வியாழன், டிசம்பர் 05, 2013

தீடீர் நோய்களும் -நாள்பட்ட நோய்களும் -சோரா -சிபிலிஸ் -சைக்கோசிஸ்


நோய்களின் வகைகள் இரண்டு :-

1.    உடனுடன் தோன்றி மறைவது (Acute Disease) :-
            சுரம், தலைவலி, பல்வலி, கண்வலி, காது வலி, வயிற்று வலி, இருமல், ஜலதோஷம், சொரி, வாய்வு, வயிற்றுப் போக்கு, சிறு நீர் கடுப்பு இன்னும் பல.'

2.    நீடித்த நோய் (கிரானிக் டிசிஸ்) (Chronic Disease) :-
            இது கெட்ட எண்ணங்களினாலும், கெட்ட சேர்க்கையாலுமே உண்டாகிறது. இந்நோய் ஆபத்தை உண்டாக்கும் தன்மை உடையது. சீக்கிரத்தில் குணமாகாது. மருந்து சாப்பிட்டால் மறைவது போல் தோன்றி, மீண்டும் திருப்பித் தாக்கும் தன்மை உடையது. இந்நோய் தோன்றினால் தக்க சிகிச்சை செய்யத் தவறினால், அணு, அணுவாக சித்திரவதை செய்யும் தன்மையுடையது. (சுறுங்கக் கூறுமிடத்து உயிரோடு தான் நிற்கும்) இந்த நீடித்த நோய்களை Dr. ஹானிமேன் அவர்கள் மூன்று பிரிவாகப் பிரித்து இருக்கிறார்கள். (இந்த மூன்று வியாதிகளையும் மூன்று சரீரத் தோற்றம் என்று கூறலாம்). இந்த மூன்று நோய்களில் ஒரு நோயாகிலும் எந்த ஒரு மனிதனையும் பற்றியிருக்கக் கூடும் என்பது உறுதியாகும். இந்த மூன்றும் ஒரு மனிதனைப் பற்றவில்லையென்றால் அவனுக்கு நோய் இல்லை என்றே கூறலாம்.

1.    முதல் பிரிவு ஸோரா :-
            இறைவனால் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தையும் இறை நேசச் செல்வர்கள், மருத்துவ ஞானிகள் இவர்களால் அனுபவப் பூர்வமாக வகுக்கப்பட்ட சட்டத்தையும் எவன் மீறுகிறானோ அவனைத்தேடி சோரா என்ற நோய் ஓடி வருகின்றது. மனிதன் இறை சட்டத்தை மீறி தன் மனம் போல் பாவச் செயல்களில் ஈடுபட்ட விளைவுக்கு சோராதான் சாட்சியாகும்.
            சாதாரண சொரியும், சிரங்குமே சோராவின் தோற்றங்களாகும். இதன் உண்மைத் தோற்றங்கள் ஒளிந்து மறைந்து கொண்டு திருப்பித் தாக்கும் தன்மை கொண்டது. மறைந்த சில வேளைகளில் வேறு ரூபத்தில் தோன்றும் பல்வேறு கொடிய துன்பங்களையும் தரக்கூடியது சோரா.

            சொரி, சிரங்குகளில்தான் சோரா தோற்றமளிக்கும். இது மேல் பூச்சு மருந்து பூசுவதால், ஊசி மருந்துகளால், உள்ளே அமுக்கப்படுகிறதே தவிர முற்றிலும் ஒழிந்து விடுவதில்லை. உள்ளே நுழைந்து அமுக்கப்பட்ட அந்த விஷத்தன்மை மனிதனின் உள்ளுறுப்புகளில் நுழைந்து பரவ ஆரம்பிக்கும் என்பது திண்ணம்.சோராவுக்கு ஆளான உடல் உள்ள மனிதன் உடல் முழுவதும் மாவுகளைப் பூசி உயர்ந்த சட்டை அணிந்து மணம் பூசித் திரிந்தாலும் அவனது வாழ்வு மரணப் பாதைக்கே செல்கின்றது.

            நமது ஹோமியோபதி மருந்துகளால் பூரண குணம் பெறலாம்.


2.    இரண்டாம் பிரிவு சிபிலஸ் :-
            சோராவின் மூல காரணங்களால் பாவத்தின் பிறப்பிடம்தான் சிபிலிஸ் அல்லது மேக்கிரந்தி என்ற கொடூரமான நோய். இந்த சிபிலிஸ் நோய், பெண்ணைச் சேருகிற காலத்தில் பற்றி விடுகின்றது. இந்த நோய் உள்ள எந்தப் பெண்ணைக் கூடினாலும் அம்மனிதன் திட சரீரமுடையவனாக இருந்தாலும் உடனே அது பற்றிவிடும். மேலும் அம்மாதிரியே அம்மனிதனைத் தொற்றிய அந்நோய் அவனுடன் சேரும் திட சரீரமுள்ள பெண்களையும் பற்றிவிடக் கூடும். இதன் காரணங்களால் ஒரே சிபிலிஸ் உள்ள நபரால் 100க்கும் அதிகமானவர்களை பற்றுவதற்கும் காரணமாகின்றது. சிபிலிஸ் உள்ள பெண்களைக் கூடினாலும் இதே ஆபத்துதான். இந்த இருவரை மட்டும் இந்த சிபிலிஸ் விட்டு வைக்காது. கொடுமையான ஒரு வேலையை இந்த சிபிலிஸ் செய்து விடுகிறது.

அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் பற்றி விடுகிறது. இந்த அடிப்படைக் காரணங்கள் அனைத்தும் சேராதான்.

சைக்கோஸிஸ்க்குப் பொருந்தும் சிபிலிஸ் ஒரு ஆணையோ, பெண்ணையோ பீடித்தால், அவர்களின் குறிகளில் முதலில் இரணம், வலி தோன்றுகிறது. இந்த வலியால் சுமார் 12 நாள் முதல் 60 நாட்களுக்குள் சிபிலிஸ் கிருமிகள் உடலை ஆக்ரமித்துக் கொள்கின்றன.


சாதாரணமாக இந்த வலியை யாவரும் ஆற்றி விடுகிறார்கள். ஆனால் ஆற்றப்பட்டதால் அந்நோய் மறைந்து விட்டதா? இல்லவே இல்லை. அவ்வளவு சுலபமாக மறையச் செய்யாது. இந்த விஷச் சத்துக்கள் பரம்பரை பரம்பரையாகப் பர்றி குல நாசத்தை உண்டாக்கி விடுகின்றது. இந்த சத்துருவிற்குப் பக்கத்தில் சைக்கோஸிஸை காணலாம்.

இனி மருந்துகளை பார்ப்போமா ?

ஹோமியோ மருந்துகளை தமிழில் எழுதும் போது -அதை படிக்கும் போதும் தக்க கவனம் தேவை ...Post Comment

0 comments:

கருத்துரையிடுக