திங்கள், மே 15, 2017

கருத்தரிப்பு மையம் என்கிற பெரிய வியாபாரம் .

கருத்தரிப்பு மையம் என்கிற பெரிய வியாபாரம் .

டாக்டர்.அ.முகமது சலீம்( cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.வர்தினி .,BHMS.,


இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள், அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”. இது அழகான பாடல் வரிகள். ஆனால், நாம் இறைவனிடம் பொறுமையாக கேட்பதுமில்லை, காத்திருப்பதுமில்லை. சில மருத்துவர்கள் மனிதாபிமான சிறிதும் இல்லாமல் சேவை மனப்பான்மை சிறிதும் இல்லாமல் மருத்துவ கடமையை செய்கிறோம் என்று எண்ணுவதில்லை .அப்படிப்பட்ட சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு தான் இந்த மருத்துவ துறையில் ஈடுபடுகிறார்கள். 

பணம் பறிக்கும் நோக்கத்தோடு நோயாளிகளை பார்க்கும் இவர்கள் என்ன தான் மேற்ப்பட்ட மேல் படிப்பு படித்து கோடிகணக்கில் மருத்துவ உபகரணங்கள் வைத்து கருத்தரிப்பு மையங்கள் வைத்திருந்தாலும் அவர்களிடம் வியாபார யுக்திகளே நம்மை பயமுறுத்துகிறது .கருத்தரிப்பு மையங்களா அல்லது பணம் பிடுங்கும் வியாபாரங்களா என்று தெரியாத அளவுக்கு புற்றீசல்களாய் பரவி வரும் நிலைமை நினைத்தால் பயமாய் இருக்கறது .


இவர்களிடம் ஏமாறுவது குழந்தை வரம் தேடி அலையும் பரித்தாபதிற்குரிய எக்கமுள்ள தம்பதிகளே!

என்ன தான் வீட்டில் அனைத்து செல்வங்களும் இருந்தாலும், குழந்தை  செல்வம் இல்லையென்றால் அது எப்பேற்பட்ட வீடாக இருந்தாலும் அது வீடாகாது.ஒரு பெண், தனக்கு திருமணமாகி முன்று மாதத்திக்குள் கரு  தங்கி விட வேண்டும்  என்று நினைக்கிறாள், அப்படி இல்லை என்றால் இந்த சமுகம் அவளை மலடிஎன்று பட்டம் சூட்டி ஒதுக்கி விடுகிறது உற்றார், உறவினர், என யாரும் அவளை மதிப்பதில்லை.சிறிய குறை உள்ளவர்களையும் மருத்துவமனையை நோக்கி ஓட சொல்கிறது இந்த சமூகம் .

ஒரு ஆண், திருமணம் ஆகி, 1 வருடத்துக்குள்  தந்தை ஆக வேண்டும் என்று நினைக்கிறான். அப்படி இல்லை என்றால்  அவனுக்கு  எதாவது  பிரச்சனை  என்று மற்றவர்கள் குறை கூறுவார்கள் என கருதுகிறார்கள்.

இதிலிருந்து தப்பிக்க தான் Infertility Center - க்கு செல்கிறார்கள் பெரும்பாலான தம்பதிகள். அவர்கள் அங்கே செல்வதான் மூலம் தனக்கு உடனே கரு உற்பத்தி ஆகிவிடும் என்ற நம்பிக்கை தான். இதற்கு அவர்கள்  எவ்வளவு  பணம் கேட்டாலும் சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கொடுக்க தயாராய் உள்ளார்கள் .

 “IVF” முறை மூலம் துபாயில் 63 வயது ஆன ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்து எடுத்தாள் என்று பேப்பரில்  செய்தி வெளிவிட்டு –எந்த வயதிலும் நாம் குழந்தை பெற முடியும் என்கிற மன நிலையை  மக்கள் மனதில் விதைக்கிறது இந்த கரு தரிப்பு மையங்கள்.ஆனால் அங்கே IUI என்ற எளிமையான சிகிச்சைக்கு பரிந்துரைக்காமல் உடனடியாக இந்த டெஸ்ட் ட்யூப் பேப ,IVF போன்ற பெரிய பெரிய சிகிச்சைக்கு முப்பது வயது ஆக பெண்ணுக்கு பரிந்துரைத்து காசு பார்க்கிறது இந்த வணிக மையங்கள் ..

“IVF” என்பது ஒரு பெரிய வணிகமாகும். அதை நம்பி தன் வாழ்க்கையை இழந்தவர்களும்  பாதிக்கப்பட்டவர்களும் அதிகம்.

விளம்பரம் மற்றும் குறுஞ்செய்திகளில் வரும் தகவல்கள், மின்னஞ்சல் மூலம் போன்ற எல்ல இடங்களிலும் கருவுருதல்சம்பந்தமான சேவைகள் மற்றும் க்ளினிக்குகளுக்கான விளம்பரங்கள் பல உள்ளன. அதை நம்பி சிலர் வருட கணக்கில் மருந்துகளை பயன் படுத்துகிறார்கள் எனினும் அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகிறது.

இந்த நவீன காலக்கட்டத்தில் நமது உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. இதனால் நமது உடல் தன்மை முற்றிலும் மாறிவிட்டது.

எத்தனை பேருக்கு தெரியும், உணவில் மாற்றம் செய்தாலே, சிறிய கவுன்சிலிங் ஆலோசனைகலிளே பல பிரச்சனைகளும் தீர்ந்து கரு உற்பத்தி ஆகுமென்று.

ஆனால், இது தெரிந்தாலும் நாம் அதை கடைபிடிக்காமல் ,இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை சந்திக்காமல் ,கவுன்சலிங் பெறாமல் நம்மை ஏமாற்றும் மருத்திவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகிறோம்.

எவ்வித பிரச்சனைகளும் இல்லையென்றாலும் ஏகப்பட்ட Scan-களும், இன்னும் பல Harmone Test - களும் எடுக்க பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள்.  இதன் நோக்கம் நமக்கு இருக்கும் நோய்களை கண்டறிய அல்ல, மாறாக பணம் சம்பாதிக்கவே.

உண்மையான மருத்துவர்கள், நோயின் அறிகுறிகளை கேட்டுக்கொண்டு அதன் தன்மைகேற்ப மருத்துகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால், நாம் அந்த மருந்துகளையும் நம்புவதில்லை, அந்த மருத்துவர்களையும் நம்புவதில்லை காரணம் அந்த மருத்துவர்கள் நமக்கு ULTRA SOUND (Scan) எடுக்க சொல்லவில்லை, Blood Test பார்க்க சொல்லவில்லை என்று பற்பல. அப்படிப்பட்டட Test - கள் தேவை ஏற்படும் போது அம்மருத்துவர்களே அதை எடுக்க சொல்ல போகிறார்கள். ஆனால் அதுவரை நாம் பொருமையாக இருப்பதில்லை.

எவர் ஒருவர் அதிகமாக Blood Test - களும் Harmone Test - களும் எடுக்க சொல்லுகிறார்களோ அவர்களை உண்மையான மருத்துவர்கள் என்று நம்பி ஏமாந்து விடுகிறோம்.

இந்த குழந்தையின்மை என்பது ஒரு தீராத நோயோ அல்லது குறையோ இல்லை.

இதை நாம் முறையான பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதா சித்தா ஹோமியோபதி யுனானி அக்குபஞ்சர் போன்ற AYUSH - ன் கூட்டமைப்போடு ஒருங்கிணைந்த சிகிச்சை மேற்கொள்ளும் போது குறைந்தபட்சம் 6 மாதங்களில் கரு தங்க வாய்ப்புள்ளது .

ஒரு வருட காலத்திற்கு பின்னும் நமது பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் பலன் இல்லை சிறந்த ஆயுஷ் மருத்துவர்கள் சந்திப்பது நல்லது ..ஆயுர்வேத சிகிச்சை முறையில் உத்தர வஸ்தி போன்ற நேரடியாக கரு தரிக்க மருந்தை கருப்பையில் செலுத்துகிற அளவுக்கு பெண் மருத்துவர்களை கொண்டு தக்க சிகிச்சை அளிக்கும் எங்களை போன்ற தரமான சிகிச்சை நிலையங்களை அணுகுங்கள்.

எந்த வித பக்க விளைவுகளுமின்றி, அதிக செலவு இல்லாமல் கர்ப்பம் தரிக்க வைக்க முடியும்.

எனவே  இனியும் மற்றவர்கள் சொல்லும், மருத்துவர்களை நம்பி ஏமாறுவதைவிட உண்மையான மருத்துவரை நாடி சென்று பயனடைவோம்.

குறிப்பு –ஊரெல்லாம் எந்த மருத்தவ அறிவும் இல்லாத பணம் ஒன்றே குறிக்கோள் என ஏமாற்றும் போலி வைத்தியர்களிடமும் சென்று வீணாக பணத்தை இழக்காதீர்கள்

ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் கருத்தரிப்பு மற்றும் ஆலோசனைக்கு பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

1 comments:

கருத்துரையிடுக