வெள்ளி, ஜனவரி 27, 2012

கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு க்ஷீரபிப்பலி -Ksheera Pippali


கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு க்ஷீரபிப்பலி -Ksheera Pippali
 (ref-சக்ரதத்த)\

தேவையான மருந்துகள்:

1.            திப்பிலி பிப்பலீ      போதுமான அளவு
2.            கள்ளிப்பால் ஸ்னுஹிக்ஷீர போதுமான அளவு

செய்முறை:     

 இவைகளை நுண்ணியதாக அரைத்துப் பதத்தில் 100 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன்.

தீரும் நோய்கள்:  


பசிக்குறைவு (அக்னி மாந்த்ய), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), கல்லீரல், மண்ணீரல் பெருக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), மிதமான மலமிளக்கி.

Post Comment

வெள்ளி, ஜனவரி 20, 2012

இரிடபல் பவல் சின்ட்ரோம் என்னும் கிராணி கழிச்சளுக்கு- சித்ரக குடிகா Chitraka gutika


இரிடபல் பவல் சின்ட்ரோம் என்னும் கிராணி கழிச்சளுக்கு- சித்ரக குடிகா Chitraka gutika
 (tef-பைஷஜ்ய ரத்னாவளி - கிரஹண்யதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1.            கொடிவேலி சித்ரக                        100 கிராம்
2.            திப்பிலி மூலம் பிப்பலீ மூல               100        
3.            ஸர்ஜ க்ஷாரம் ஸர்ஜக்ஷார                 100        
4.            யவக்ஷாரம் யவக்ஷார                     100        
5.            இந்துப்பு ஸைந்தவலவண                  100        
6.            கல்லுப்பு ஸ்வர்ச்சலவண                  100        
7.            சோற்றுப்பு சமூத்ரலவண                  100        
8.            கரி உப்பு பிடலவண                       100        
9.            வளையலுப்பு காச்சலவண                 100        
10.          சுக்கு சுந்தீ                                100        
11.          மிளகு மரீச்ச                             100        
12.          திப்பிலி பிப்பலீ                      100        
13.          பெருங்காயம் (பொரித்தது) ஹிங்கு               100        
14.          ஓமம் அஜமோதா                         100        
15.          செவ்வியம் சவ்ய                          100        
16.          துருஞ்சி அல்லது எலுமிச்சை சாறு மாதுலங்கரஸ 
(அ) ஜம்பீர ரஸ       போதுமான அளவு

செய்முறை:      

பழச்சாறு நீங்கலாக மற்றவைகளை முறைப்படி பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு பழச்சாறு கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் நான்கு மாத்திரைகள் வெந்நீர் அல்லது மோருடன்.

தீரும் நோய்கள்: 

 பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), செரியாமை தோஷக்கோளாறுகள் (ஆமதோஷ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), குன்மம் (குல்ம), வயிற்று வலி (குக்ஷி சூல).

Post Comment

வியாழன், ஜனவரி 19, 2012

உணவு விஷமானதால் ஏற்படும் -காய்ச்சல் மற்றும் வாந்தி பேதிக்கு - ஸஞ்சீவினீ வடி -Sanjeevani vati


உணவு விஷமானதால் ஏற்படும் -காய்ச்சல் மற்றும் வாந்தி பேதிக்கு -
ஸஞ்சீவினீ வடி -Sanjeevani vati
(ஸாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகள்:

1.            வாயுவிடங்கம் விடங்க                         10 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                     10 கிராம்
3.            திப்பிலி பிப்பலீ                                  10          
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10          
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10          
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
7.            வசம்பு வச்சா                                  10          
8.            சீந்தில் கொடி குடூசீ                             10          
9.            சேராங்கொட்டை (சுத்தி செய்தது) ஷோதித பல்லாதக   10          
10.          நாபி (சுத்தி செய்தது) ஷோதித வத்ஸநாப              10          

செய்முறை:     

 இவைகளைச் சேராங்கொட்டை, நாபி நீங்கலாகப் பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு பசுவின் மூத்திரம் (கோமூத்திர) கொண்டு அரைக்கவும். சேராங்கொட்டை, நாபி இவைகளைத் தனியே சிறிது கோமூத்திரத்தில் ஊறவைத்து நன்கு அரைத்துச் சேர்த்து எல்லாவற்றையும் பசுவின் மூத்திரம் விட்டரைத்து 50 மில்லி கிராம் மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்

.
தீரும் நோய்கள்:  செரியாமை (அஜீர்ண), குன்மம் (குல்ம), வாந்திபேதி (விஷுஸிகா), காய்ச்சல் (ஜ்வர), பாம்புக்கடி (ஸர்ப்பதம்ஷ்ட்ட).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. புட் பாய்சன் என்னும் உணவு நஞ்சாகி போதலால் ஏற்படும் காய்ச்சல் ,வாந்தி பேதி போன்றவற்றை சரி செய்யும்
  2. நாள்பட்ட காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. சேராங்கொட்டை இருப்பதால் இந்த மருந்து -கட்டிகளை குறைக்க -இன்பெக்டட் காயங்கள் இந்த மருந்தால் மாறும்
  4. ஆண்டி பயாடிக் போல இந்த மருந்து பயன்படும்

Post Comment

திங்கள், ஜனவரி 16, 2012

குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து -நவக குக்குலு Navaka Gugglu


குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து -நவக குக்குலு Navaka Gugglu
(ref- பைஷஜ்ய ரத்னாவளி - மேதோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1.            சுக்கு சுந்தீ                                     10 கிராம்
2.            மிளகு மரீச்ச                                   10          
3.            திப்பிலி பிப்பலீ                            10          
4.            கொடிவேலிவேர் சித்ரகமூல                           10          
5.            வாயுவிடங்கம் விடாங்க                        10          
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10          
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10          
8.            கோரைக்கிழங்கு முஸ்தா                        10          

செய்முறை:      

இவைகளை நன்கு பொடித்துச் சலித்து சுத்தி செய்த குக்குலு (ஷோதித குக்குலு) 90 கிராம் சேர்த்துக் கல்வத்திலிட்டு திரிபலா கக்ஷாயம் விட்டு துண்ணியதாக அரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாக்கி நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தண்ணீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 


உடல் பருமன் (மேதோவ்ருத்தி (அ) ஸ்தூலதா), உடல் துர்நாற்றம் (சரீர தௌர்கந்த்ய), ஆமவாதம் (ஆமவாத), கீல்வாயு (அ) வாதம் (சந்திகாதவாத), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), நாட்பட்ட புண்கள் (புராணவ்ரண), கொப்பளங்கள், கட்டிகள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கொடம்புளி சூப்புடன் -இந்த மாத்திரையை காலை மாலை இரண்டு சாப்பிட வெகு வேகமாக எடை குறையும் ..
  2. வாரனாதி கஷாயம்  அல்லது வராதி கஷாயம் + இந்த மாத்திரையும் எடை குறைய பயன்படுத்தலாம் ..
  3. மேலே சொன்ன அனுபானம் கிடைக்காதவர்கள் ..திரிபலா கஷாயம் அல்லது  கொள்ளு கஷாயம் கூட நல்ல பலன் தரும்
  4. உடல் குண்டானதால் ஏற்படும் கால் வலி ,வாத நீர்  போன்றவற்றுக்கும் இந்த மாத்திரை வேலை செய்யும்
  5. ஆகாரத்தில் கட்டுப்பாடு ,சரியான உடல் பயிற்சியும் அவசியம் செய்யவேண்டும்

Post Comment