ஞாயிறு, டிசம்பர் 01, 2013

ஹோமியோ மருத்துவத்தில் ஈடுபாடு

நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என கருதப்படும் ஆயுர்வேத வைத்தியர் ஆச்சார்யர் சுஸ்ருதர் கூற்றுபடி ...
ஏகம் சாஸ்திரம் ந ஹி வித்யமானாத்..தஸ்மாத்
பஹு சாஸ்திரம் ...கிஞ்சித் சிகித்சகஹா ...அதாவது ஒரு சாஸ்திரம் மட்டும் வைத்தியத்திற்கு பத்தாது ..அது எந்த துறையாக இருந்தாலும் கூட ..எனவே பல சிகிச்சை முறைகளை படித்து கற்றால் மட்டுமே நல்ல சிகிட்சையாளனாக முடியும் என்பது அவரது கருத்து ..இதில் உடன் பட்டு ..தேடி கொண்டிருக்கும் போது தான் ஹோமியோவின் அற்புதங்கள் தெரிந்தது ...ஹோமியோவின் வேர் உயிர் என்று சொல்லப்படும் ஆர்கனான் ,வைட்டல் போர்ஸ் என்னும் உயிர் சக்தி ..என்று எனது தேடல் தொடர்ந்தது ..ஹோமியோவின் ஒரு கரையில் கால் பதித்த போது தான் எனக்கு இறைவன் கொடுத்த வரமாக எனது மனைவியே ஹோமியோ படித்த மருத்துவராக கிடைத்தாள்..வாழ்க்கை பயணத்தில் துணை ஆனவள் மருத்துவ துறையிலும் துணையாக வாய்த்தாள்..ஹோமியோவின்  ரகசியங்கள் கற்க மேலும் வாய்ப்பு பெருகியது ...

ஆயுர்வேத மருத்துவ துறை பற்றிய கட்டுரைகளை எழுதும் போதே ஹோமியோ கட்டுரைகள் எழுத எனக்கு தீவிர ஆர்வம் அதிகமானது ...ஆயுர்வேத மருத்துவ கட்டுரைகளை சற்று நிறுத்தி எனது மனைவி துணையுடன் ஹோமியோ கட்டுரைகளை எழுத உள்ளேன் ..

ஹோமியோ துறை பொறுத்தவரை நான் ஒரு ஹோமியோ கற்கிற மாணவன் வர விருக்கும் ஹோமியோ கட்டுரைகளை எனது அன்பு மனைவி ஜவாஹிரா பானு BHMS க்கு சமர்பிக்கிறேன் ..அவர்கள் திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றவள்  

Post Comment

2 comments:

கருத்துரையிடுக