திங்கள், டிசம்பர் 20, 2010

சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி-Ayaskruthi


சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி-Ayaskruthi
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் சிகித்ஸா ஸ்தான)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            வேங்கை அஸன                              1.000     கி.கிராம்
2.            கொடுகாரை (நரிவேங்கை)- தினிஸ                1.000     “
3.            பூர்ஜப்பட்டை பூர்ஜத்வக்                    1.000     “
4.            மருதம்பட்டை அர்ஜூனத்வக்               1.000     “
5.            ஆவில்தோல் கரஞ்ஜ                      1.000     “
6.            கருங்காலி கதிர                           1.000     “
7.            வெண் கருங்காலி ஸ்வேதகதிர             1.000     “
8.            வாகை சிரீஷ                             1.000     “
9.            இருபூள்கட்டை (தோதகத்தி) சிம்ஸூப       1.000     “
10.          சிறுகுறிஞ்சான் மேஷ ஸ்ருங்கி             1.000     “
11.          சந்தனம் சந்தன                            1.000     “
12.          செஞ்சந்தனம் ரக்தசந்தன                   1.000     “
13.          மரமஞ்சள் தாரு ஹரித்ரா                  1.000     “
14.          பனைவேர் தாளமூல                      1.000     “
15.          புரசு பலாஸ                              1.000     “
16.          காரகில் அகரு                            1.000     “
17.          தேக்கு ஸாகதாரு                         1.000     “
18.          குங்கிலியமரம் ஸால                      1.000     “
19.          கொட்டைப்பாக்கு ச்ரமுக                   1.000     “
20.          வெள்ளை நாகமரம் தவ                   1.000     “
21.          வெட்பாலைப்பட்டை குடஜத்வக்            1.000     “
22.          குந்துருக்கமரம் சாககர்ண                  1.000     “
23.          பெருவாகை மரம் ஸ்யோனாக              1.000     “
24.          தண்ணீர் ஜல                             102.400 “


இவைகளை நன்கு கொதிக்க வைத்து 25.600 ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 10.000 கிலோ கிராம், தேன்  1.630 கிலோ கிராம் சேர்த்து அத்துடன் 


1.            வெட்பாலை அரிசி இந்தரயவ               50  கிராம்
2.            பெருங்குரும்பை மூர்வா                   50           “
3.            கண்டுபாரங்கி பார்ங்கீ                    50           “
4.            கடுகரோஹிணீ கடுகீ                    50           “
5.            மிளகு மரீச்ச                             50           “
6.            அதிவிடயம் அதிவிஷா                    50           “
7.            கள்ளி ஸ்னுஹி                           50           “
8.            ஏலக்காய் ஏலா                          50           “
9.            பாடக்கிழங்கு பாட்டா                    50           “
10.          ஜீரகம் ஜீரக                               50           “
11.          பெருவாகை ஸ்யோனாக                   50           “
12.          மருக்காரை மதனபல                       50           “
13.          ஓமம் அஜமோதா                         50           “
14.          வெள்ளைக்கடுகு ஸ்வேதஸர்ஸப           50           “
15.          வசம்பு வாச்சா                             50           “
16.          கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக                 50           “
17.          பெருங்காயம் ஹிங்கு                        50           “
18.          வாயுவிடங்கம் விடங்க                    50           “
19.          தைவேளை பஸுகந்தா                    50           “
20.          திப்பிலி பிப்பலீ                            50           “
21.          மோடி பிப்பலீ மூல                        50           “
22.          செவ்வியம் சவ்ய                          50           “
23.          கொடிவேலிவேர் சித்ரக                    50           “
24.          சுக்கு சுந்தீ                                50           “
25.          இரும்புத்தகடு திகினலோஹபத்ர            800         “


இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு இரும்புத் தகட்டை கருங்காலித்தணலில் பழுக்கக் காய்ச்சி க்ஷெ கலவையில், தகடு கரையும் வரையில் நனைத்துக் காட்டாத்திப்பூ ஒரு கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்: 

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 இரத்த சோகை எனும் வெளுப்பு நோய் (பாண்டு),  
பிரமேசம் (ப்ரமேஹ),  
குட்டம் (குஷ்ட),  
வெண்குட்டம் (ஸ்வித்ர),  
மூலம் (அர்ஷ),  
செரியாமைக் கோளாறுகள் (அஜீர்ண),
நாட்பட்ட சீதபேதி (ரத்தாதிகார),  
அதிக உடற்பருமன் (மேதோவ்ருத்தி),  
குடற்பூச்சிகள் (க்ருமி கோஷ்ட).


குறிப்பு:    இரும்புத் தகட்டிற்குப் பதிலாக சுத்தி செய்த இரும்பு அரப் பொடியை அக்கலவையைச் சிறிது விட்டு நன்கு அரைத்துக் கலக்கியும், கருங்காலியின் குணம் மேலோங்க கஷாயச் சரக்குகளுடன் கருங்காலியையே 2.500 கிலோ அதிகமாகச் சேர்த்துக் கஷாயமாக்கி உபயோகித்துத் தயாரிப்பதும் சம்பிரதாயம். நன்கு ஸந்தானம் ஆவதற்காக காட்டாத்திப்பூ சேர்க்கப்படுகிறது.

குறிப்பு -சர்க்கரை ,தேன் மருந்தில் சேருவதால் -பாத எரிச்சலை கட்டுபடுத்த நினைக்கும் சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்து இந்த மருந்தை சாப்பிட வேண்டும் -இந்த மருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாது என்பது உறுதி ..

Post Comment

2 comments:

மச்சவல்லவன் சொன்னது…

சார், இதைப்போன்ற மருந்துகளை எங்கெல்லாம் பெறமுடியும் என்பதை அறிய ஆவல்.சில மருந்தை கொரியரில் பெற முடியவில்லை.
வாழ்த்துக்கள்.

curesure Mohamad சொன்னது…

நண்பரே எல்லா ஆயுர்வேத மருந்து கடைகளிலும் மிக எளிதாக கிடைக்குமே ..

கருத்துரையிடுக