவுள் இல்லை என்னும் நாத்திகம்
- வருத்தம் தருவது -பேராசை
- சாவுக்குறிகளில்-மருத்துவர் சொல் கேளாதிருத்தல்
- நேரத்தை வீணாக்குவதில் -சோம்பேறித்தனம்
- எல்லாவகையான தீமைகளை உண்டாக்குவனவற்றுள் -கெட்டவர்களிடம் தானம் பெறுதல்
2 comments:
arumai..
@jagadeeshநன்றி ..வேகமாக கமெண்ட்ஸ் எழுதிட்டீங்களே ..
கருத்துரையிடுக