மூட்டுகளில் எண்ணை பசையை உண்டு செய்யணும்
உடம்பில் உஷ்ணம் அதிகமாக இருந்தால் அதை முதலில் குறைக்கணும்
பீடி, சிகரெட், பாக்கு, வெற்றிலை, குடிபழக்கங்களை வைத்துக்கொண்டு உடல் உஷ்ணத்தை குறைக்கவே முடியாது.
வாத நீர்னு தெரிஞ்சா நீரைக்குறைப்பதற்கு சிகிச்சை அளிக்கணும்
ஆம வாதத்தில் ஆமத்தை (செரிக்காமல் உடம்பில் சேர்ந்த விஷ நீரை) முதலில் வயிற்றில் சாடராக்னியை தூண்டிவிட்டு - ஆமத்தை செரிக்க வைக்கணும், மேலும் மேலும் ஆமம் (விஷநீர்) சேராமல் தடுத்து ஆமத்தை முழமையா நீக்கணும். அப்பறமாக எலும்பில் வலு சேரக்கணும். மூட்டுகளுக்கு இடையே பசையை உருவாக்கணும். இதற்கான பிரத்தியோகமான ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடணும்.
தைலம் வலி இருந்தாலும்,இல்லை என்றாலும் தினமும் தேய்க்கணும் .நூறு மிலி தைலத்தை மூணு மாசம் வைத்து வேடிக்கை பார்க்கும் நோயாளிகளும் பலர் உண்டு .
தேவையில்லா வாதத்தை குறைக்கணும்.
யோகாசன பயிற்சிகளையும் அத்தியாவசியமான வழிமுறைகளையும் பின்பற்றணும்.
ஒரு கோர்வையான மருந்துகளை 48 நாட்களுக்கோ, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கோ வலிக்கு மாத்திரை சாப்பிடாமல், பொறுமையாக வியாதிக்கு மருந்து சாப்பிடாமல் முழுமையாக குணம் தெரியும்.
பல வருடமாக உள்ள வியாதிக்கு 10 நாட்களில் குணம் கிடைச்சிடும்ன்னு நினைக்க கூடாது. 3 நாட்களில் கூட தீர்வு கிடைக்கலாம். ஆனால் பிரச்சினை திரும்ப வரக்கூடாதுன்னா மருந்துகளை பக்குவமாக சாப்பிடனும்.
வலியை மறக்க மாத்திரை சாப்பிட்டும் இன்னொரு வியாதியை உங்ககிட்ட படிச்ச பட்டம்போல சேர்க்காம இருக்கிறதுக்கு ஆயுர்வேத மருந்துகள் உங்களை அழகுபடுத்த காத்துக்கொண்டிருக்கிறது.
முறையாக 5 ½ வருடம் படிச்சு அனுபவ அறிவும், நோயை கணிக்கிற திறனுடைய மருத்துவர்கிட்ட எந்த ஒரு கண்டிஷனும் நீங்க போடாம, வியாதிக்கு தக்க மருத்துவர் சொல்கிற கண்டிசனை நீங்க கேட்டு நடந்தால் மூட்டுவலினா என்னன்னு 90 வயது தாத்தாகூட கேட்க வாய்ப்பு இருக்கு !