ஆஸ்த்மாவை சரிசெய்யும் டானிக் - கனகாஸவம்-kanakasavam
(பைஷஜ்யரத்னாவளி - ஹிக்காச்வாஸசிகித்ஸா)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் – ஜல       25.600 லிட்டர்
2.            சர்க்கரை – சர்க்கர                           5.000 கிலோ கிராம்
3.            தேன் – மது                                2.500     “
இவைகளைக் கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் 
இடித்துச் சேர்த்து அத்துடன்
1.            ஊமத்தை (சமூலம்) – கனச (மூல)                 200 கிராம்
2.            ஆடாதோடை வேர்ப்பட்டை – வாஸாமூலத்வக்     200         “
3.            அதிமதுரம் – யஷ்டீமது                            100         “
4.            திப்பிலி – பிப்பலீ                                  100         “
5.            கண்டங்கத்திரி – கண்டகாரீ                       100         “
6.            சிறு நாகப்பூ – நாககேஸர                        100         “
7.            சுக்கு – சுந்தீ                                     100         “
8.            கண்டு பாரங்கி – பார்ங்கீ                        100         “
9.            தாளீசப்பத்திரி – தாளீசபத்ர                      100         “
ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகிபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு:    சர்க்கரை, தேன் இவைகளை வகைக்கு 75 சதவிகிதமும், திராக்ஷையை 75 சதவிகிதமும் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.
அளவும் அனுபானமும்:     
 10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:  
இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயம். இது கபத்தை வெளியேற்றி இரைப்பு (அ) இழுப்பைக் குறைக்கிறது.
குறிப்பு -ஆஸ்த்மாவுக்கு இந்த மருந்து மட்டும் தனியாக வேலை செய்யாது  ,மற்றும் தேவைக்கேற்ற பல மருந்துகளுடன் மருத்துவரின் ஆலோசனை படி  சாப்பிடுவது நல்லது 



 
 
 
 


 
 
 
 
 
 
 



3 comments:
ஊமத்தை ஆஸ்துமாவை,குணப்படுத்தும் மூலப்பொருளாக பயன்படும், என முன்பு ஒரு பதிவில் எழுதினீர்கள்,தற்போது விரிவாக மருந்து தயாரிப்பு முறையை எழதிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்...
@மச்சவல்லவன்மச்ச வல்லப நண்பரே ...நன்றி ..நன்றி ..நன்றி ..
பின்னூட்டம் எழுதாதாமல் பதிவுகள் போடுவது ..மிக பெரிய மன வருத்தம் இருந்தது ...உங்களால் தீர்ந்தது ..
உங்கள் தளத்தின் மூலமாக நிறைய தாவர வகைகளின் பலன்களை தெரிந்து கொள்கிறோம். மனிதர்களுக்கு பயனளிக்கும் இந்த சேவையை தொடருங்கள்! வாழ்த்துக்கள்!!
கருத்துரையிடுக