நமது தளம் மக்களுக்கு பலன் தருகிறதா ?என்ற குழப்பம் என்னுள் சில நாட்களாக கீழ் கண்ட எண்ணங்களை கொடுக்கிறது ..
மூலிகை கதைகள் எழுதுகிற –மூட அறிவை வளர்க்கும்
சில தளங்கள் எனது தளத்தின் கட்டுரையை காப்பி அடிப்பது –எது உண்மை எது போலி என்று
தெரியாமல் போகிறது ...
2.
தீடீர் போலி டாக்டர்களை எனது தளம் உருவாக்குகிறதோ
என்ற பயமும் எண்ணமும் அதிகம் இருக்கிறது ..
3.
சில மருந்துகளை மற்றும் தெரிந்து கொண்டு டாக்டர்
என்று தனது பெயருக்கு முன் போட்டு கொண்டு ..கண் மூடித்தனமாக போலி வாக்குகளை
மக்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கும் கூட்டம் -மருத்துவ கொள்ளை அடிக்கும் கூட்டம்
..உதாரணத்திற்க்கு தைராய்ட் நோய்க்கு காஞ்சனார குக்குலு என்ற மாத்திரை என்று
மக்களுக்கு பயன் படும் என்று எழுதினால் –டீவியில் அடிக்கடி பேசும் /தினகரன்
பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கும் ஒரு .......... சித்த மருத்துவ நிலையம் என்ற
வெறும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காஞ்சனார குக்குலு மாத்திரையை ஒரு மாதத்திற்கு
ஆறாயிரம் முதல் இருபதாயிரம் வரை கொள்ளை
அடிக்கிறது ..சீதாபழம இலை சாறு நன்று என்று சொன்னால் அதை கெடாமல் காக்கும் ஒரு எசன்ஸை
கலந்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடவும் சொல்லி அதற்க்கு பல ஆயிரங்களை கொள்ளை
அடிக்கிறது ..
4.
பகிர்வதால் பலன் உண்டு –மக்களுக்கு ஆயுர்வேத
சித்தம் யுனானி அக்குபஞ்சர் சேர வேண்டும் என்ற நல்ல நோக்கில் எழுதும் போது அதில்
பல பாதகங்கள் பல உள்ளது என்கிறது என்னுடன் மருத்தவம் படித்த நண்பர்கள் ..அது
உண்மையோ என்று தோணுகிறது..
5.
லாட்ஜ் வைத்தியர்களும் ,டிவியில் அரை மணி நேரத்திற்க்கு பேச குறைந்தது
ஐம்பதாயிரம் கொடுக்கும் பெரும்பான்மையான டீவி வைத்தியர்களும் ...கொள்ளையடிக்கும் கூட்டமும்
நேரடியாகவும் மறைமுகமாகமும் கொஞ்ச நஞ்சம் நமது பாரம்பரிய வைத்திய நம்பிக்கையை சிதைக்கிறார்கள்
..
6.
அந்த அடிக்ஷன் ,இந்த அடிஷன் என்று அரை மணி நேரம்
டிவியில் விளம்பரம் பண்ணும் அடிக்ஷன் என்னும் குடி மறக்க விற்கும் மருந்துகளை
மூன்று தடவை (ஒவ்வொரு தடவையும் ரூபாய் மூவாயிரத்து நூற்றைம்பது கொடுத்து )மொத்தம் கிட்டதட்ட
பத்தாயிரத்திற்கு மேல் செலவு செய்தும் குடிப்பவர் திருந்தவில்லை என்று எங்களிடம்
வருபர்களிடம் இதை ஏன் அவர்களிடம் குடிப்பவர் திருந்தவில்லையே என்று கேட்கவில்லையே
என்றால் ..திரும்ப திரும்ப வாங்கி கொடுங்கள் என்கிறார்கள் என்கின்றனர் ..நமது
தளத்தின் வலது மூலையில் ஒரு விளம்பரம் போட்டால் அவர்க்கு இந்த தளத்தின் மூலம்
மொத்தம் ஐந்து மாதத்தில் இரண்டு விசாரணை கூட இல்லை என்கிறார் ..
7.
இலவச ஆலோசனை –போனில் மற்றும் இ மெயிலில் என்றால்
கேட்கப்படும் கேள்விகளில் பெரும்பான்மையானவை ஆண்மை குறைவு பற்றியே இருக்கிறது ...மனம்
சோர்வடைகிறது ...மற்ற கேள்விகளை கேட்க
மக்கள் மாட்டார்களோ என்று மனம் ஏங்குகிறது ...
8.
தளத்திற்கு பின்னூட்டம் இடப்படுவது கட்டுரை
படிப்பவர்களுக்கு தோணாதோ ?