புதன், டிசம்பர் 04, 2013

மருந்தின் வீர்யத்தை எப்படி தீர்மானிப்பது ?

ஒரு நோயாளிக்கு காணும் நோயில் கீழ்வரும் மூன்று குறிகளும் சில சமயம் தென்படலாம்.
1.    பொதுக்குறிகள்
2.    விசேஷக்குறிகள்
3.    மாறுபடும் குறிகள்
வியாதிக்குறிகளை மனதில் கொண்டு மருந்து தொடங்குவதே நல்லதாகும்.
                       
                                                                                                                                    
           
            மருந்துகளைக் கலந்து கொடுக்காதீர்கள். ஹோமியோபதியில் பல மருந்துகளை ஒன்றாகக் கலந்து கொடுக்கும் பழக்கம் கிடையாது. ஒரே மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதுதான் விவேகமான செயலாகும். ஆனால் எதிர்பாராத விதத்தில் இரண்டு அல்லது மூன்று மருந்துகளைக் கொடுக்க வேண்டிய கட்டங்களில், ஒரு மருந்துக்குப் பின் மறு மருந்து கொடுக்க வேண்டியது வந்தால் 10 – 15 நிமிஷம் அவகாசம் தருவது மிக்க நல்லது ஆகும்.
            மருந்து திரவமானால், பெரியோர்களுக்கு 2 – 3 சொட்டு, (சிறியோர்களுக்கு 1 – 2 சொட்டு 1 கிளாஸ் வென்னீர் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
            பெரிய உருண்டை பெரியவர்களுக்கு 2 – 3, சிறியவர்களுக்கு 2 உருண்டைகள்.
            சிறிய உருண்டைகள் பெரியவர்களுக்கு 5 – 7 வரை. சிறியவர்களுக்கு 5 உருண்டைகள். மாவாக இருந்தால் ஒரு குண்டுமணி அளவு. மருந்துகளை சுவைத்துச் சாப்பிடுவது நல்லது. உணவுக்கு முன் சாப்பிடுவது மிக்க நலமாகும்.

            ஹோமியோபதியில் அதிகம் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள்தான், அதிக சக்தி பெற்ற வீரியமுள்ள மருந்துகளை உபயோகிக்கத் தகுதி பெற்றவராகும்.
            நாம் அனைவரும் 30 குறைந்த வீரியத்தில் கொடுப்பதே சால சிறந்தது. நோயின் எதிரே அதிக மருந்துகள் குறிக்கப்பட்டிருந்தாலும் குறிகளுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட வேண்டும். அதிக வீரியமுள்ள மருந்துகள் கொடுப்பதை தவிர்க்கப்பட வேண்டும். நோய் குறையவில்லையானால் அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த ஓமியோபதி டாக்டரை பார்ப்பது நல்லது.

            உடல் நலத்தைப் பாதுகாக்க, தூய்மையான எண்ணங்களும், இறை பக்தியும், உளத் தூய்மையும், உடல் உழைப்புமேயாகும். வயிறு புடைக்க உண்ணுவதும், குடிப்பதும், மது அருந்துவதும், கொழுப்பான உணவுகளைச் சாப்பிடுவதும், அதிக உறக்கமும், கண்ணாலும், கற்பனையினாலும், தீய எண்ணங்களினாலும், கெட்ட செய்கைகளினாலும், மனிதன் பாவத்திற்கும், நோய்க்கும் ஆளாகின்றான்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக