புதன், நவம்பர் 30, 2011

வலிகளை போக்கும் - தான்வந்த்ர தைலம்


வலிகளை போக்கும் - தான்வந்த்ர தைலம்
 (ஸர்வரோக சிகித்ஸாரத்னம் - வாதப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            குருந்தொட்டிவேர் பலாமூல           1.200 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல             19.200                   “

                இவைகளைக்  கொதிக்கவைத்து 4.800 லிட்டராகக் குறுக்கி வடிகட்டவும்.

1.            சம்பா கோதுமை யவ                15.385 கிராம்
2.            இலந்தைக்கொட்டை பாதரி                 15.385        “ 
3.            கொள்ளு குலத்தா                         15.385        “ 
4.            வில்வவேர் பில்வமூல                    15.385        “ 
5.            முன்னை வேர் அக்னிமாந்த                 15.385        “ 
6.            பெருவாகைவேர் ஸ்யோனாக               15.385        “ 
7.            குமிழ்வேர் காஷ்மரீ                       15.385        “ 
8.            பாதிரிவேர் பாட்டால                     15.385        “ 
9.            ஓரிலை ப்ரிஸ்னிபார்ணீ                    15.385        “ 
10.          மூவிலை சாலீபர்ணீ                       15.385        “ 
11.          கண்டங்கத்திரி கண்டகாரீ                  15.385        “ 
12.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                 15.385        “ 
13.          நெருஞ்சில் கோக்ஷூர                     15.385        “ 
14.          தண்ணீர் ஜல                        3.200 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 0.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டவும்.

இனி மேற் கூறிய

1.            குருந்தொட்டிக் கஷாயம்                     4.800 லிட்டர் (6 பங்கு)
2.            சம்பா கோதுமை முதலானவைகளின் கஷாயம்0.800 லிட்டர்(1பங்கு)

இவைகளுடன்
3.            பசுவின் பால் கோக்ஷீர                     4.800 கிராம் (6 பங்கு)
4.            நல்லெண்ணெய் திலாதைல                 0.800       “      (1 பங்கு)

                சேர்த்து அத்துடன்

1.            மேதா மேதா                              6.500 கிராம்
2.            மஹாமேதா மஹாமேதா                  6.500       “
3.            தேவதாரு தேவதாரு                      6.500       “
4.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                6.500       “
5.            காகோலீ காகோலீ                         6.500       “
6.            க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ           6.500       “
7.            சந்தனம் சந்தன                      6.500       “
8.            நன்னாரி ஸாரிவா                         6.500       “
9.            கோஷ்டம் கோஷ்ட                        6.500       “
10.          கிரந்திதகரம் தகரம்                        6.500       “
11.          ஜீவகம் ஜீவக                        6.500       “
12.          ரிஷபகம் ரிஷபக                          6.500       “
13.          இந்துப்பு ஸைந்தவலவண                  6.500       “
14.          வெந்தயம் மேதிக                         6.500       “
15.          கோமூத்திரசிலாஜது (சுத்தி செய்தது)
                                                – கோமூத்ரசிலாஜித் (சுத்தி)  6.500       “
16.          வசம்பு வச்சா                             6.500       “
17.          அகில்கட்டை அகரு                       6.500       “
18.          மூக்கிரட்டை புனர்னவ                     6.500       “
19.          அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா            6.500       “
20.          தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ        6.500       “
21.          கீரைப்பாலை ஜீவந்தி                 6.500       “
22.          அதிமதுரம் யஷ்டீ                         6.500       “
23.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ           6.500       “
24.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ         6.500       “
25.          நெல்லிமுள்ளி ஆமலகீ                    6.500       “
26.          நரும்பசை -                                6.500       “
27.          சதகுப்பை சதபுஷ்ப                        6.500       “
28.          காட்டுளுந்துவேர் மாஷபர்ணீ               6.500       “
29.          காட்டுப்பயறுவேர் முட்கபர்ணீ              6.500       “
30.          ஏலக்காய் ஏலா                      6.500       “
31.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             6.500       “
32.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி              6.500       “

                                இவைகளை கோமூத்திர சிலாஜது நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி கோமூத்திர சிலாஜதுவைப் பாகம் வருவதற்கு சிறிது நேரம் முன்பாகவே நன்கு தண்ணீரில் கரைத்து ஊற்றி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    
 1.            இதே கல்க, கஷாயங்களைக் கொண்டு ஆவர்த்தனம் எனப்படும் பலதடவைகள் மடக்கி மடக்கிக் காய்ச்சப்படும் செய்முறைக்கு உட்படுத்தப்படும்போது இது ஆவர்தித தான்வந்த்ர தைலம் எனப்படும்.

                               
2.            ஸ்நேக திரவியமாக 800 மி.லி. நல்லெண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், நெய் ஆகியவற்றை சம அளவாக மொத்தம் 800 மி.லி அளவுக்கு எடுத்து இதே கல்க கஷாய சரக்குகளுடன் காய்ச்சும்போது இதற்கு த்ரிவ்ருத் தான்வந்த்ர தைலஎன்று பெயர் பெருகிறது.

                                 
3.            இதற்கு டலாதைலஎன்றொரு பெயருமுண்டு.


பயன்படுத்தும் முறை:    
  10 முதல் 60 சொட்டுகள் வரை சூடான பாலுடன் உள்ளுக்குக் கொடுக்கவும்.(தான்வந்தரம் ஆவர்த்தி -உள்ளுக்கு பயன்படுத்துவது நல்லது )

                 
நஸ்யம், பஸ்தி, தாரா, அப்யங்கம் போன்ற உள் மற்றும் வெளி உபயோகங்களுக்குப் பயன்படுகிறது.

வெளிப்ரயோகமாகவும் பயனபடுத்தலாம்


               
தீரும் நோய்கள்:  
பாரிசவாயு (பக்ஷவாத), முகவாதம் (அர்தித), முற்றுடல் வலி (சர்வாங்கவாத), நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய) போன்ற வாதநோய்கள் (வாதரோக), இளைப்பு எனும் தாதுக்ஷயம், உரஃக்ஷதம் எனும் ரத்தம் துப்புதல், யோனி நோய்கள் (யோனிரோக), பிரஸவத்திற்கு பின்வரும் நோய்கள் (சூதிகா ரோக) ஆகியன.




 தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. தான்வன்தரம் தைலம் -பொதுவாக எல்லாவிதாமான வலிகளுக்கு வெளிபிரயோகமாக பயன்படுத்த படுகிறது
  2. ஆயுர்வேதத்தின் முக்கிய விஷயமான -பஞ்சகர்மாவில் -இந்த தைலம் பெரும்பான்மையாக -வஸ்தி,பிழிச்சல் .தாரை ,அபயங்க மாசாஜ் போன்றவற்றில் பயன்படுத்தபடுகிறது
  3. முக்கியமாக வாத வலிகளை போக்கும் ,உடலுக்கு தெம்பை அளிக்கும்
  4. பலஹீனத்தை போக்கும் -உடலுக்கு ஆற்றலை தரும்
  5. கேரளாவில் இந்த தைலத்தை -பிரசவத்திற்கு பின் வயிறு பகுதியில் தேய்த்து குளிப்பார்கள் -அதனால் -பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படுகிற கோட்டை -அதாவது ஸ்ட்ரெச் மார்க்கை நன்றாக குறைக்கும் ,தளந்த வயிறை இறுக செய்யவும் செய்யும் என்பது உண்மை ..சிலர் பிரசவத்திற்கு முன் -கடைசி இரண்டு -மூன்று மாதங்கள் -வயிறில் மிதமாக தேய்ப்பதும் உண்டு
  6. மிக முக்கியமான மருந்துக்கு தான் தான்வன்தரம் என்று பெயர் வைப்பார்கள்
  7. இந்த மருந்திலே -கோமூத்திர சிலாஜித்தை பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் -பெரும்பானையான மருந்து கம்பெனிகள் -கோமூத்திர சிலாஜிதுக்கு பதில் கற்பூர சிலாஜிதை பயன்படுத்துகிறார்கள் .

Post Comment

ஞாயிறு, நவம்பர் 13, 2011

உடலை குளிர்ச்சியாக்கும் -சந்தனாதி தைலம்


உடலை குளிர்ச்சியாக்கும் -சந்தனாதி தைலம்
  (ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல        3.200 லிட்டர்
2.            நல்லெண்ணெய் திலதைல 800 கிராம்      இவைகளில்
1.            வெள்ளைச்சந்தனம் சந்தன                 3.125 கிராம்
2.            செஞ்சந்தனம் ரக்த சந்தன                  3.125      
3.            மஞ்சள் சந்தனம் (மரமஞ்சள்) தாரு ஹரீத்ரா      3.125      
4.            காலீயகம் பட்டாங்க                       3.125      
5.            அகில்கட்டை அகரு                       3.125      
6.            காரகில் கட்டை க்ருஷ்ண அகரு            3.125      
7.            தேவதாரு தேவதாரு                      3.125      
8.            ஸரளதேவதாரு ஸரள                     3.125      
9.            பதிமுகம் பத்மகம்                         3.125      
10.          தூணிகம் -                                 3.125      
11.          பச்சைக்கற்பூரம் கற்பூர                    3.125      
12.          கஸ்தூரி கஸ்தூரி                         3.125      
13.          கஸ்தூரி வெண்டைக்காய் விதை             3.125      
14.          ஸிஹ்லகமரத்தின் பிசின் – (Liquid Storax)                      3.125      
15.          குங்குமப்பூ குங்குமகேஸர                 3.125      
16.          ஜாதிக்காய் ஜாதிபல                       3.125      
17.          ஜாதிபத்திரி ஜாதீபத்ர                 3.125      
18.          இலவங்கம் லவங்க                       3.125      
19.          சிற்றேலம் ஏலா                           3.125      
20.          பேரேலம் ப்ருஹத் ஏலா                   3.125      
21.          தக்கோலம் தக்கோல                 3.125      
22.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             3.125      
23.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி              3.125      
24.          சிறுநாகப்பூ நாககேஸர                     3.125      
25.          குருவேர் ஹ்ரிவேர                        3.125      
26.          விளாமிச்சவேர் உசீர                 3.125      
27.          ஜாதிமல்லி ஜாதீ                          3.125      
28.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             3.125      
29.          சடாமஞ்சில் ஜடாமாம்ஸீ                  3.125      
30.          பச்சைக்கற்பூரம் கற்பூர                     3.125      
31.          உஷ்ணா (கல்பாசி) ஸைலேய              3.125      
32.          கோரைக்கிழங்கு முஸ்தா                  3.125      
33.          அரேணுகம் ஹரேணுக                     3.125      
34.          ஞாழல்பூ ப்ரியாங்கு                       3.125      
35.          கந்தபெரோஜா சரளநிர்யாஸ                3.125      
36.          சுத்தி செய்த குக்குலு குக்குலு (சுத்தி)       3.125      
37.          கொம்பரக்கு லாக்ஷா                 3.125      
38.          நகம் நக                            3.125      
39.          வெள்ளைக் குங்கிலியம் ஸர்ஜரச           3.125      
40.          காட்டாத்திப்பூ தாதகீ                 3.125      
41.          கஸ்தூரி மஞ்சள் வன ஹரீத்ரா            3.125      
42.          மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                3.125      
43.          கிரந்திதகரம் தகர                          3.125      
44.          தேன்மெழுகு மதூச்சிஷ்ட                  3.125      

இவைகளைப் பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ நீங்கலாகக் கல்கமாக அறைக்க வேண்டியவைகளை அரைத்தும், கரைக்க வேண்டியவைகளைக் கரைத்தும் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். ஆறிய பின்னர் கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ இவைகளைக் கல்வத்திலிட்டரைத்துச் சேர்க்கவும்

குறிப்பு: 
    
இதை மிகுந்த வாசனை உள்ளதாகச் செய்ய வேறு ஓர் முறை கையாளப்படுகின்றது.

               
சரக்குகளைப் போதுமான அளவு தண்ணீரில் ஒன்று இரண்டாகப் பொடித்துப் போட்டு எண்ணெய்யையும் ஊற்றிக் கலந்து கலத்தின் வாயைப் பொருத்தமான மூடியால் மூடிச் சீலை மண் பூசி அடுப்பிலேற்றி தினமும் ஆவிவரும் அளவு சூடுசெய்து எரிப்பை நிறுத்தவும். இவ்விதம் 15 முதல் 20 நாட்கள் சூடுசெய்து பின்னர் எண்ணெய்யைக் கலங்காது மேலாக எடுத்து ஜாடியிலிட்டுச் சில நாட்கள் வெய்யிலில் வைத்துப் பத்திரப்படுத்தவும்.

              
  நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் சேர்த்தும் தயார் செய்யலாம்.
.
பயன்படுத்தும் முறை: 
       
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

ஆண்மைக்குறைவு, நபும்ஸகத் தன்மை, மலட்டுத்தன்மை, அரிப்பு, துர்நாற்றம், க்ஷயம், அதிகமாக வியர்த்தல்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த தைலம் உடல் சூட்டை முற்றிலுமாக சரிசெய்யும்
  2. ஆண்மை வளர்க்கும்
  3. தாதுக்களுக்கு புஷ்டி தரும்
  4. வியர்வை நாற்றம் அழிக்கும்
  5. தினமும் தேய்க்கலாம்

Post Comment

Pages (31)123456 Next