சனி, ஜனவரி 07, 2012

அல்சர் -வயிறு வலிக்கு -எளிமையான சிறந்த மருந்து -நாரிகேள லவணம் -Narikela lavanam


அல்சர் -வயிறு வலிக்கு -எளிமையான சிறந்த மருந்து -நாரிகேள லவணம் -Narikela lavanam
 (ref-பைஷஜ்ய ரத்னாவளி - சூலரோகாதிகாரம்)


 தேவையான மருந்துகள்:

1.       முற்றிய தேங்காய் நாரிகேள பல (ஸதோய)      ஒரு எண்ணிக்கை
2.        இந்துப்பு ஸைந்தவலவண                  போதுமான அளவு











செய்முறை:      

இந்துப்பை பொடித்துத் தேங்காயின் துளையிட்ட கண்ணின் வழியே உள் நிரப்பி மூடிச் சீலை மண் பூசிப் போதுமான வரட்டிகள் கொண்டு புடமிடவும். ஆறிய பின்னர் ஓடு நீக்கிப் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.



அளவும் அனுபானமும்:      

ஒரு கிராம் வரை மோர், நீர் அல்லது திப்பிலி சூரணத்துடன்.


தீரும் நோய்கள்: 

 சூலை (சூல), வயிற்றுவலி (குக்ஷி சூல (அ) உதர சூல), வயிற்றுப்புண்கள் (அ) குடற் புண்கள் (பரிணாமசூல), வயிற்றில் புளிப்புநீர் (அமிலம்) அதிகரித்தல் (அம்லபித்த).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. வயிறு வலி எந்த காரணத்தில் வந்தாலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. மிக மிக எளிதாக செய்யக்கூடிய மருந்து
  3. வயிற்று புண்ணுக்கு -இந்து காந்த கிருதம் என்ற நெய் மருந்தோடு சாப்பிட நல்ல குணம் தெரியும்
  4. அல்களை என்ற காரப்பொருள்-நமது வயிற்றில் சுரக்க கூடிய  அதிகமான அமிலத்தை சமன் செய்யும் குணம் உள்ளது ..
  5. பரிணாம சூலை எனப்படும் சாப்பிட்ட பின் ஏற்படும் வயிறு வலிக்கு இந்த மருந்தை விட நல்ல மருந்து இல்லை எனலாம் ..
  6. ஜெளுசுளை சாப்பிட்டு -வயிறு பிரச்சனைக்கு தற்காலிக தீர்வை தேடும் அல்சர் நோயாளிகளுக்கு -காமதுக ரசம் என்ற அற்புத மருந்துடன் இந்த மருந்தை தக்க துணை மருந்தோடு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் 
  7. புளிச்ச ஏப்பம் விடும் நோயாளிக்கு இந்த மருந்து நல்ல மருந்து

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

அருமை நண்பரே ,நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக