ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam
தேவையான மருந்துகள்:
1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீபலத்வக்        - 10 கிராம்
2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     - 10       “
3.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                      - 10       “
4.            மாசிக்காய் – மாசிபல                                  - 15       “
5.            ஜாதிக்காய் – ஜாதீபல                                 - 15       “
6.            சுக்கு – சுந்தீ                                           - 10       “
7.            மிளகு – மரீச்ச                                        - 10       “
8.            திப்பிலி – பிப்பலீ                                     - 10       “
9.            ஏலக்காய் – ஏலா                                   - 10       “
10.          இலவங்கம் – லவங்கம்                             - 10       “
11.          இலவங்கப்பட்டை – லவங்கத்வக்                  - 10       “
12.          கற்பூரம் – கற்பூர                                 - 10       “
13.          நெற்பதர்ச்சாம்பல் – துஸபஸ்ம                    - 120    “
14.          நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்                                         -100  "
செய்முறை:   
  சரக்குகளைத் தனித்தனியே பொடித்துச் சலித்துப் பின்னர் கற்பூரத்தைப் பொடித்துக் கலக்கவும். பிறகு சலித்த நெற்பதர்ச்சாம்பலை +நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்   சேர்த்து பத்திரப்படுத்தவும்.
பயன்படுத்தும் விதம்: 
 பற்பொடியாக உபயோகிக்கப்படுகிறது.  இந்துப்பை இதனுடன் கலந்து பல் துலக்குவதுண்டு.
தீரும் நோய்கள்: 
 பல்லில் சீழ்வடிதல் (பூதிதந்த), வாய்துர்நாற்றம் (முகதௌர்கந்த்ய), பல்கூச்சம் (தந்தஹர்ஷ), பல்லாட்டம் (தந்தசலன) போன்ற பல்நோய்கள் (தந்தரோக) மற்றும் ஈறுசார்ந்த நோய்கள் (தந்தர்வேஷ்தரோக). இது பற்சிதைவைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. வாய்க்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.
குறிப்பு -
 நாயுருவி -வேரை கடித்து வாயில் மென்று -கல்லையும் ,கண்ணாடியையும்  ,கடிக்க முடியாத பொருட்களையும் கடிக்கலாம் .இந்த நாயுருவி வேரை வைத்து  சிலர் கருங்கல்லை கடித்து -மேஜிக் பண்ணிக்காட்டுவதுண்டு -
காலம் வாய்க்குமானால் -மூலிகைகளை வைத்து மேஜிக் செய்வது எப்படி என்பது பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன் (இப்போதில்லை )
காலம் வாய்க்குமானால் -மூலிகைகளை வைத்து மேஜிக் செய்வது எப்படி என்பது பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன் (இப்போதில்லை )




 
 
 
 


 
 
 
 
 
 
 



4 comments:
மேஜிக் பற்றிய பதிவுகள் சுவாரசியமாக இருக்கும்.
நன்றிசார்.
பொதுவாகவே பற்களைப் பற்றிய விழிப்புணர்வும்,
அக்கறையும் ந்ம்மிடம் குறைவாகவே உள்ளது.
1967-ல் ஆஸ்திரேலியாவில் கூடிய மருத்துவர் மாநாட்டில் brush போன்ற பற்துலக்கிகளால் ஈறுகள் சேதமாக்கப்பட்டு சீக்கிரம் பற்கள் விழுந்துவிடுவதாகவும் அதைப் பயன்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது எத்தனை விளம்பரங்கள்.....!!!!!
பற்களை விட ஈறுகளையே காப்பாற்ற வேண்டும் என்பதால் நம் முன்னோர்களின் இம்மருந்தின் செயல் பாடுகள் அனைவருக்கும் நன்மை அளிப்பதாக..!!!
வாழ்த்துக்கள்......
தர்சன்
கோண்டாவில்,மேற்கு,கோண்டாவில்.யாழ்ப்பாணம் .இலங்கை.
please அண்ணா மேஜிக் எப்படி செய்வது என்று சொல்லுங்கோ please
தர்சன்
கோண்டாவில்,மேற்கு,கோண்டாவில்.யாழ்ப்பாணம் .இலங்கை.
please அண்ணா மேஜிக் எப்படி செய்வது என்று சொல்லுங்கோ please
கருத்துரையிடுக