சனி, ஜூலை 31, 2010

மூட்டு வலிக்கு அக்குபஞ்சர் புள்ளிகள் ..


அக்குபஞ்சர் பற்றிய பல கட்டுரைகளை தொடராக எழுத மனம் எண்ணியதுண்டு ..
மூட்டு வலி பற்றி கட்டுரை எழுதும் போது அவசரத்திற்காக வெறும் புள்ளிகளை மட்டும் எழுதுவோமா என்று மனம் அலை பாய்ந்தது ..சரி இப்போது மூட்டு வலிக்கு மட்டும் என்ற குறுகிய நோக்கில் என்னால் அக்குபஞ்சரை அணுக முடியவில்லை என்றாலும் ..வெறும் புள்ளிகளை மட்டுமாவது இப்போது காட்டுவோம் என்று தோன்றியது ..

அக்குபஞ்சருக்கு முன்னோடி வர்ம வைத்தியமே ,சூசி சிகிச்சைகள் என்னும் குத்தூசி வைத்தியமே இதற்க்கு அடிப்படைகள் ..
ஆயுர்வேதத்தில் பஞ்ச கர்மாவில் ரக்த மோக்ஷனம் என்னும் பிரிவில் -பல புள்ளிகளை தற்கால அறுவை சிகிச்சையின் தந்தை எனப்படும் சுஸ்ருதர் பலவற்றை எடுத்து கூறியுள்ளார் ..

அடிப்படை அக்குபஞ்சரை அறியாமல் வெறும் புள்ளிகளை தெரிவது மருந்து பெயரை தெரிந்த மருந்து கடைகாரன் மாதிரிதான் ..நோக்கம் தெரியாமல் குத்துவது..குருட்டு வைத்தியம் எனலாம்.
என்றாலும் மூட்டு வலிக்கு என்ன புள்ளிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற நோக்கில் இந்த புள்ளிகளை வெளிவிடுகிறேன் ..

1.மூட்டில் பசை உண்டாக்கும் குருதெலும்பை வளர்க்கும் எலும்பை வலுப்படுத்தும் -URINARY BLADDER POINT 11 ( UB 11)


மூட்டை சுற்றியுள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் சில ..

யூரினரி ப்ளாடர் பாயின்ட்UB 40,UB 57 -இவை இடுப்பு வலி மற்றும் கால் வலிக்கு பயன் படும் 

சதை வலியை குறைக்கும் பித்தப்பை பாயின்ட் GB 34

வீக்கம் வலிகளை போக்கும் எக்ஸ்ட்ரா பாயிண்ட்கள் 
நேரடியாகவும் மறைமுகமாகவும் வலிகளை குறைக்கும் ஸ்டொமக் வயிறு புள்ளிகள் -ST 34,ST 35,ST 36
எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் 

ஸ்டொமக் -வயிறு -ST 44
வலிகளை போக்கும் லிவர் -LIVER -LIV 3

கிட்னியின் சீ அல்லது குய் சக்தி குறைபாட்டுக்கு தேர்ந்தெடுக்கபடும் மூட்டு வலி புள்ளிகள் இவை 
மற்றும் பொது படையாக புள்ளிகள் இவை 

ARTHRITIS
P 6
GB 34
GV 14
LI 4 11 15
LV 2
SI 9
SP 5
ST 36
TW 5
BL 8 10 11 58 60

KNEE PAIN
GB 30 33 34 39
GV 12 14
KI 1 10
LV 4 7 8
SI 2
SP 9 10
ST 33 34 35 36
BL 53 54
 நண்பர்களே .தயவு செய்து இதில் இப்போது சந்தேகம் கேட்காதீர்கள் ..காலம் வரும் பொது முழுமையாக விளக்குவேன் ..
ஆனால் மறக்காமல் கமெண்ட்ஸ் எழுதுங்கள் ..

Post Comment

வெள்ளி, ஜூலை 30, 2010

சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்


அனாடமி தெரிந்து மசாஜ் செய்யணும் ..
இதைதான் எனது வர்ம ஆசான் சதை,சதை ஓட்டம் அறியாதவன் ,நரம்பு அறியாதவன் ,பிணைப்பு அறியாதவன் வர்மமே செய்யமுடியாது என்பார் ..
டெண்டான் என்னும் சதை நார் துவங்கும் இடம் அறிந்து ,முடியும் இடம் உணர்ந்து மசாஜ் செய்ய வேண்டும் ..

இந்த படங்களை பாருங்கள் ..உள்ளே உள்ளது எல்லாம் நன்றாக தெரியும் ..
இந்த முறையில் மசாஜ் செய்ய -வலி குறையும் ,எலும்பு வலு பெரும் ..பசை உண்டாகும் ..

இந்த படங்கள் வர்ம ஓட்டங்களை கொண்டுள்ளது ..
காலின் வழியாகத்தான் நாடி பிரிந்து மேலெழுந்து ஓடுகிறது ..
மூட்டு வலி மட்டுமல்ல -உடலின் அனைத்து வலிக்கும் இந்த முறை பலன் தரும் ..


  • இரத்த ஓட்டம் அதிகமாகும் 

  • சதை அமைப்புகள் ஒழுங்காகும் 

  • வீக்கம் வற்றிடும் 

  • மூட்டை பிடித்து நிறுத்தும் சதை நார் வலுப்பெறும் 

  • வலிகள் போகும் 

  • எந்த வயதானாலும் மூட்டு எலும்பில் பசை உண்டாகும் 

  • கால் குடைச்சல் நிற்கும் 

  • உடல் உற்சாகம் பெருகும் 

  • காலை பிடித்தால் -ஆளை(வலியை ) பிடித்து விடலாம் (காக்காய் பிடிப்பதல்ல )

  • பிடிப்பு ,சுளுக்கு எல்லாம் போய்விடும் 


























  • படம் பாருங்கள் -புரியவில்லை என்றால் கேள்வி கேளுங்கள் ..

    படம் நல்லா இருக்கிறதா ?

    நாளை ..வேதனை குறைக்கும் சரகரின் மூலிகை தொகுப்பு 


    Post Comment

    வியாழன், ஜூலை 29, 2010

    மூட்டு வலிக்கு மசாஜ் கத்துக்கணுமா ?

    மூட்டு வலிக்கு மசாஜ் முறைகள் ...




    மூட்டு வலிக்கும் போது மட்டும் எப்போதாவது தைலங்கலையோ ..விளம்பரத்தில் வரக்கொடிய ஆயின் மென்ட்களையோ தேய்த்து விட்டு  வலி குறையவே மாட்டேன் என்கிறது டாக்டர் என்ற நபர்களுக்காக இந்த போஸ்ட் ..

    இந்த முறைகளில் வர்மங்களின் இருப்பிடங்கள் உள்ளது ..இந்த வர்ம புள்ளிகளின் தூண்டல் மூட்டு வலியை முழுமையாக போக்கிடும் .

    இந்த முறைகளை கற்க நான் அலைந்த அலைச்சல்கள் கொஞ்ச நஞ்சமில்லை ...எல்லாம் பொது மக்களின் நன்மை கருதி -எந்த பிரதி பலனும் பாராமல் வெளிவிடுகிறேன் ..

    வலி இருந்தாலும் ,இல்லை என்றாலும் ,குறைந்தாலும் ,குறையவில்லை என்றாலும் ,வீக்கம் இருந்தாலும் ,இல்லை என்றாலும் -தினமும் குறைந்தது பதினைந்து நாட்களாவது அதிபட்சம் நாற்பது நாட்களுக்காவது தைலம் தேய்க்கணும் ..

    முடக்கு வாதம் உள்ளவர்கள் தைலம் தேய்ப்பதை தவிர்க்கவும் (வலி அதிகமாகலாம் )...அவர்கள் மட்டும் படித்த மருத்துவரின் ஆலோசனை படி தேய்க்கலாம் ..


    வலி வராமல் தடுக்கவும் வந்த பின் சீக்கிரம் எண்ணை பசை உண்டாக்கவும் தினமும் மூட்டுக்கு தைலம் தேய்க்க வேண்டும் ..
    நமது அம்மா .அப்பா ,வயதான தாத்தா பாட்டி ,வயது மூத்த நமது உறவினர்கள் ,நம்மை சேர்ந்தவர்களுக்கு இந்த மசாஜ் செய்யும் முறையை நாம் கற்றால் அவர்களுக்கும் நமக்கும் இது பெரிதும் உதவும் ..

    வெறுமனே எண்ணை தேய்ப்பதால்  எந்த பயனும் இல்லை ..
    அதனால் மூட்டு வலிக்கும் நாம் மசாஜ் கற்போம் ..

    கட்டிபிடி வைத்தியம் மாதிரி ..பரஸ்பர அன்பை இந்த மசாஜ் ஊக்குவித்து வலியால் கஷ்டபடுபவர்களின் வேதனையை இந்த மசாஜ் முறைகள் நீக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..





















    இந்த முறைகளில் படங்களை பார்த்து தெளிந்து கொள்ளுங்கள் ..சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ...
    மறக்காமல் ஏதாவது கமெண்ட்ஸ் எழுதுங்கள் ..
    நாளை சதை அமைப்பு படத்துடன் (அனாடமி )கூடிய மசாஜ் முறைகள் 

    Post Comment

    புதன், ஜூலை 28, 2010

    மூட்டு வலிக்கு மசாஜ் பாயிட்ன்ஸ் ..

    இந்த போஸ்டை அரை குறையாக இப்போது வெளிவிடுகிறேன் ..
    கீழே உள்ளது போல் கிட்டத்தட்ட இருபது படங்கள் உள்ளது ..எடிட் செய்ய நேரம் இல்லை ..
    நாளை முழுமையாக இந்த போஸ்டை பாருங்கள் ..சாம்பிளுக்கு சில ..












    Post Comment