ஞாயிறு, ஜனவரி 10, 2010

பால் பொருட்கள் & மூத்திர வகைகள் - பண்புகள் & பயன்கள்


பால்வகை

முலைப்பால் :-இது திரிதோஷம், சுரசன்னி தோஷம் வெப்பம் ஆகிய இவைகளைப் போக்கும். அஞ்சனத்திற்கும் மருந்தின் அனுபானத்திற்கும் போட்டுவைக்க சுரசன்னி தோஷங்கள் நீங்கும். இத்துடன் சமன் இஞ்சிச்சாறும் , நல்லெண்ணெய்யும் சேர்த்து தைலபதமாக  காய்ச்சி சிரசிற்கிட்டு ஸ்தானம் செய்ய சீதளத்தினால் உண்டான தலைவலி கழுத்து நரம்பு இசிவு, நீர்பீனசம் குணமாகும். இன்னும் லிங்கம் இரசசெந்தூரம், முதலிய மருந்துகளை சுத்திசெய்வதற்கும், குழந்தைகட்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகப்படும்.

பசுவின்பால் :- இது பாலர், கிழவர்,சுரம், சூலைமேகம், முதலிய நோயுள்ளவர்கள், பலயீனர், மெலிந்தவர், முதலியவர்களுக்குச் சிறந்தது. இதனால் உடலுக்கு பலம் ஏற்படும். மற்றும் இரத்த பித்தம், க்ஷயம், மதுமேகம் முதலிய நோயாளர்கட்கு சிறந்த உணவாகும். இதுவும் மருந்துகளுக்கு அனுபானமாக வழங்கப்படுவதுடன், கர்கம், லேகியம், கிருதம், தைலம், முதலியவைகளில் விசேஷமாக சேர்க்கப்படும்.

எருமைப்பால் :- இதனால் பலம் ஏற்படும். ஆனால் திமிர்,
வாயு, மந்தம் முதலியவைகளை உண்டாக்கும். மருந்தின் குணத்தைக் கெடுக்கும்.

வெள்ளாட்டுப் பால் :- இதனால் வாதபித்த தொந்தம்,
சுவாசரோகம், சீதபேதி, கபதோஷம், விரணம், வாதவீக்கம்,
சோபை முதலியன குணமாகும். நல்ல பசியையும், பலத்தையும் தரும். இது பொதுவாக கபரோகிகட்கும், சிறப்பாக க்ஷய நோயினருக்கும் சிறந்தது.

தயிர் மோர் வகை


கடைந்து வெண்ணெய் எடுக்காத தயிருக்கு கோலம் அல்லது ஏட்டுதயிர் என்று பெயர். இது பித்தத்தையும், வாதத்தையும் தணிக்கும். ஜலம் விடாமல் கடைந்து வெண்ணெய் எடுத்த மோருக்கு மதிதமென்று பெயர். இது பித்தத்தையும், வாதத்தையும் தணிக்கும். தயிருக்கு சமன் சலம் சேர்த்துக் கடைந்து வெண்ணெய் எடுத்த மோருக்கு தண்விதமென்று பெயர். இது கபத்தை தணிக்கும். தயிருடன் நாவில் ஒரு பாகம் நீர் சேர்த்து கடைந்
தெடுக்க மோருக்கு தக்கிறமென்று பெயர். இதுவே மிகவும் உத்தம்மானது. இதனால் திரிதோஷமும் சமனப்படும். மற்றும் மாந்தக் கினி, அரோசகம், அசீரணம் முதலிய நோய்களைப் போக்கி தேகா ரோக்கியத்தைத் தரும். புளிப்பு மோரில் சிறிது இந்துப்பு சேர்த்து அருந்த வாதநோய்கள் குணமாகும். மோரில் சர்க்கரை கலந்து
குடிக்க பித்த சம்பந்தமான பிணிகள் குணமாகும். மோரில் திரி கடுகு சூரணத்துடன் சிறிது இந்துப்பும் சேர்த்து வழங்க கபநோய் கள் குணமாகும்.

சாதாரணமாக தயிரைவிட மோரே சிறந்த உணவாகும். தின
சரி உணவின் இருதியில் மோரைச் சேர்த்துவர உடலின் சூட்டைத் தணிப்பதுடன் மலசலக்கட்டை நீக்கி உடலை ஆரோக்கிய நிலையில் வைக்கும். இன்னும் இது வயிற்றுவலி, குன்மம், சோகை, காமாலை, பேதி, தாகம், அசீரணம், பித்தாதிக்கம், பாண்டு முதலிய ரோகங்
களை உடையவர்களுக்கு சிறந்த பத்திய உணவாகும். பசுவின் மோர் தீபனத்தையும், புத்தியையும் உண்டாக்கும். திரிதோஷங்களையும் போக்கும். எருமையின் மோர் கபம், சோபை இவைகளை உண்டாக்கும். கடினமானது. ஆகையால் இது பத்தியத்திற்குதவாது. வெள்ளாட்டு மோர் திரிதோஷங்களைப் போக்கும். மற்றும் குன்மம், மூலம், பாண்டு, சோபை, கிரகணி முதலிய நோய் கட்கும் சிறந்தது.


வெண்ணெய்


இதில் பசுவின் வெண்ணெயே சிறந்தது. இதனால் கண்ணோய், பிரமேகரோகைம், உட்சூடு முதலியன குணமாகும். தீபாக்கினியும் பலமும் உண்டாகும். இது சிலாசது முதலிய உஷ்ணத்தைத் தணிக்கும் மருந்துகளை வழங்க சிறந்த அனுபானமாகக் கையாளப்படும். இத்துடன் சர்க்கரை சேர்த்து அருந்துதலுக்கு பலத்தை தருவதுடன்
உடலின் வெட்டை சூட்டையும், பித்தத்தையும் தணிக்கும். இது கஷயரோகிகட்கு சிறந்ததாகும். இன்னும் இது கண்ணோய்க்குச் செய்யப்படும் மருந்துகளில் சேரும்.

நெய்


பசுவின் நெய்யே சிறந்தது. இது பத்தியங்கட்கு விசேஷமாக வழங்கப்படும். இதனால் அதிசுட்கரோகம், பித்தாதிக்கம், வாந்தி, பிரமேகம், இருமல், எலும்புறுக்கி, மூலநோய் முதலியன குணமாகும் இதனைச் சாதாரணமாக தினசரி அன்னத்துடன் அருந்திவர
உடலின் உஷ்ணத்தை தணிப்பதுடன், கொழுப்புகளை வரவொட்டாமல் தடுக்கும். இன்னும் இது மருந்துகளுக்கு அனுபானமாகவும், லேகியம், கிருதம், முதலிய மருந்துகள் செய்வதற்கும் பயன்படும்.

மூத்திரம்

பொதுவாக பசு, எருமை, வெள்ளாடு இவைகளின் மூத்திரத்
தால் பாண்டு, சோபை, காமாலை, வீக்கம், மகோதரம், குன்மம், முதலிய பிணிகள் போம். இவற்றுள் கோமூத்திரம் விசேஷமாக பயன்படுத்தப்படும் கோமூத்திரத்தை தனியாகவாவது அல்லது சில கியாழங்களுடனாவது சேர்த்து வழங்க மேற்கூறிய பிணிகள் நீங்கும். இது மண்டூரம், நாபி முதலிய
சரக்குகளை சுத்திசெய்ய பயன்படும். கழுதை மூத்திரத்தால் உஷ்ணம் கிருமிநோய், விரணம், கிரந்தி, மேகம், குட்டம், கஷயம், சில்விஷம், அபஸ் மாரம், பாலரோகம் முதலியன குணமாகும். இதனை விசேஷமாக மேகநோய்கட்கு வழங்கப்படும் தைலம் முதலியவைகளில் சேர்த்து செய்வதுண்டு.

 


Post Comment

0 comments:

கருத்துரையிடுக