புதன், மார்ச் 31, 2010

ஆல மரம் -வட வ்ருக்ஷம்

 • சம்ஸ்க்ருதத்தில் இதனை வட என்போம் 
 • வேறு பெயர்கள் -ந்யக்ரோத ,தார்வி,க்ஷீரி,பழு மரம் ,பூதம் 
 • சரகர் இந்த ஆலமரத்தை மூத்திர சங்கிரகநீயம்(சிறுநீர் சுருக்கும் மருந்துகள் 
 • சுஸ்ருதர் -ந்யக்ரோத கனத்தில் இந்த மரத்தை சேர்த்துள்ளார் .
 • நோய்களில் -கப பித்த நோய்களை சரிசெய்யும் ,குழந்தையின்மை ,பெண்களின் பெண்ணுறுப்பின் பிரச்சனைகள் (யோனி நோய்கள் ),தளர்ந்த பெண் உறுப்புகளை இறுக்கமாக்க,ரக்த பித்த நோய்கள்,அக்கி நோய் ,முகத்தில் உள்ள கருப்பு (வியங்கம் ),அதிக தாகம்,வாந்தி 
 • ஆண் குழந்தை பிறக்க( -பும்சாவன விதிக்கு -)-ஆலமரத்தின் இளம் விழுதை பசும் பாலில் அரைத்து வலது மூக்கில் நசியம் குழந்தை தனிப்பதர்க்கு முன்பும் ,கருத்தரித்த பின்பு இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து விட ஆண் குழந்தை பிறக்க உதவும்( சுஸ்ருத சம்ஹிதை -சரிர ஸ்தானம் -இரண்டு )
 • கண்புரை நீங்க (திமிரம் )-கற்பூரத்தை (கடைகளில் கிடைக்கும் கற்பூரம் இல்லை ) ஆலமரத்தின் பால் விட்டு அரைத்து கண்ணில் அஞ்சனமிட தீரும் (சக்ர )தத்தா)
 • மருந்துகளில்-பஞ்ச வலகல சூர்ணம் ,ந்யக்ரோதாதி கசாயம் ,நால்பாமராதி தைலம் 
சித்த மருந்துகளில் 
 • செய்கை-துவர்ப்பி ,உரமாக்கி,காமம் பெருக்கி 
 • பண்பு -இதன் எல்லா பாகமும் மேகம்,வயிற்று கடுப்பு நீரழிவு  போக்கும் -உடல் வன்மை பெருக்கும்
அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட 
வச்சமற மேகமுந்தீ யாகுமே -இச்சகத்தில் 
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும் 
பூத மதிபதி போல் (தேரையர் வெண்பா )

சொல்லுகின்ற மேகத்தை துட்ட அகக்கடுப்பைக் 
கொல்லுகின்ற நீரழிவை கொல்லுங்காண்-நல்லாலின்
பாலும் விழுதும் பலமும் விதையும் பூவும் 
மேலும் இலையுமென விள்(அகத்தியர் குண பாடம் )
 • வாயில் ஏற்படும் சிறு கொப்பளங்களையும்,புண்ணையும்,கிரந்தி மேகத்தையும் போக்கும் உடலுக்கு வன்மை பேருக்கும்  
ஆலம் பால் -மேகத்தை போக்கும் ,அசைகின்ற பல்லை இறுக்கும்,தலைக்கு குளிர்ச்சி தரும் ,விந்துவை பெருக்கும்.

ஆலம்பால் மேக மறுதசையும் பல்லி றுக்கும்
கோல முடிக்குக் குளிர்ச்சி தரும் -ஞா லமத்தில் 
மெத்தவுமே சுக்கிலத்தை விர்த்தி செய்யுந் தாப்பமற்
சுத்த மதி முகத்தாய் ! சொல் (அகத்தியர் குனபாடம் )

பூதச் சுதை போற் பொருபாண்டிவைகளுக்கு 
பூதச் சுதை யுண்.

 • அருன்கொட்டைச் சமூலதைப் பொடித்து சூரணம் செய்து +ஆலம்பாலைச் சேர்த்து சரியாய் ஒரு மண்டலம் சாப்பிட -வெண்குட்டம் ,சோகை தீரும் 
 • நாக்கு வெடிப்பு ,வெள்ளை ,ஆண்மை குறைவு இவைகளை உள்ளுக்கும்,பல் ஆட்டம்,கால் வெடிப்பு இவைகளை மேலுக்குக்ம் வழங்கலாம் .
ஆலும் வேலும் பல்லுக்குறுதி 
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி 

ஆலம் விழுதால் பல் விலக்க பல் இறுகும்.

ஆலம்பட்டை-குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம்,ஈற்றுப்புன்,நாவெடிப்பு போகும் விரணங்களை கழுவ மாறும் 
பட்டையை இடித்து பத்து மடங்கு நீர் விட்டு ஊற வைத்து உள்ளுக்கு கொடுத்துவர நீரழிவு நீங்கும் 
ஆல் வேர் பட்டையை -குடிநீரிட்டு பாலுடன் பருக வெள்ளை தீரும் 
ஆலிலையை வதக்கி மேகபுண்ணில் கட்ட உடையும் 
  குணமாகும் நோய்கள்- வாத நோய்கள், பேதி, நீரிழிவு போக்கும் குளிர்ச்சி தரும்

  இன்னொரு லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/ala-maram-ayurvedic-medicine.html

  Post Comment

  செவ்வாய், மார்ச் 30, 2010

  விஷ்ணு கிராந்தி -விஷ்ணு கிரந்தி  • சங்க  புஸ்பியின் வேறு வகையாக இது கருதப்படுகிறது 
  • ஆயுர்வேதத்திலும் இந்த மூலிகை விஷ்ணு கிரந்தை என்றே அழைக்கபடுகறது.
  • வந்த்யா எனப்படும் குழந்தையின்மைக்கான சிகிச்சையில் விஷ்ணு க்ராந்தை மிக பெரிய அளவில் உதவுகிறது  
  சித்த மருத்துவத்தில் 
  • செய்கை -வியர்வை பெருக்கி,உரமாக்கி,உடல் தேற்றி ,வெப்பகற்றி,புழுகொல்லி,தாபமஅகற்றி ,கோழை அகற்றி .
  • விஷ்ணு கிரந்திக்கு கொடிய சுரத்தால் பிறந்த பயம் ,உட்சூடு ,கோழை,இருமல் ,வாதத்தால் பிறந்த பிணிகள் நீங்கும் 
  செய்யமா லின்கிரந்தி தீராத வல்லரசுத் 
  தைய மறுக்கும் அனல்தணிக்கும்-வெய்ய கப 
  காச இருமலியுங் கட்டறுக்கும் வாதத்தால் 
  ஊசலா டும்பிணிபோக்கும் (அகத்தியர் குணபாடம்)
  • குடிநீரிட்டு விஷ்ணு கிரந்தியை சாப்பிட மேல் கண்ட நோய்கள் போகும் 
  மாலாகச் சூர்ண மழையுட னுண்டிடச்
  சூலக மாதர்க்குச் சூட்சிய தாக்குமே (தேரையர் ..)
  • விஷ்ணு கிரந்தியை பொடி செய்து இளம் வெந்நீருடன் சேர்த்து குடித்துவர பிள்ளை பேறு உண்டாகும் 
  • இதனை சீரகத்துடன் சேர்த்து அரைத்து பாலில் கலக்கி உட்கொள்ள நரம்பு தளர்ச்சி மாறும்,சுரம் நீங்கும் 
  • இதனை துளசியுடன் குடிநீராக்கி குடிக்க செரியாமை ,கழிச்சல் மாறும் 
  • இதனை ஓரிதழ் தாமரையுடன் சேர்த்து சாப்பிட குழந்தை பேறு -மலடு நீங்கி பிறக்கும் 
  • இதனை கண்டங்கத்தரி வேருடன் சாப்பிட கரு முட்டை வளர்ச்சி உண்டாகும் 
  • இதனை வீழி நெய்யுடன் மாத விலக்கின் போது மூன்று நாட்கள் சாப்பிட கருக்குழாய் அடைப்பு நீங்கும்   குணமாகும் நோய்கள்- கிருமி, புண்கள், உடல் இளைப்பு நீக்கும், தலைமுடிக்கு நல்லது

  http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-4-high-resolution-herbal-pictures.html

  Post Comment

  மிருத சஞ்சீவனி


  • சம்ஸ்க்ருதத்தில் அயபானம் என்று சொல்வோம் ..
  • அதிக ரக்த போக்கு ,ரக்த பித்த என்னும் -இரத்த உராய்வு குறைதலில் ஏற்படும் நோய்கள்,பெண்களின் அதிகமான இரத்த போக்கு,ப்ரமேஹம் போன்றவைகளை சரிசெய்யும் .
  • இந்த மூலிகையின் சாறு -இராகத போக்கை நிறுத்தும் 
  • இந்த மூலிகை பாக்டீரியாக்களை அழிக்கவும்,வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கிறது
  • இந்த மூலிகை -வயிறு சம்பந்தமான நோய்களை வயிறு வலி,வாந்தி,குமட்டலையும் சரிசெய்யும்
  • கேன்சர் நோய்க்கும் இந்த மருந்து உதவுகிறது 


  குணமாகும் நோய்கள் -மலமிளக்கி, புண்கள், ரத்தப்போக்கிற்கு நல்லது

  Post Comment

  திங்கள், மார்ச் 29, 2010

  ஆனசுவடி  • ஆனசுவடி என்று அழைக்கபடும் இந்த மூலிகை யானையின் கால் தடம் போன்று உள்ளது போல் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம் -
  • சம்ஸ்க்ருதத்தில் இதனை கோஜிஹ்வா (ஆட்டின் நாக்கு ) என்று அடையாளம் காணப்படுகிறது 
  • சிறந்த கிருமி நாசினியாக இது ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது 
  • வேரும் இலையும் -நீர்கடுப்பு,கழிச்சல் ,சீத கழிச்சல் சரி செய்ய உதவுகிறது -வயிறு வலி வீக்கம் போக்கும் 
  • வேர் -வாந்தி நிற்க உதவும் 
  • வேர் பொடியும்-மிளகு +கிராம்பு பொடியுடன் சேர்த்து பல் துலக்க பல் உறுதியாகும் ,பல் வலி போகும்
  • இலை புண் ஆற,கரப்பான் மாற வெளி பிரயோகமாக உதவுகிறது 
  • நெஞ்சு சளி ,அம்மை நோய்க்கும் இதை கேரளாவில் பயன் படுத்துவார்கள் 
  • மூளையின் ஆற்றலை பெருக்க உதவுகிறது 
  • நீர் பெருக்கியாகவும்,வலி நீக்கியாகவும் பயன்படும் 
  குறிப்பு படத்தில் தவறாக ஆனை நெருஞ்சில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது -இது ஆனை நெருஞ்சில் இல்லை-படத்தில் எழுத்து  பின்பு எடிட் செய்யப்படும் 
  குணமாகும் நோய்கள் -நீர் கல்லடைப்பு, நீர்கடுப்பு, வீக்கம், ரத்தபேதி,வாந்தி, தோல் அரிப்பு போக்கும்

  Post Comment

  சனி, மார்ச் 27, 2010

  கரிசலாங்கண்ணி -ப்ருங்கராஜம்


  • ஆயுர்வேதத்தில் கரிசாலங்கண்ணியை ப்ருங்கராஜம் என்று சொல்வோம் 
  • வேறு பெயர்கள் -கேச ராஜ (முடிகளின் அரசன் ),கேசரஞ்சனா(முடிகளுக்கு கருப்பு நிறம் தரவல்லது ),ரவி ப்ரியா என்ற பல பெயர்கள் உண்டு 
  • ஆயுர்வேத புத்தகங்களில் -வெண் புள்ளிகளை சரி செய்யவும் ,வழுக்கை சரிசெய்யவும் பல ரெபரன்ஸ் கிடைக்கிறது 
  • ஆச்சார்யர் சரகர் இரத்த உராய்வு தன்மை குறையும் -ரக்த பித்த நோய்க்கு இந்த மூலிகையை குறிப்பிடுகிறார் .
  • ஒரு மாத காலம் இந்த மூலிகையை முறைப்படி உண்ண-ஆயுள் அதிகரிக்கும் ,வயதை குறைக்கும் -ரசாயனம் எனப்படும் காயகல்பமாக செயல்படுமென்று ஆச்சார்யர் வாகபட்டார் சொல்கிறார் .
  • குணம் -கபத்தையும் வாதத்தையும் குறைக்கும் ,கேசத்திற்கு நல்லது ,பலம் கொடுக்கும் ,கண்ணுக்கு நல்லது ,பல்லுக்கும் நல்லது 
  • நோய்களில் -இரத்த சோகை ,மஞ்சள் காமாலை ,சுவாசம்,காசம்,கண் நோய்கள் ,ஹ்ருதய நோய்கள் ,கிருமி,தோல் நோய்கள் ,தலை வலி,வீக்கம் போகும் 
  • கர்ப்ப ஸ்தாபன எனப்படும் கருச்சிதைவை குணப்படுத்த -பசும் பாலுடன் கரிசாலங்க்கண்ணி சாறு சம அளவுகளில் குடித்து வர சரியாகும் ( வைத்திய மாதவ )
  • வெண் புள்ளிகள் எனும் ஸ்வித்ரம் என்னும் நோயில் -கரிசாலை இரும்பு சட்டியில் வறுத்து சாப்பிட குணமாகும் (அஷ்டாங்க ஹ்ருதயம் -சி -இருபது அத்)
  • மாலைக்கண் என்னும் நக்தாந்த்யத்தில் -கரிசாலை சாறு ஏழுநாட்கள் குடிக்க குணமாகும் (சக்ர தத்தா)
  • கடைகளில் கிடைக்க கூடிய மருந்துகளில் -ப்ருன்கராஜா தைலம் ,நீலி பிருங்காதி தைலம் ,சட் பிந்து தைலம் ,புங்கராஜாசவம் போன்ற மருந்துகள் .
  • பல்வேறு ஆராய்ச்சிகளில் மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக உலகமே ஒத்துகொண்ட மருந்து -கல்லீரல் ,மண்ணீரல் நோய்களை முழுமையாக நீக்கும் 
  • வைரசுக்கு முதல் எதிரி -ஆண்டி வைரஸ் குணம் கரிசாலையில் நிறைய உண்டு ..
  • பல வித செந்த்தூரங்கள் செய்ய ,தாதுக்களை சுத்தம் செய்ய உதவும் .
   சித்த மருத்துவத்தில் -

  குரற் கம்மற் காமாலை குட்டமோடு சோபை 
  யுறர் பாண்டு பன்னோ யொழிய -நிரற்சொன்ன
  மேய்யனந் தகரையொத்த மீளி ன்னு நர்புளத்துக்
  கையாந் தகரையோதக் கால்- (அகத்தியர் குண பாடம் ) 

  குரலுறுப்பு நோய்,காமாலை ,குட்டம் ,வீக்கம்,பாண்டு ,பல்நோய் இவை போகும் 

  திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை 
  யுருவுண்டா முள்ளதெல்லா முன்ட்டாங் -குருவுண்டாம் 
  பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாண்டதகரை 
  தானாகத் தின்றாகத் தான் ( தேரன் வெண்பா )

  மஞ்சள் கரிசாலையை கரியாக செய்து உண்ண அறிவின் தெளிவும் திருவும் வந்து சேரும் 

  போற்றலைக்கை யாந்தகரை பொன்னிரமாக் கும்முடலை 
  சுத்த முரக்கட்குச் சுகன்கொடுக்குஞ்-சிற்றிடையாய் 
  சிந்தூரங்க் கட்காகுஞ் சிந்தை தனைதுலக்கும்
  உந்தி வளர் குன்மம் மொழிக்கும் ( அ கு ) 


  • கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.
  • தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.
  • மஞ்சக் காமாலை -மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.
  • காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 - 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.
  • ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.
  • கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.
  • குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.
  • காது வலி -இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.
  • பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விடம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.
  • நாள்பட்ட காமாலை -: முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.
  • குட்டநோய் -நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.
  • முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.
  • வசியமூலிகை - :
  பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
  பாலனே சுழிமுறையான் மெருகேற்று
  ..........லலாட மதில் பூசிவிட்டால்
  அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
  ---------------அகத்தியர் பரிபூரணம்.
  கரிசாலை சுட்டெரித்த சாம்பல் மையை நெற்றியில.....அணிந்தவர் வசியமாவார்.
  • இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
  • கரிசாலை சாறு நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் குமரிச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 250 மி.லி.சேர்த்துக் கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய் வகைக்கு 10 கிராம்பாலில் நெகிழ அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து(கரிசாலைத்தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்துவரத் தலைவலி, பத்தக் கிறுகிறுப்ப், உடல் வெப்பம், பீனிசம், காது, கண் நோய்கள் தீரும்.
  • கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும்.


  • மஞ்சள் காமாலைக்கு:கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
  • மகோதர வியாதிக்கு:கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.
  • மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.
  • ஆஸ்துமா குணமாக:கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
  • சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
  • குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.
  • பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.
  • குழந்தைகளின் சளி நீங்க:குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
  • கரிசலாங்கண்ணித்தைலம்:கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
  • இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.
  • தலைமுடி நன்கு வளர:கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
  • கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.
  • கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.
  • தலைப்பொடுகு நீங்க:கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.
  • பல் உறுதிக்கு!கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.
  • பித்தத்தைலம் :கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.
  • நரை நீக்கும் தைலம்:புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.
  • நாள்பட்ட புண் ஆற...கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.


  குணமாகும் நோய்கள் -ஈரல் நோய்கள் ,முடிக்கு நல்லது 
  இன்னுமொரு லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/karisalai-manjal-ayurvedic-herbs.html

  Post Comment

  வெள்ளி, மார்ச் 26, 2010

  ஊமத்தை-ததூர

  ஆயுர்வேதத்தில் ஊமத்தையை -உன்மத்த ,கனகம்,ததூர என்று சொல்வோம் 
  • ஆச்சார்யர் சரகர் இந்த ஊமத்தையை விஷ சிகிச்சையிலும் தோல் வியாதி சிகிச்சையிலும் கூறுகிறார் .
  • ஆசார்யர் சுஸ்ருதர் முக்கியமாக அலர்க விஷம் என்னும் -நாயகடியால் ஏற்படும் ரேபிஸ் நோயில் கூறுகிறார் .
  • ஹிரித சம்ஹிதையில் மூல நோய்க்கான சிகிச்சையில் கூறுகிறார் .
  • பயன்பாடுகளில் -ஜ்வரம்,தோல் நோய்கள் ,புண் ,அரிப்பு ,கிருமி ,விஷ ரோகம் ,நீர் கடுப்பு 
  • வியாதி சிகிச்சையில் -
  • நாய் கடிகளில்(அலர்க்க விஷம் ) -ஊமத்தை ,வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும் (சுசுருத சம்ஹிதை -சூத்ர ஸ்தானம்-காண்டம் -௭)
  • கிருமி -ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன்,ஈறு தொல்லை நீங்கும் ( வ்ருத்த மாதவம் )
  • பிடக ஆமாய -வேனல் கட்டிகளில் -வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு ,கட்டிகளை கரைக்க வெளிப்ர்யோகமாக உதவும் (சக்ர தத்தா )
  • மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -கனகாசவம் ,சூத சேகர ரசம் ,மகா விஷ கர்ப்ப தைலம் ,உன்மத்த ரசம் 
  • ஆஸ்தமா குணமாக -கனகாசவம் உதவும் 
  • அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்.-தற்கொலைக்கு  விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றி யுள்ளது எனவே -ஆயுர்வேத சித்தா மருந்துகில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது .
  • அட்ரோபின் கண்ணின் விழிபாவையை விரிக்க உதவும் .இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது 
  • ரயில் பயணிகளில் மயக்க பிஸ்கெட்டை கொடுத்து அபேஸ் பண்ணுபவர்களின் மயக்க பிஸ்கேட்டில் ஊமத்தை விதை உள்ளதாக சொல்கிறார்கள் .
  சித்த மருத்துவத்தில் 

  செய்கை -வாந்தியுண்டாக்கி ,இசிவகற்றி ,துயரடக்கி,மூர்சையுண்டாகி 
  குணம் -நாய்கடி புண் ,குழி புண் ,கட்டிகள் ,நஞ்சு ஆகியவை தீரும் 

  நாய்கடியால் வந்து நலிசெய் விரணமும்போம் 
  வாய்க்குழி புண் கட்டிகளும் மாறுங் காண்-தீக்குணதைச்
  சேமத்தில் வைத்தி லிடத் தீருமுத்தோ டங்ககளரும்
  ஊமத்தை யின் குணத்தை யுன்னு (அகத்தியர் குண பாடம் )  1. இலை : இலையை நல்லெண்ணெயில் வதக்கி, இதமான சூட்டில் ஒத்தடமாகக் கொடுத்து, கட்டி வந்தால் வாதவலி, மூட்டுவலி, வாயுக்கட்டிகள், அகண்ட வாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மார்பகங்களில் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.
  2. இலையைக் காயவைத்து பொடியாக்கி குண்டுமணி அளவு தேனில் கொடுத்தால் சுவாசகாசம் குணமாகும்.
  3.  இலை, பூ, விதை, மூன்றையும் சம அளவாக எடுத்து பாலாவியில், பிட்டவியலாக்கி அவித்து உலரவைத்து, ஒன்றிரண்டாக இடித்து அதில் சிறிது அளவு ஒரு இலையில் வைத்து சுருட்டாக்கி புகைத்தால் மூச்சுத் திணல் குணமாகும். இலையுடன், சம அளவு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து களிபோலக் கிளறி, இதமான சூட்டில் பற்று போல போட்டு வந்தால், மூட்டு வீக்கம், வலியுள்ள கட்டிகள், வெளிமூலம் போன்றவை குணமாகும்.
  4. இலைச்சாற்றை 2, 3 துளி அளவு வெல்லத்தில் கடைந்து காலை, மாலை 3 நாட்கள் கொடுத்து பத்தியமாக இருந்து வந்தால் வெறி நாய்க்கடி விஷம் தீரும். உப்பு, புளியை நீக்கி, பால், மோர், சோறு மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். இலையை தண்ணீர் விடாமல் அரைத்து, நல்லெண்ணெயில் வதக்கி புண்ணில் கட்டினால் புண் ஆறும்.
  5. இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காயெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி ஒரு சில துளிகளைக் காதுகளில் விட்டு வந்தால் ஏற்படும் காதுவலி குணமாகும்.
  6. இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காய் எண்ணெயும் கலந்து பதமாகக் காய்ச்சிய பிறகு, சிறிதளவு மயில் துத்தம் தூளாக்கி போட்டு வடிகட்டிய பின் மேலாக பூசி வந்தால்  புரையோடிய புண், சதை வளரும் புண், ஆறாதபுண் எனும் புண் பிளவையும் கூட குணமாக்கும்.
  7. காய் : வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.
  8. பிஞ்சு : இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.
  9. விதை : இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.
  10.  50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.
  11. வேர் : விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது

  மேலும் இன்னுமொரு லிங்க் 
  http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/oomathai-ayurvedic-herbs.html
  குணமாகும் நோய்கள் -மூச்சு திணறல் ,வயிற்று வலி,வீக்கம் போகும்   Post Comment