ஞாயிறு, ஜூலை 17, 2011

பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்


பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
                                                                                                                                (பைஷஜ்யரத்னாவளி - உன்மாதாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தும்மட்டி – இந்த்ரவாருணீ                              12.500 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       12.500       “
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்           12.500       “
4.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                12.500       “
5.            அரேணுகம் – அரேணுக                           12.500       “
6.            தேவதாரு – தேவதாரு                            12.500       “
7.            மூசாம்பரம் – ஏலாவாலுக                        12.500       “
8.            மூவிலை – சாலிபர்ணீ                            12.500       “
9.            கிரந்தி தகரம் – தகர                              12.500       “
10.          மஞ்சள் – ஹரீத்ரா                               12.500       “
11.          மரமஞ்சள் – தாருஹரீத்ரா                        12.500       “
12.          நன்னாரி – ஸாரிவா                              12.500       “

13.          நன்னாரி (கருப்பு) – அனந்தமூல (க்ருஷ்ணஸாரிவா)12.500       “
14.          ஞாழல் பூ – ப்ரியாங்கு                            12.500       “
15.          நீல ஆம்பல் கிழங்கு – நீலோத்பலகந்த            12.500       “
16.          ஏலக்காய் – ஏலா                                 12.500       “
17.          மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                           12.500       “
18.          நாகதந்தி வேர் – தந்திமூல                             12.500       “
19.          மாதுளை ஓடு – தாடிமபலத்வக்                         12.500       “
20.          சிறுநாகப்பூ – நாககேஸர                               12.500      “
21.          தாளீசபத்திரி – தாளீசபத்ர                               12.500       “
22.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ                            12.500       “
23.          முல்லைப்பூ – ஜாதிபுஷ்ப                               12.500       “
24.          வாயுவிடங்கம் – விடங்க                               12.500       “
25.          ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ                              12.500       “
26.          கோஷ்டம் – கோஷ்ட                             12.500       “
27.          ரத்த சந்தனம் – ரத்த சந்தன                            12.500       “
28.          பதிமுகம் – பத்மக                                     12.500       “
29.          பசுவின் நெய் – க்ருத                             800             “
30.          தண்ணீர் – ஜல                                   3.500 லிட்டர்

                 
செய்முறை:            
இவைகளைக் கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.

                 
அளவு:     
     
 5 முதல் 10 கிராம் வரை  ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

                 

தீரும் நோய்கள்: 




இருமல் (காஸ), இரத்த சோகை (பாண்டு), இளைப்பு (க்ஷய), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), மலேரியா போன்ற நச்சுக்காய்ச்சல் (விஷம ஜ்வர), கால்கை வலி (எ) காக்கை வலி (அபஸ்மார), ஒருவித பைத்திய நிலை (பூதோன்மாத), ஒருவித முழந்தை நோய் (பாலக்ரஹ), நச்சுக்கோளாறு (விஷவிகார), அக்காலத்திய செயற்கை நச்சு (கரவிஷ), குதிகால் வாதம் (வாத ரக்த), அக்கி (விசர்ப ), மூத்திரக் கோளாறுகள் (மூத்ர ரோக), பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை (வந்த்யத்வ), கருப்பை / பிறப்புறுப்புக் கோளாறுகள் (யோனி ரோக) போன்ற பெண்ணோய்கள் (ஸ்திரீ ரோக).

                அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு இதனை அசுவகந்தி லேகியம், பனஞ் சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பையையும் பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத்தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு அமைதியைத் தருகிறது.    

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த கல்யாணக கிருதம் என்ற நெய் மருந்தை தொடர்ந்து மூன்று முதல் ஆறுமாதம் -காலை மாலை வெறும் வயிற்றில் குழந்தை இல்லாத பெண்கள் சாப்பிட்டு வர ..காரணம் எதுவானாலும் ஏக இறைவன் கிருபையால் அது நீங்கி மழலை செல்வம் பெருகும் எனபது திண்ணம்
  2. கை கால் வலிப்பு என்னும் அபஸ்மார நோய்க்கு இந்த மருந்தை தொடர்ந்து தர நல்ல பலன் கிடைக்கும்
  3. பெண்களின் நோய்கள் எதுவானாலும் இந்த மருந்து அற்புத தீர்வு தரும்
  4. மன நோய்க்கும் இந்த மருந்தை தந்து நல்ல பலன் கண்டதுண்டு

Post Comment

3 comments:

மாய உலகம் சொன்னது…

பயனுள்ள பதிவு....

sakthi சொன்னது…

வணக்கம் நண்பரே,
பெண்களுக்கு வர ப்ரசாதமான மருந்து .ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைவு மற்றும் உயிரணுக்கள் வீரியம் (number of active semens) கூட்ட மருந்து உள்ளதா ?
நட்புடன் ,
கோவை சக்தி

curesure Mohamad சொன்னது…

@sakthi
நன்றி நண்பரே ..
ஆண்களின் உயிர் அணுக்களை கூட்டும் மருந்துகளை பற்றி காலம் வாய்க்கும் போது சொல்கிறேனே ..
ஏற்கனவே பதிவில் சிலவற்றை குறிபிட்டுள்ளேன்

கருத்துரையிடுக