மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட ..
முடியுமா சார் -மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால் கல்லின் அளவு எட்டு மிலி மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
மிக விரைவாக எவ்வளவு பெரிய கல்லே ஆனாலும் கரைந்திடும் என்பதற்கு கீழ் உள்ள போட்டோ தான் ஒரு சிறிய உதாரணம்.இரண்டே நாளில் இந்த பெரிய சிறுநீரக கல்(18 mm) வெளியே வந்து விட்டது.
நான் வெளிப்படையாக இந்த மூலிகைகளை உங்களுக்கு கூறுகிறேன்.
மூலிகைகளை பார்த்து ,படித்து பயன்பெறுங்கள்.
மருந்துகளில் கீழ் கண்டவற்றை கொடுக்கலாம் .
ஆயுர்வேத மருந்துகளில்
வருனாதி கசாயம்
வீரதவாதி கஷாயம்
கோக்ஷுராதி குக்குலு
புனர்ணவாதி குக்கலு ,
சந்திர பிரபா வடி ,
அஷ்மரீ சூர்ணம்
சிலாஜித் பஸ்ம
சித்தா மருந்துகளில்
சிருகன்பீளை சூரணம்
நெருஞ்சில் குடிநீர்
நண்டுக்கல் பஸ்மம்
கல்நார் பற்பம்
வெடியுப்பு சுண்ணம்
யுனானி மருந்துகளில் -ஹயரூல் யூத் பஸ்மம்
ஹோமியோ மருந்துகளில்
பெர்பெரிஸ் வல்காரிஸ் ,ஹைட்ராஞ்ஜி யா ,லைகோ,சைலீசியா -
கொள்ளு -macrotyloma uniforum
கொள்ளு -
இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -
கொள்ளு -கருப்பு கானபயிரை -இரவில் ஊறவைத்து
காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .
மாவிலங்கு -creteva magna
மாவிலங்கு -
மாவிலங்க பட்டை -ஆயுர்வேதத்தில் வருண இன்று அழைக்க படுகிறது.
மாவிலங்கப் பட்டையினால் வாதமொடு சன்னிகளும்
பாவுகின்ற கல்லடைப்பும் பாருமே -அகத்தியர் குண பாடம்
சீறுநீரக கல் ,பித்தப்பை கல்லும் கூட -மாவிலங்க பட்டை யினால் கரையும்.
ஆயுர்வேத மருதுக்கடைகளில் வருனாதி கசாயமாக இது எளிதாக கிடைக்கும்
நெருஞ்சில் முள் -tribulus terrestris
நெருஞ்சில் முள் ஆயுர்வேதத்தில் கோக்ஷுர என்றழைக்கபடுகிறது
சொல்லண்ணா நீர்க்கட்டு துன்மா மிசமருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டக்கால்-வல்லக்
..............................அகத்தியர் குணபாடம்..
எவ்வளவு பெரிய கல்லானாலும் நெருஞ்சில் முள்ளுக்கு முன்னே -பயந்தோடும்
சிறு பீளை
சிறு பீளை -
சிறு பீளை ஆயுர்வேதத்தில் பாஷாண பேதம் என்று அழைக்கப்படுகிறது -
பொங்கலுக்கு இதனை மண் பானையோடு வைத்து கட்டுவது வழக்கம்-
இது கன்னுபுள்ளை செடி என்றும் கூறுவார்.
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காகக் குடற்சூலை
பொரடரி ரக்த கணம் போக்குங் காண்-வாரிறுக்கும்
பூண் முலையே ! கேளாய் பெருந்துஞ் சிறுபீளை
யாமிதுகற் பேதி யறி..
இலைசாற்றால்-அல்லது சமூலக்கஷாயதால் கல் கரைந்து வெளியேறும் .
சிறு நீரகக் கல் மருத்துவம்
“சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண் “
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண் “
( தேரையர் அருளிச்செய்த குணவாகடத்திரட்டு.)
சிறு கண் பீளை(AERVA LANATA) சமூலம்
” நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறு பீளை
யாமிது கற்பேதி யறி.” (பதார்த்த குணபாடம் 291
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறு பீளை
யாமிது கற்பேதி யறி.” (பதார்த்த குணபாடம் 291
சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம்,
முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.
சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)
இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற
தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.
தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.
” சொல்லவொண்ணா நீர்க்கட்டு துன்ப மாமிச மருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டாக்கால் வல்லக்
கருஞ்சிமவேற் கன்மதே காசினிற் தோன்று
நெருஞ்சின்றும் வித்தே நினை.” (பதார்த்த குணபாடம் _ 876 )
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டாக்கால் வல்லக்
கருஞ்சிமவேற் கன்மதே காசினிற் தோன்று
நெருஞ்சின்றும் வித்தே நினை.” (பதார்த்த குணபாடம் _ 876 )
பொருள் : நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு, மூத்திர எரிச்சல்,
துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.
மாவிலங்கப்பட்டை (CRATEVA MAGNA )
” மாவிலங்கப் பட்டையினால் வாத மொடு
சந்நிகலும் பாவுகின்ற கல்லடைப்பும் மாறுமே. “
” மாவிலங்கப் பட்டையினால் வாத மொடு
சந்நிகலும் பாவுகின்ற கல்லடைப்பும் மாறுமே. “
பதார்த்த குணபாடம் _ 550.
பேராமுட்டி வேர் (PAVONIA ODORATA )கல் கரையும்போது ஏற்படுகின்ற வலி காய்ச்சல் போன்ற துயர்களை நீக்க வல்லது.
பேராமுட்டி வேரினால் வாதசுரம் , தாக நோய்கள் , மாந்த கணம், குளிர்ச்சுரம் பித்த நோய்கள்
ஆகியவை குணமாகும்.
பேராமுட்டி வேரினால் வாதசுரம் , தாக நோய்கள் , மாந்த கணம், குளிர்ச்சுரம் பித்த நோய்கள்
ஆகியவை குணமாகும்.
” வாத சுரந் தாகம் மதலைக் கணமாந்தஞ்
சீத சுரம் பித்தமெனச் செப்பணங்கு மோது நம்மாற்
சேரா முட்டிக்கேகுஞ் செய்ய மட மயிலே
பேரா முட்டித் தூரைப் பேசு. “
சீத சுரம் பித்தமெனச் செப்பணங்கு மோது நம்மாற்
சேரா முட்டிக்கேகுஞ் செய்ய மட மயிலே
பேரா முட்டித் தூரைப் பேசு. “
(பதார்த்த குணபாடம் _51 )
எலுமிச்சன் துளசி -ocimum grattissiumum
எலுமிச்சன் துளசி -it is having lithotriptic properties
அட துளசி கல்லை கரைக்கும் என்கிறீர்களா ?.நிச்சயமாக மூத்திரப்பை யில் உள்ள கல்லை கரைப்பதாக பல சான்றுகள் உள்ளது
கமேல -கம்பில்லக -mallotus phillippinesis
இது ஒரு வகை மரத்தின் பழங்களின் மீது படிந்திருக்கும் சிவந்த பொடி.இது பேதியுண்டக்கும் எனவே கவனத்துடன் கொடுப்பது நல்லது.
பெருங்களர்வா-salvdora indica
பெருங்களர்வா-
இது பெரிய மரமாகும்.இந்த மரத்தின் பழம் சிறுநீரக கல்லை கரைக்கும் தன்மையுடையது .
வாழை தண்டு -musa paradisiaca-
வாழை தண்டு -
வாழை தண்டின் சாறு கல்லை கரைக்கும் .இது மிக சிறந்த மூத்திர பெருக்கி .தயவு செய்து மூன்று நாட்களுக்கு மேல் வாழைதண்டு சாறை குடிக்காதீர்கள்.அவ்வாறு குடித்தால் எலும்பின் பலமும் குறைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வாழை தண்டும்-தண்டங்கீரையும் யானைக்கு தொடர்ந்து கொடுத்தால் யானையும் படுத்துக் கொள்ளும் என்பது தென் நாட்டு பழ மொழி .
கல்லை கரைக்க வாழை தண்டை விட பல மூலிகைகள் உள்ளன.எனவே வாழை தண்டை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டா தீர்கள்
முருங்கை இலை சாறு குடித்தாலும் கல் கரைகிறது .
கல்லுருக்கி இலை - கல்லை கரைக்கிறது -இந்த செடி கண்டறிவதில் சில முரண்பாடுகள் உள்ளது.இருந்தாலும் இந்த புகைப்படம் சரி என்றே கருதுகிறேன்.எனது ஊருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு அணைக்கட்டின் அருகிலுள்ள மலையில் இந்த மூலிகை கிடைக்கிறது இது carcara sargada வை ஒத்துள்ளது
தென்னம்பூவில் ஒரு மருந்து செய்வதுண்டு -அதுவும் கல்லை கரைத்து வெளியேற்றும்.
உங்களது கேள்விகளுக்கு கருத்துரையில் உடன் பதில் பெறலாம்
16 comments:
மிகவும் பயனுள்ள தகவல்.
நன்றி.
வின்மணி
நல்ல பயனுள்ள பதிவு,புகைப்படங்கள் மிகவும் பயனுடையது,தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல பயனுள்ள பதிவு,புகைப்படங்கள் மிகவும் பயனுடையது,தொடர்ந்து எழுதுங்கள் http://ammanagencies.blogspot.com/
good news sir, pasanagal patri write pannuga sir
sir ur blog is very good, also please say how to reduce the chest fat(gynaecomestia) in herbals and indian medicines. thanks in advance
தங்கள் வலைப்பூ மிக்க ப்யன் உள்ளதாக உள்ளது.சில மூலிகைகளின் பெயர்களில் உள்ள சந்தேகங்கள் உங்கள் பதிவைப் பார்த்த போது தீர்ந்தது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
good news
thanks for this information by jayasudha
மிக சிறந்த தகவல்கள். உண்மையானவையுங்கூட. நடைமுறைக்கு ஒத்த சரி பார்த்த இது போன்ற செய்திகள் எளிதில் கிடைப்பதில்லை. நன்றி. மன்னர் மன்னன்.
மிக்க நன்றி நண்பரே
தங்களுடைய இந்த பதிவு
எனக்கு மட்டும் அல்லாது என்
நண்பர்களுக்கும் ,என்
வாடிக்கயாளர்களுக்கும்
மிக பயன் படும் என் நண்பர்கள்
அனைவருக்கும் forward
செய்திருக்கிறேன்
மீண்டும் என் நன்றிகள்
இரண்டு வருடங்களாக சிறுநீரக கல் உள்ளது .அதை சரி செய்வதற்கான வழிகள் என்ன ?.கல் இன் அளவு 8மி.மி
இரண்டு வருடங்களாக சிறுநீரக கல் உள்ளது .அதை சரி செய்வதற்கான வழிகள் என்ன ?.கல் இன் அளவு 8மி.மி . நிரந்தரமாக சரி செய்வதற்கான வலி என்ன ?
How to reduce the stone for two days? How to follow? And is there any address to take the medicine regularly. Please send me thank you.
Sir, pls suggest one strong medicine to follow me, i have 0.54cm kidney stone, is surgery is required,
Sir, pls suggest one strong medicine to follow me, i have 0.54cm kidney stone, is surgery is required,
0.54cm stone in my left kidney urinary tract, continuous small and dullness, pls suggest good medicine
கருத்துரையிடுக