ஞாயிறு, டிசம்பர் 01, 2013

ஹோமியோ மருந்தில் மூலபொருட்கள்

மருந்துக்குரிய மூலப் பொருட்கள்:

1.      தாவரம் :- இலை, தழை, வேர், தொலி, காய், பழம், பூ, பட்டை, சொத்தை, அழுகுதல் இவைகளில் பச்சையிலும், உலர்தலிலும், எடுத்து மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. (வெஜிடபிள் குரூப்)

2.      உலோகங்கள் (தாதுக்கள்) :- தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, மண், சுண்ணாம்பு, ஆறு மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் படிகங்கள் இவைகளில் இருந்து எடுக்கப்படும். (மெட்டல் குரூப்)

3.      அனிமல் குரூப் :- பிராணிகள், எலும்பு, முள், சதை, கொழுப்பு, பசை, பித்தம், நிரை, பால், இரத்தம், கழிவுகள், நீர், சாணம் இவைகளில் எடுக்கப்படும். (அனிமல் குரூப்)

4.      நோஸோடு :- ஆசிட், ஆவி, கிருமி, புழு, பூச்சிகள், சீழ், ஜலம், விஷவாயு, அழுகல், பாம்புகள், தேள், தேனீ, கடந்தை, கொடுக்குகள், இவைகளிலிருந்தும் எடுக்கப்பட்டு திரவமாகவும், பொடியாகவும், வில்லையாகவும் தயாரிக்கப்படுகிறது. அரைத்தல் மூலமும், கரைத்தல், குலுக்கல் மூலமாகவும், மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


நோஸோடு ரெமடிகள்:- பாஸிலி, கோச்சஸ் அவி,டியூபர்குலி மார்பலினம், இன்புளூயன்ஸினம், வரியோலினம், டைபாயிடினம், எக்ஸ்ரே கதிர்கள், ஒளிகள், ஸோல், ஸன்ரே (சூரிய கதிர்) லூனார், மூன் ரே (சந்திர கதிர்கள்) ரேடியம் ப்ரோமேடம், யுரேனியம் நைட்ரேட், ஆசிட் இன்னும் பல.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக