பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப் போக்கை குணப்படுத்தும் -
புஷ்யானுக சூர்ணம்-Pushyanaga choornam
புஷ்யானுக சூர்ணம்-Pushyanaga choornam
(ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகார)
தேவையான மருந்துகள்:
1. பாடக்கிழங்கு – பாதா - 10 கிராம்
2. நாவல் கொட்டை – ஜம்புபீஜ - 10 “
3. மாம்பருப்பு – ஆம்ராபீஜமஜ்ஜா - 10 “
4. சிறுபீளை (உலர்ந்த்து) – பாஷாணபேத - 10 “
5. அஞ்சனக்கல் – அஞ்ஜன - 10 “
(ரஸாஞ்சனம் – மரமஞ்சள்ரஸக்கிரியை)
6. மாசிக்காய் – மாசிபல - 10 “
7. இலவம்பிசின் – சால்மலீநிர்யாஸ - 10 “
8. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா - 10 “
9. தாமரைக் கேஸரம் – பத்மகேஸர - 10 “
10. பெருங்காயம் – ஹிங்கு - 10 “
11. அதிவிடயம் – அதிவிஷா - 10 “
12. கோரைக்கிழங்கு – முஸ்தா - 10 “
13. வில்வப்பழக்கதுப்பு (உலர்ந்தது) – பில்வபல மஜ்ஜா - 10 “
14. பாச்சோத்திப்பட்டை – லோத்ராத்வக் - 10 “
15. காவிக்கல் – கைரிக - 10 “
16. குமிழ்வேர் – காஷ்மரீ - 10 “
17. மிளகு – மரீச்ச - 10 “
18. சுக்கு – சுந்தீ - 10 “
19. திராக்ஷை – திராக்ஷா - 10 “
20. செஞ்சந்தனம் – ரக்தசந்தன - 10 “
21. பெருவாகை – ஸ்யோனாக - 10 “
22. வெட்பாலை அரிசி – இந்த்ரயவ - 10 “
23. நன்னாரி – ஸாரிவா - 10 “
24. காட்டாத்திப்பூ – தாதகீ புஷ்ப - 10 “
25. அதிமதுரம் – யஷ்டீமது - 10 “
26. மருதம்பட்டை – அர்ஜூனத்வக் - 10 “
செய்முறை:
காவிக்கல், திராக்ஷை, பெருங்காயம், இவைகள் நீங்கலாக மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். திராக்ஷையுடன் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்துச் சலிக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சலிக்கவும். பின்னர் காவிக்கல்லையும் தனியே இடித்துச் சலித்துச் சேர்த்து எல்லாச் சூர்ணங்களையும் ஒன்றுபடக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகளுக்கு கொடுக்கவும்.
அனுபானம்:
தேன், நெய், அரிசி கழுவிய நீர் (கழுநீர்)
தீரும் நோய்கள்:
இரத்த மூலம் (ரக்தார்ஷ), சீதரத்தபேதி (இரத்தாதிஸாரம்), பெரும்பாடு (ஆர்த்தவசூல (அ) அஸ்ரிக்தர), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர) மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் (ஆர்த்தவ ரோக - ரஜோதோஷ).
குறிப்பு:
1. ரஸாஞ்சனத்திற்குப் பொருள் மரமஞ்சள் சத்து என்பதாகப் பொருள் கொண்டு அஞ்சனக் கல்லுக்குப் பதிலாக ரஸௌத்தும் (மரமஞ்சள் சத்து), பெருங்காயத்திற்கு பதிலாக குங்குமப்பூவும் சேர்த்துத் தயாரிப்பது உண்டு.