செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

குழந்தைப்பேறு அளிக்கும் மாத்திரை ..

முதியவரும்  பல புதல்வர்களை உண்டாக்க முடியக்கொடிய ஒரு வீட்டிலேயே செய்யக்கொடிய ஒரு சமையல் மாதிரி ஒரு மாத்திரை 

செய்முறை -
 1. தூய்மையானதும் ,ஈரப்பசையுள்ளதுமான அறுபதாங் குறுவை அரிசி யினை(நவ சஷ்டிக்க ஷாலி தானியம்) பாலில் ஊற வைக்க வேண்டும் 
 2. பெரிய உரலில் பால் சேர்த்து (மேலே கூறப்பட்ட ஊறவைத்த அரிசியினை )அரைக்க வேண்டும் (உரலில் குத்த வேண்டும் )
 3. நன்றாக மைய்ய அரைக்கப்பட்ட அரிசியின் சாருடன் மேலும்  சம அளவு பால் சேர்த்து கல்வத்தில் (பழைய கிரைண்டர் மாதிரி) அரைக்க வேண்டும் 
 4. இதன் சாறினை பிழிந்து வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும் ...
 5. இந்த சாறில் பூனைக்காலி விதை சூர்ணம் + பூனைகாலி விதை கசாயம் ,உளுந்து கசாயம் (விந்து அணு குறைப்பாட்டை தீர்க்கும் ) ,சிற்றாமுட்டி கசாயம் ,அதிவிடயகிழங்கு உடன் கீரை பாலை ,ஜீவந்தி க்வாதம் ,ஜீவனிய கன க்வாதம் ,நெருஞ்சில் முல்.அதிமதுரம் ,தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவரி ),பால்முதுக்கன் கிழங்கு ,திராக்ஷை ,பேரிச்சை இவற்றை தனி தனியாக கஷாயமாகவோ எடுத்து ,மேலே எடுக்கப்பட்ட சாறை கொதிக்கவைத்து பாலிலே காய்ச்ச வேண்டும் -இது நாலில் ஒரு பங்காக சுருங்க வைக்க வேண்டும் ..
 6. இதனுடன் -மூங்கிலுப்பு ,நெய்யில் வருத்த உளுந்து ,அறுபதாங் குறுவை அரிசி இவற்றின் பொடியினை கலந்து ஒரு கெட்டியான உருண்டை போல் பிசைந்து கொள்ளவேண்டும் ..
 7. இந்த கலவையுடன் தேன்,சர்க்கரை சேர்த்து இலந்தை அளவுக்கு மாத்திரையாக உருட்ட வேண்டும் 
 8. இந்த உருண்டையினை நெய்யில் வறுக்க வேண்டும் 
பயன்படுத்தும் முறை -
செரிக்கும் ஆற்றல் அறிந்து பால் அல்லது மாம்ச சாறுதான் காலை மாலை தேவை கருதி -அதிகமாகவோ ,ஒன்று அல்லது இரண்டோ சாப்பிடவேண்டும் 

பயன் -
 1. இந்த மாத்திரையை பயன் படுத்தினால் முதியவரும்  பல புதல்வர்களை உண்டாக்க முடியும் 
 2. வயதானவரும் குறைவின்றி விந்தை பெறலாம் .
ஆதாரம் -சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டாவது அத்தியாயம் -இரண்டாவது பாதம்,பாட்டு 3-9

உணவே மருந்து-மருந்தே உணவு -என்ற கோட்பாட்டின் கீழ் -மிக எளிதாக அனைவராலும் எளிதாக செய்து கொள்ளகூடிய ஒரு விசயம் இது ..

குறிப்பு -மேலே கூறியுள்ள மூலிகை ஒன்று அல்லது இரண்டு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ..

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?-விந்துவை பற்றி ஆதிகால சரகர் என்ன சொல்கிறார் ?

ஆசார்யர் சரகர் தனது சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டில் கீழ்க்கண்டவற்றை விவரித்து கூறுகிறார் ..இது உண்மை ,அனைத்திற்கும் சம்ஸ்க்ருத பாட்டு ரெபரன்ஸ் உள்ளது ..

வாஜீ கரணம்

இரசாயனத்தை பயன்படுத்தி மனிதன் நோயற்று வாழத் தொடங்கியவுடன் உள்ளத்திற்க்கு உவகையூட்டும் வாஜீகர்ணத்தை நாட வேண்டும் .
எனெனில் அறம் பொருள் அன்பு புகழ் அனைத்தும் இதனையே சார்ந்துள்ளது .மகப்பேறின் காரணம் வாஜீகரணமேயாகும்.

ஆண்மையை வளர்க்கும் முறை -வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?
 1. ரசாயன சிகிச்சையை மேற்கொள்வது போல் மேற்கொள்ளவேண்டும் 
 2. முதலில் -உடலை தூய்மை படுத்தும் சிகிசைகளான பஞ்சகர்ம எனப்படும் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும் 
வலிமை ஆண்மை மகபேற்றின் பெருக்கம் இவற்றை விரும்பும் மனிதன் வாந்தி பேதி (பஞ்சகர்ம சிகிச்சை ) மருந்து உண்டு உடலைத் தூய்மைபடுத்தி வலிமையையும் ஆண்மையை வளர்க்கும் எண்ணை வசதிகளுடன் கசாய வஸ்திகளை(பஞ்சகர்ம சிகிச்சை ) முறைப்படி செய்து கொள்ளவேண்டும் .இவர்களுக்காக எண்ணை நெய் பால் சர்க்கரை தேன் முதலிய பொருட்களுடன் கூடிய மருந்துகளை கொண்டு வஸ்திகளைச்(பஞ்சகர்ம சிகிச்சை ) செய்விக்கவேண்டும் ..பிறகு பால் மாமிசரசம் இவற்றை உண்பதற்கு கொடுக்க வேண்டும் .

கட்டுப்பாடுகள் எவை எவை ?

ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பும் ,எழுவது வயதிற்கு பின்பும் பெண்களோடும் புணரகூடாது.
மிகவும் இளமையாக உள்ளபோது தாதுக்கள் போதுமான அளவு வலிமை அடையாத போது புணர்ச்சியினால் விந்து உலர்ந்து போய் விடுகிறது 
குறைந்த தண்ணீருடைய குளம் கடுமையாக வெயிலினால் உலர்வது போல் 
பட்டுப்போன உலர்ந்த செல்லரிக்கப்பட்ட வறட்சியான மர கட்டை -தொட்டவுடன் உடைந்து விடுவது போல் 
தாதுக்கள் சரிவிகிதில் இல்லாதனுக்கு அளிக்கப்படும் வாஜீகர்ண சிகிச்சையில் கட்டுப்பாடு தேவை 

விந்து குறைய காரணம் என்ன ?

முதுமை,கவலை ,
நோய் ,
மிக்க உடல் உழைப்பு 
,பட்டினி கிடத்தல் 
மிகுதியான பெண் புணர்ச்சி -       ஆகியவற்றால் விந்து குறைவு ஏற்படுகிறது சிற்றின்ப வேட்கை தோன்றாமைக்கு காரணம் என்ன ?-செக்ஸ் உணர்வு இல்லாமைக்கு காரணம் இவைகள் 

விந்து குறைவு 
பயம் 
நம்பிக்கையின்மை 
துக்கம் 
பெண்களிடம் குற்றத்தை காணுதல் 
புணர்ச்சியின் சுவை அறியாமை 
பெண்களோடு அடியோடு தொடர்பு இன்மை 
அதிக புணர்ச்சியினால் பெரும் இன்பதை அடைதல் -   ஆகிய காரணங்களாலும் மனம் உடல் பலஹீனத்தாலும் குறையும் 


விந்துவின் இடம் -வெளியாகும் வகை -என்னென்ன 

கரும்பில் சாறு போல்,தயிரில் நெய் போல் ,எள்ளில் எண்ணை போல் -விந்து மனிதன் உடல் முழுவதும் பரவி உள்ளது 
தொடுபுலனில் இன்பத்தால் -ஈரமான ஆடையை பிழிந்தால் தண்ணீர் வெளிவருவது போல் -உடல் முழுவதும் உள்ள விந்து வெளியாகும் 

விந்து வெளியாக காரணம் என்னென்ன 

சிற்றின்ப வேட்கை 
பெண்களின் மீது பெரு விருப்பம் 
விந்துவின் இளகும் தன்மை 
பிசுபிசுப்பு தனை குறைவாக இருக்கும் தன்மை 
நுண்ணியதன்மை
வெளியாகும் தன்மை  
வாயுவின் விரைவு தன்மை -  ஆகிய காரணங்களால் விந்து வெளிப்படுகிறது 

பயனுள்ள விந்து எப்படி இருக்கும் ?

அடர்த்தியானதும் 
இனிமை (மதுர )ஆனதும் 
எண்ணை பசை உள்ளதும் 
கெட்ட நாற்ற மில்லாததும் 
குரு (கெட்டியான )தன்மை உடையதும் 
பிசுபிசு தன்மை உடையதும் - உள்ள விந்து கட்டாயமாக மகப்பேறை தரும் 


நாளை ..வாஜீகர்ண சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உணவுகள் ..

Post Comment

சனி, ஆகஸ்ட் 28, 2010

வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?ஆயுர்வேதம் எட்டு வகைகளாக பிரிகிறது ..அதில் ரசாயனம் (வயதாகாமல் என்றும் இளமையாக இருப்பது )மற்றும் வாஜீகர்ணம் (ஆண்மை பெருக்கும்-முறைகள் -குதிரை போன்று வேகமாக செயல்பட வைக்ககூடிய துறை )..

நாம் இப்போது ரசாயனம் மற்றும் வாஜீகர்ணம் துறையின் உள்ள நுணுக்கங்களை தெரிய இருக்கிறோம் 

வாஜீ கரணம் என்றால் என்ன?

சரகரின் கூற்று படி 
 • எந்த ஒரு விஷயம் ஒரு ஆண்மகனை -உறவில் குதிரை (stallion ) போல் வீர்யத்தோடு செயல்பட வைக்கிறதோ -அந்த விஷயங்கள் வஜீர்கர்ணம் 
 • உறவில் பரிபூர்ண திருப்தி பெற வைக்கிறதோ அது வாஜீகர்ணம் 
 -(சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாட்டு நாலு முதல் ஐம்பத்து ஒன்று வரை )

ஆச்சார்யா வாக்பட்டரின் கூற்றுபடி -
 • எந்த ஆண்மகன் -வாஜீ கர்ண சிகிச்சையை மேற்கொள்கிறானோ அவனுக்கு மனதில் உற்சாகம் ,உடலில் பூரிப்பு ,ஆத்மார்த்த சந்தோசம் ,நல்ல குழந்தை செல்வம் ,நல்ல குல பெருமை ,நீடித்த ஆயுள் கிடைக்கும் 
 • அதுமட்டுமில்லாது அவன் பெண்களால் கவரப்படுவான் ,உறவில் குதிரை போல் வேகமாக உறுதியாக செயல்படுவான் .
யாருக்கெல்லாம் எந்த வாஜீகர்ண சிகிச்சை தேவை படும் ?
 1. வஜீகர்ண சிகிச்சையின் அவசியம் என்ன ? யாருக்கு ?
 2. பிறப்பிலிருந்தே உடல் வலு குறைந்தவர்
 3. உடலுறவு கொள்வதில் வலு குறைந்தவர்
 4. அதிகமான உடலுறவின் காரணமாக விந்தை அதிகம் இழந்தவர்
 5. உடலிலும் மனதிலும் -பாலுணர்வில் சோர்வு பெற்றவர்
 6. நோயினால் -(சர்க்கரை நோய் மற்றும் பல ) பாதிக்கபட்டு உடல் பல்ஹீனமானவர்
 7. அதிக பெண்களை மனைவியாக பெற்றவர்
 8. இயற்கையாக தாதுக்களின் நஷ்டம் பெற்றவர்
 9. பலம் குறைந்த காலம் ,பலம் குறைக்கவைக்கும் தேசத்தில் உள்ளவர்
 10. அதிக சந்தோஷத்தை அடைய விருப்பமானவர்
(சரக சம்ஹிதை -இரண்டாவது அத்தியாயம் -மூன்றிலிருந்து பத்து வரை உள்ள பாட்டில் )

வாஜீகர்ண சிகிச்சை பெற தகுதியானவன் யார் ?
 1. குழந்தை இல்லாதவர்
 2. விந்து தாது குறைந்ததால் பலம் இழந்தவர்
 3. உடலுறவு கொள்ள சக்தி இல்லாதவர்
 4. உடலுறவு -பாலுணர்வே இல்லாதவர்
 5. ஆண்மை இழந்தவர்
 6. என்றும் இளமையாக வாழ நினைப்பவர்
 7. அதிக வசதி படைத்தவர் (பணக்கார )
 8. தன் இச்சைகளை அடக்க தெரிந்தவர்
வாஜி கர்ண சிகிச்சை பெற தகுதியில்லாதவன் யார் 
 1. சமூகத்தில் -தகாத குணம் உள்ளவன் -அனாத்மா 
 2. பதினாறு வயதிற்கு குறைந்தவன் -எழுபது வயதிற்கு மேலுள்ளவர்கள் 
 3. அதிக காம இச்சை கொண்ட-நல்ல எண்ணம் இல்லாதவன் 


தொடரும் .

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

இயற்கையாகவே துன்பம் விளைவிப்பவைகளில் வலுவுள்ளவை..இயற்கையாகவே துன்பம் விளைவிப்பவைகளில் வலுவுள்ளவை..
மோசத்தில் மோசம் .கெட்டவற்றில் கெட்டது-இவைகள் ..ஆச்சார்யர் சரகர் இதனை தனது சரக சம்ஹிதையில் வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார் ..
 1. அறிவு தைரியம் நினைவாற்றல் இவற்றை நீக்க -  கள் வெறி 
 2. அஜீர்ணம் உனாக்கும் பொருட்களுள் -மிகுதியாக புசித்தல் 
 3. நோயின் அறிகுறிகள் -மலம் சிறுநீர் இவற்றின் வேகங்களை அடக்குதல் 
 4. உடலுருக்கி நோயை வளர்ப்பது -பெண்களுடன் மிக்க தொடர்பு 
 5. அலிதன்மையை வளர்ப்பது -விந்துவை தடை செய்தல் 
 6. உணவில் வெருப்புண்டாக்குவதில்-கசாப்புக் கடையை காணுதல் 
 7. ஆயுள் குறைவை உண்டாக்குவது -உணவு புசியாமல் இருத்தல் 
 8. உடல் இளைக்க -குறைந்த அளவு உணவு உட்கொள்ளுதல் 
 9. சாட்றாக்னியை-பசியை தணிக்க செய்வதில் -இயல்புக்கு முரணான உணவு புசித்தல் 
 10. குஷ்டம் போன்ற கொடிய நோய்கள் உண்டாக காரணம் -மீன் ,பால் போன்ற முரணான வீர்யமுள்ள பொருட்களை ஒரே சமயத்தில் புசித்தல் 
 11. தீமை பயப்பது -தன் ஆற்றலுக்கு அதிகமாக உழைத்தல் .
 12. நோய் உண்டாக்குவது -உணவு ,உடல் பயிற்சிகளின் தவறான தொடர்பு 
 13. வறுமை உண்டாக்குவது -மாதவிடாய் காலத்தில் புணர்வது 
 14. ஆயுளை குறைப்பது -மாற்றான் மனைவியை காமுறுதல் 
 15. ஆண்மையை அழிப்பது -அமைதி இழந்த மனம் 
 16. உயிரை பறிப்பது-ஆற்றலுக்கு அதிகமாக செயலாற்றுதல் 
 17. நோயை வளர்ப்பது -வருத்தம் கொள்ளுதல் 
 18. சோம்பலுக்கு -மிகுந்த உறக்கம் 
 19. வலிமையை அழிப்பதில்-ஒரே சுவையுள்ள பொருட்களை உண்ணுதல் 
 20. சீக்கிரம் வெளியே எடுக்க வேண்டியது -உயிரற்ற கரு 
 21. நோய்களில் -காய்ச்சல் 
 22. நீண்ட நோய்களில் -குஷ்டம் 
 23. நோய் கூட்டங்களில் -உடலுருக்கி நோய் 
 24. தொடர்ந்து தோன்றும் நோயில் -நீரழிவு நோய் 
 25. உடலுக்கு நன்மை அளிக்காத இடம் -நீர்பாங்கான இடம் 
 26. விட வேண்டியவற்றுள் -கடவுள் இல்லை என்னும் நாத்திகம் 
 27. வருத்தம் தருவது -பேராசை 
 28. சாவுக்குறிகளில்-மருத்துவர் சொல் கேளாதிருத்தல்
 29. நேரத்தை வீணாக்குவதில் -சோம்பேறித்தனம் 
 30. எல்லாவகையான தீமைகளை உண்டாக்குவனவற்றுள் -கெட்டவர்களிடம் தானம் பெறுதல் 

  Post Comment

  புதன், ஆகஸ்ட் 25, 2010

  இயற்கையாக துன்பம் விளைவிக்கும் உணவுப் பொருட்கள்

  இயற்கையாக துன்பம் விளைவிக்கும் உணவுப் பொருட்கள் 
  1. ஊகமுள் (சூக) தானியங்களில் -                     யவ தானியம் 
  2. சமீ தானியங்களில் -                                       உளுந்து 
  3. நீர் வகைகளில் -                                               மழை காலத்து ஆற்று நீர்
  4. உப்புகளில் -                                                       சவுட்டு உப்பு 
  5. கீரை வகைகளில் -                                            கடுக்கீரை 
  6. மாம்சங்களில் -                                                  பசு மாம்சம்
  7. பறவைகளில் -                                                   சிறிய புறா 
  8. பொந்தில் வாழும் பிராணிகளில் -                    தவளை 
  9. மீன்களில் -                                                          சிலிசிமம் என்னும் மீன் 
  10. நெய்களில் -                                                         செம்மறியாட்டு நெய்
  11. பால்களில் -                                                         செம்மறியாட்டு நெய் 
  12. தாவர எண்ணைகளில் -                                     குசும்ப எண்ணெய்
  13. வசை என்னும் நிணநீர்களில்-                          எருமைக் கடாவின் வசை நீர் 
  14. மீன் வசைகளில் -                                              கும்பீரம் என்னும் வசை 
  15. நீர் வாழ் பறவைகளின் வசைகளில் -             நீர் காக்கையின் நிணநீர் 
  16. கொத்தித் தின்னும் பறவை வகையில் -       சிட்டுக்குருவியின் வசை 
  17. தழைகளை தின்னும் பிராணி மேதசில் -      யானையின் கொழுப்பு 
  18. பழங்களில்-                                                       அசினி பலாபழம் 
  19. கிழங்குகளில் -                                                 முதிர்ந்த முள்ளங்கி 
  20. கரும்பு பொருட்களில் -                                   வெல்லப்பாகு 

  மேற்கூறிய அனைத்தும் இயற்கையாகவே தீமை பயக்கும் என ஆச்சார்யர் சரகர் சொல்கிறார் ..

  Post Comment

  சனி, ஆகஸ்ட் 21, 2010

  வாழும் முறைகளில் நன்மை பயப்பவைகளில் சிறந்தவை -பாகம் 5

  ஆச்சார்யர் சரகரின் -சிறந்தவைகளில் சிறந்தவை என விளக்கப்பட்டவை இவைகள் இது ...

  81. கண்களுக்கு நன்மை பயப்பதும், விந்துவை
  வளர்ப்பதும் தலைமுடி, குரல், நிறம் இவற்றிற்கு
  நன்மை பயப்பதும் என இவற்றில் - அதிமதுரம்;

  82. உயிரூட்டம் தரும் பொருட்களில்  - காற்று

  83. அசீரணநோய், அசைவற்றுப் போதல்,
  குளிர்ச்சி, வலி, நடுக்கம் ஆகியவற்றை 
  நீக்கும் பொருட்களில்  - நெருப்பு
  84. வாதம் முதலியவை தேக்கிவைக்கும்
  பொருட்களில் - தண்ணீர்

  85. நீர் வேட்கை, வாந்தி இவைகளைப் 
  போக்குவதில் - மண்ணைச் சூடாக்கிக் கல்லை  கல்லைச் சூடாக்கித் தண்ணீரில் தணித்து எடுத்து வைக்கப்பட்ட நீர்


  86. ஆற்றலை வளர்ப்பதில் - சீரண ஆற்றலுக்கு ஏற்ப உணவு உட்கொள்ளுதல், உடலுக்கு 
  ஏற்றதான உணவும் செயலும்  மேற்கொள்ளுதல்.

  87. ஆரோக்கியமானவைக்கு - தக்க காலத்தில் உணவு


  89. நன்கு சீரண ஆற்றலைத் தருவதில் - ஒரு வேளை உணவு 
  உட்கொள்ளுதல்

  90. நன்மையளிப்பது - அடக்கமும், சாந்தியும்

  91. ஆயுளை வளர்ப்பது - சிற்றின்ப எண்ணமின்றி,
  புலன் அடக்கத்துடன், பிரம்மசர்யம்
  மேற்கொள்ளுதல்.

  92. ஆண்மை வளர்ப்பது - மன உறுதி

  93. களைப்பபைப் போக்குவதில் - குளித்தல்

  94.கிழ்ச்சியூட்டுவதில் - நகை

  95. உடலை உலர்த்துவதில் - வருத்தம்

  96. உடல் வளர்ச்சியில் - பற்றற்ற தன்மை

  97. உறக்கம் தருபவையில் - நல்ல வளர்ச்சி

  98. வலிமை தருவதில் - பலசுவைப் பொருட்களை 
  உண்ணுதல்

  99. உடன் நீக்க வேண்டியவற்றுள் - அசீரணம்

  100. மென்மையான மருந்து சிகிச்சையில் - குழந்தைகள் உணவும் செயலும்

  101. தொடர்ந்த சிகிச்சை முறையில் - வயோதிகர்கள்

  102. கடுமையான மருந்து, உடற்பயிற்சி
  புணர்ச்சி இவற்றைவிட வேண்டியவர்களுள் - கருவுற்ற பெண்

  103. கருதரிக்கும் பொழுது - மன மகிழ்வு

  104. சிகிச்சை செய்ய முடியாதது - ஸன்னிபாதம்

  105. முரண் சிகிச்சையில்  - ஆம சிகிச்சை

  106. பஞ்ச கர்மாக்களில் - வஸ்தி கர்மா

  107. மூலிகை விளையும் இடங்களில் - இமயமலை

  108. ஆரோக்கியம் அளிக்கும் இடங்களில் - பாலைவனம்

  109. மூலிகைகளில் - ஸோமலதை

  110. மருத்துவ குணங்களில் - தக்கமுறையில் சிகிச்சை   
  கையாளுதல்.

  111. ஆரோக்கிய அறிகுறிகளில் - தன்னம்பிக்கை

  112. ஐயங்களைத் தீர்ப்பனவற்றுள் - மருத்துவர்கள் அடங்கிய கூட்டம்.

  113. சிகிச்சை முறைகளில் - நூலறிவுடன் கூடிய ஊகம்

  114. காலத்தை பற்றிய அறிவை
  பயன்படுத்துவதில் - உயர்ந்த நேரான அறிவு

  115. ஐயம் அகற்றும் செயல்களில் - நல்ல பட்டறிவு

  116. அச்சம் விளைவிப்பது - ஆற்றல் இன்மை

  117. அறிவை வளர்க்கும் செயல்களில் - உடன்பயின்றவருடன் கற்ற
  நூல்களைப் பற்றி வாதம் புரிதல்.

  118. சாத்திர அறிவு பெறும்  காரணங்களில் - ஆசாரியன்

  119. அழிவற்றவைகளில் - ஆயுர்வேதம்

  120. கடைபிடிக்க வேண்டியவை  - நல்லோர்  நல்லூரை

  121. நோய் தீரும் குறிகளில் - வெறுப்பு அடையாதிருத்தல்

  122. எல்லா சுகங்களையம் தருவது - சொல், செயல் மனம் 
  அனைத்தையும் இறைவனிடம்
  ர்ப்பணித்தல்

  இவை யாவும் சிறந்தவையாகக் கூறப்பட்டன.

  மேற்கூறிய 122 பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வது இன்றியமையாதது என விளக்கப்பட்டது.

  Post Comment

  வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

  நாளை முதல்

  நாளை முதல் தினமும் அப்டேட் செய்யப்படும் 

  Post Comment

  செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

  பொய் சொல்லாத மூலிகைகள் ..பாகம் 4

  இந்த மூலிகைகள்  பொய் சொல்லாது ..சொன்னபடி வேலை செய்யும் ..முழு சரக சம்ஹிதை என்னும் ஆயுர்வேத சாஸ்திர நூலின் ஒரு பக்கம் விடாமல் படித்து சாறு எடுத்து ஸ்பூன் பீடிங் என்பது போல் ,வாழை பழத்தை தோல் உரித்து வாயில் வைப்பது போல் இந்த தொடர்ச்சி ...படியுங்கள் ..

  சவால் ..இந்த வேலையை இந்த மூலிகைகள் செய்யாது என்று யாராவது நிரூபணம் செய்தால் லட்சம் பரிசு ..காத்திருக்கிறது ..  ஆச்சார்யர் சரகர் சொன்ன தனி மூலிகையின் சிறந்த பயன்பாடுகளின் தொடர்ச்சி இது ..

  காடு மலை தேடி அலைந்தாலும் கிடைக்காத மூலிகைகளா இது ?இல்லவே இல்லை ..எளிதாக கிடைக்கும் மூலிகைகளின் சிறந்த பயன்பாடு -இதைதான் ஆங்கிலத்தில் single herb treament -என சொல்வார்கள் ..

  61. மலக்கட்டு, இரத்த பித்த நீக்கம் இவற்றில் - நெய்தல்

  62. பித்தம், கபம் இவைகளைத் தணிப்பதில் - காஞ்சோரி 

  63. பித்தம், கபம் இவைகளைத் தணிப்பதில் - ஞாழல்

  64. கபம், பித்தம், இரத்தம் இவற்றைக் 
  கட்டுப்படுத்தி உலரச் செய்வதில் - வெட்பாலைப் பட்டை

  65. இரத்த பித்தத்தை தணிக்கும் பொருட்களில் - குமிழப்பழம்


  66. மலக்கட்டு, உந்தித் தீ தூண்டல், 
  வாதநீக்கம் ஆண்மை வளர்த்தல்
  ஆகியவற்றில் - மூவிலை வேர் 

  67. ஆண்மையை வளர்த்து எல்லா 
  தோஷங்களையும் நீக்குவதில் - பால் முதுக்கன் கிழங்கு

  68. மலத்தை கட்டி, உடல் வலிமையை தந்து
  வாதத்தை நீக்குவதில் - சிற்றாமுட்டி வேர் 

  69. கஷ்டப்பட்டு  சிறுநீர் கழித்தல், வாத நீக்கம்
  இவற்றில் - நெருஞ்சில்

  70. வாதகபங்களைச் சமப்படுத்தி 
  வாதகபங்களைத் தணியச் செய்வதில் - பெருங்காயம்

  71. தோஷங்களை வெளிப்படுத்தி, 
  உந்தித் தீயை தூண்டி, வாதகபங்களை
  நீக்கும் பொருட்களில் - புளிவஞ்சி

  72. மலமிளக்கியும், சீரணத்தைப் பெருக்கி,
  மூலநோயை நீக்கும் பொருட்களில் - யாவக்ஷாரம் 

  73. கிரஹணி நோயை நீக்குவதும், மூலத்தை
  போக்குவதும், மிக்க நெய் பருகுவதால்
  தோன்றிய நோயை நீக்குவதில் - மோர்

  74. க்ரஹணிநோய், உடலுருக்கி, மூலநோய்
  இவற்றைப் போக்குவதில் - மாமிசத்தை தின்னும் உயிரினங்களின் மாமிசம்

  75. உடலுக்கு ஊட்டமளிக்கும் பொருட்களில் - நெய், பால் பருகுவது

  76. ஆண்மையை வளர்த்து உதாவர்த்தம் எனும்
  மேல்நோக்கிச் செல்லும் வாயுவை தடுத்து
  நிறுத்தும் பொருட்களில்- சமஅளவில் நெய், சத்து மாவு இவற்றை சேரத்து உண்ணுதல்

  77. பற்களுக்கு வலிமையூட்டுதிலும் உணவில்
  சுவை உண்டுபண்ணுவதில் - எண்ணெய் கொப்புளித்தல்

  78. துர்நாற்றத்தைப் போக்கவதும், எரிச்சலைத்
  தணிப்பதும் - சந்தனப்பூச்சு

  79. தோல் நோய், வியர்வை இவற்றை நீக்கும்
  பொருட்களில் -  வெட்டிவேர் , விளாமிச்சவேர் 

  80. வாதத்தை போக்கும் எண்ணெய் குளி,
  பூச்சு இவைகளில் - கோஷ்டம்

  சாவலை ஏற்றவர்கள் .....பின்னூட்டம் எழுதுங்கள் ..

  Post Comment

  ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

  சிறந்த தனி மூலிகையின் பயன்பாடுகள் ..சிறந்தவை -பாகம் -3

  சிறந்தில் சிறந்து என்று -பெஸ்ட் ஆப் பெஸ்ட் எனப்படும் தனி மூலிகையின் தனி பண்புகள் தனி பயன்கள் ..இவை ஆச்சார்யர் சரகர் தனது மருத்துவ அறிவில் சொன்னது ...

  41. சிரோவிரேசனத்தில் (நஸ்யவிதி) - நாயுருவி விதை

  42. கிருமிகளை அழிப்பதில் - வாயுவிடங்கம்

  43. நஞ்சுகளை நீக்குவதில் - வாகை விதை

  44. குஷ்ட(தோல் ) நோய்களை நீக்குவதில் - கருங்காலி

  45. வாதங்களை நீக்குவதில்  - சிற்றரத்தை

  46. ஆயுளை நீடிப்பதில் - நெல்லிக்காய்

  47. பலவகையாக உடலுக்கு 
  நன்மையளிப்பதில் - கடுக்காய்

  48. ஆண்மையையும், வாதத்தையும் 
  நீக்குவதில் - ஆமணக்கு வேர் 

  49. சடராக்னியைத் தூண்டுவதில் - கண்டந்திப்பிலி

  50. செரிப்பிக்கும் ஆற்றல் வாய்ந்த பொருட்களில் - கண்டந்திப்பிலி


  51. வயிற்றுப்புச நோய்களை நீக்குவதில் - கண்டந்திப்பிலி

  52. ஆஸநவாய் வீக்கம் மூலம் வலி நீக்குவதில் - கொடி வேலி

  53. விக்கல், மூச்சுத் திணறல், பக்க சூலை
  நீக்குவதில் - கொடி வேலி

  54.  மலக்கட்டு, செரிப்பித்தல் உண்டு  - கோரைக்கிழங்கு
  பண்ணுதலில்

  55. செரிமானம் உண்டு பண்ணுதல்,
  வாந்தியை நிறுத்தல் பேதியை நிறுத்தல் - விளாமிச்ச வேர் 
  இவைகளுக்கு

  56. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
  செரிமானம் இவைகளுக்கு - வெட்டி வேர் 

  57. மலக்கட்டு, இரத்தபித்த நோய் நீங்க - நன்னாரி 

  58. மலக்கட்டு, வாதநீக்கம், உந்தித் 
  தீதூண்டல் கபநீக்கம் இரத்த  - சீந்தில் கொடி
  அடுத்த நீங்க

  59. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
  வாத கபம் தணித்தல் இவற்றில் - வில்வம்

  60. உந்தித்தீ தூண்டல், செரிமானம்
  மலம் கட்டுதல் எல்லா 
  தோஷங்களையும் நீக்குவதில் - அதிவிடயம்

  தொடரும் ..

  Post Comment