- ஆயுர்வேதத்தில் கரிசாலங்கண்ணியை ப்ருங்கராஜம் என்று சொல்வோம்
- வேறு பெயர்கள் -கேச ராஜ (முடிகளின் அரசன் ),கேசரஞ்சனா(முடிகளுக்கு கருப்பு நிறம் தரவல்லது ),ரவி ப்ரியா என்ற பல பெயர்கள் உண்டு
- ஆயுர்வேத புத்தகங்களில் -வெண் புள்ளிகளை சரி செய்யவும் ,வழுக்கை சரிசெய்யவும் பல ரெபரன்ஸ் கிடைக்கிறது
- ஆச்சார்யர் சரகர் இரத்த உராய்வு தன்மை குறையும் -ரக்த பித்த நோய்க்கு இந்த மூலிகையை குறிப்பிடுகிறார் .
- ஒரு மாத காலம் இந்த மூலிகையை முறைப்படி உண்ண-ஆயுள் அதிகரிக்கும் ,வயதை குறைக்கும் -ரசாயனம் எனப்படும் காயகல்பமாக செயல்படுமென்று ஆச்சார்யர் வாகபட்டார் சொல்கிறார் .
- குணம் -கபத்தையும் வாதத்தையும் குறைக்கும் ,கேசத்திற்கு நல்லது ,பலம் கொடுக்கும் ,கண்ணுக்கு நல்லது ,பல்லுக்கும் நல்லது
- நோய்களில் -இரத்த சோகை ,மஞ்சள் காமாலை ,சுவாசம்,காசம்,கண் நோய்கள் ,ஹ்ருதய நோய்கள் ,கிருமி,தோல் நோய்கள் ,தலை வலி,வீக்கம் போகும்
- கர்ப்ப ஸ்தாபன எனப்படும் கருச்சிதைவை குணப்படுத்த -பசும் பாலுடன் கரிசாலங்க்கண்ணி சாறு சம அளவுகளில் குடித்து வர சரியாகும் ( வைத்திய மாதவ )
- வெண் புள்ளிகள் எனும் ஸ்வித்ரம் என்னும் நோயில் -கரிசாலை இரும்பு சட்டியில் வறுத்து சாப்பிட குணமாகும் (அஷ்டாங்க ஹ்ருதயம் -சி -இருபது அத்)
- மாலைக்கண் என்னும் நக்தாந்த்யத்தில் -கரிசாலை சாறு ஏழுநாட்கள் குடிக்க குணமாகும் (சக்ர தத்தா)
- கடைகளில் கிடைக்க கூடிய மருந்துகளில் -ப்ருன்கராஜா தைலம் ,நீலி பிருங்காதி தைலம் ,சட் பிந்து தைலம் ,புங்கராஜாசவம் போன்ற மருந்துகள் .
- பல்வேறு ஆராய்ச்சிகளில் மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக உலகமே ஒத்துகொண்ட மருந்து -கல்லீரல் ,மண்ணீரல் நோய்களை முழுமையாக நீக்கும்
- வைரசுக்கு முதல் எதிரி -ஆண்டி வைரஸ் குணம் கரிசாலையில் நிறைய உண்டு ..
- பல வித செந்த்தூரங்கள் செய்ய ,தாதுக்களை சுத்தம் செய்ய உதவும் .
சித்த மருத்துவத்தில் -
குரற் கம்மற் காமாலை குட்டமோடு சோபை
யுறர் பாண்டு பன்னோ யொழிய -நிரற்சொன்ன
மேய்யனந் தகரையொத்த மீளி ன்னு நர்புளத்துக்
கையாந் தகரையோதக் கால்- (அகத்தியர் குண பாடம் )
குரலுறுப்பு நோய்,காமாலை ,குட்டம் ,வீக்கம்,பாண்டு ,பல்நோய் இவை போகும்
திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முன்ட்டாங் -குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாண்டதகரை
தானாகத் தின்றாகத் தான் ( தேரன் வெண்பா )
மஞ்சள் கரிசாலையை கரியாக செய்து உண்ண அறிவின் தெளிவும் திருவும் வந்து சேரும்
போற்றலைக்கை யாந்தகரை பொன்னிரமாக் கும்முடலை
சுத்த முரக்கட்குச் சுகன்கொடுக்குஞ்-சிற்றிடையாய்
சிந்தூரங்க் கட்காகுஞ் சிந்தை தனைதுலக்கும்
உந்தி வளர் குன்மம் மொழிக்கும் ( அ கு )
- கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.
- தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.
- மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.
- காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 - 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.
- ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.
- கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.
- குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.
- காது வலி -: இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.
- பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விடம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.
- நாள்பட்ட காமாலை -: முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.
- குட்டநோய் -: நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.
- முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.
பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே சுழிமுறையான் மெருகேற்று
..........லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
---------------அகத்தியர் பரிபூரணம்.
கரிசாலை சுட்டெரித்த சாம்பல் மையை நெற்றியில.....அணிந்தவர் வசியமாவார்.
- இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
- கரிசாலை சாறு நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் குமரிச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 250 மி.லி.சேர்த்துக் கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய் வகைக்கு 10 கிராம்பாலில் நெகிழ அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து(கரிசாலைத்தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்துவரத் தலைவலி, பத்தக் கிறுகிறுப்ப், உடல் வெப்பம், பீனிசம், காது, கண் நோய்கள் தீரும்.
- கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும்.
- மஞ்சள் காமாலைக்கு:கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
- மகோதர வியாதிக்கு:கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.
- மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.
- ஆஸ்துமா குணமாக:கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
- சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
- குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.
- பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.
- குழந்தைகளின் சளி நீங்க:குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
- கரிசலாங்கண்ணித்தைலம்:கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
- இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.
- கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.
- தலைமுடி நன்கு வளர:கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
- கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.
- கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.
- தலைப்பொடுகு நீங்க:கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.
- பல் உறுதிக்கு!கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.
- பித்தத்தைலம் :கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.
- நரை நீக்கும் தைலம்:புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.
- நாள்பட்ட புண் ஆற...கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.
குணமாகும் நோய்கள் -ஈரல் நோய்கள் ,முடிக்கு நல்லது
இன்னுமொரு லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/karisalai-manjal-ayurvedic-herbs.html
Post Comment