ஞாயிறு, ஜனவரி 10, 2010

ஜீவபொருட்கள் - பண்புகள் & பயன்கள்


அம்பர் :- இதனால் சுக்கிலவிருத்தி, தேஜசு, உற்சாகம் உண்டாகும். புண் கரப்பான் இவைகள் ஆறும். இதனை பெரும்பாலும் தாதுவிருத்திக்குரிய மாத்திரை லேகியம் முதலியவைகளில் சேர்த்து வழங்குவதுண்டு.

அரக்கு :- இதனால் குட்டம், குன்மம், ரத்தபித்தம், எலும்
புருக்கி, விரணம், வாதம், சன்னிபாதம், கபாதிக்கம் முதலியன குணமாகும். கொம்பரக்கை முறைப்படி சுத்திசெய்து பொடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 3 1/2 முதல் 5 குன்றி எடை தக்க அனு பானங்களில் கொடுத்துவர ரத்தபித்தம், பெரும்பாடு, நாட்பட்ட
அதிசாரம், அதி ஸ்தூலரொகம் முதலியன குணமாகும்.


ஆமையோடு : - இதனால் குழந்தைகட்கு காணப்படும் மாந்த சுரம், பேதி, மூலம், தேகவெப்பம், கட்டி முதலியன குணமாகும்.  ஆமை ஓட்டை சுத்தி செய்து சிறிது துண்டுகளாக நறுக்கி ஆடாதோடை அல்லது ஊந்தாமணியிலை கற்கத்தினிடையே வைத்து அகலில்
அடக்கி சீலைமண் செய்து 50-60 வறட்டியில் புடமிட ஓடுகள் வெந்து வெளுத்திருக்கும். இதைப் பொடித்து கல்வத்திலிட்டு கவசம் செய்து அதே சாற்றில் மீண்டும் அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில்லடக்கி மீண்டும் ஒரு புடமிட்டெடுக்க அல்லது பற்பமாகும். இதை அரைத்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1-2 குன்றி
எடை நெய், வெண்ணெய், அல்லது தங்கானுபானங்களுடன் கொடுத்துவர சீதபேதி, ரத்தபேதி, ரத்தமூலம், ரத்தபித்த நோய்கள், அசீரணபேதி உஷ்ண இருமல் முதலியன குணமாகும்.

மான்கொம்பு :- இதனால் மார்புவலி, கண்ணோய், அஸ்திமேகம் வெட்டை முதலியன குணமாகும். இதை சந்தணக்கல்லில் உரைத்து மார்பில் மேற் பூச மார்புவலி குணமாகும். மான்கொம்புகளை சிறிது துண்டுகளாக நறுக்கி சுத்திசெய்து அகத்தியிலை கற்கத்தினிடையே வைத்து சீலைமண் செய்து புடமிட்டெடுக்க பற்பமாகும். பற்பமாகவிடில் குமரிச்சாறு விட்டரைத்து வில்லை செய்துஉலர்த்தி அகலில்லடக்கி மீண்டும் ஒரு புடமிட்டெடுக்க அல்லதுபற்பமாகும். இதை அரைத்து வைத்
துக்கொண்டு வேளைக்கு 1-2 குன்றி எடை நெய், வெண்ணெய், அல்லது தங்கானுபானங்களுடன் கொடுத்துவர வெள்ளை வெட்டை பித்தஎரிச்சல்
உஷ்ண இருமல் மார்புவலி, இடுப்புவலி முதலியன குணமாகும். 1-2 குன்றி எடை மான்கொம்பு பற்பத்துடன் 1-2 குன்றி எடை பொரித்த வெங்காரமும் சேர்த்து திரிகடிபிரமாணம் திரிகடிச்சூரணத்தில் கலந்து
தினம் 2 வேளை வீதம் கொடுத்துவர இருமல் , கஷ்டசுவாசம், மார்புவலி,  கை, கால் அசதி, உடல்காங்கை முதலியன குணமாகும்.

கஸ்தூரி :- இது சுரம், ஜன்னி,இசிவு, கபம், தலைநோய்
இவைகளைப்போக்கும். நாகவிருத்தி, வன்மை உற்ச்சாகம், தேகசுவசியம் இவைகளை உண்டாக்கும். இதில் 1/4-1/2 குன்றி எடை ஆடாதோடை  சுரசத்துடன் சேர்த்து கொடுக்க கபக்கட்டு, சுவாசகாசம், சீதளம் முதலியன குணமாகும். சீதளம் வராமல் இருக்கும் பொருட்டும்
மற்றும் சுரம்,கபநோய்கள், விஷபேதி முதலியவற்றில் காணும் அனுபானங்களில் 1/2 குன்றி எடை வீடம் வழங்குவதுண்டு.இரண்டு வராகனெடை கஸ்தூரியுடன் குங்குமப்பூ, கோரோசனம், கிராம்பு, வால்மிளகு, ஏலம், கற்பூரம், சாதிக்காய், சாதிப்பத்திரி, மிளகு, திப்பிலிவகைக்கு
ஒரு வராகனெடை வீதம் சேர்த்து கிராம்பு குடிநீர் விட்டு ஒரு ஜாமம் அரைத்து மெழுகு பதத்தில் பயறளவு மாத்திரைகளாகச் செய்து நிழலிலுலர்த்தி வைத்துகொண்டு குழந்தைகட்கு ஒரு மாத்திரையாகவும், பெரியவர்கட்கு 2-3 மாத்திரைகளாகவும் தினம் இரு வேளை வீதம் தாய்ப்பால், தேன் அல்லது தக்க அனு பானங்களில் கொடுத்துவர சுரம், ஜன்னி, ஜலதோஷம், கபக்கட்டு,
தலைவலி முதலியன குணமாகும்.

கோரோசனை :- இதனால் பித்தகோபம், வாதபித்தம், மேக வெட்டை, குழந்தைகட்கு காணும் மாந்தம், சிலேஷ்மாதிக்கம், மசூரிகை புண் முதலியன குணமாகும். இதில் 1/8 குன்றி எடை முலைப்பால், தேன், ஆடாதோடை துளசி சுரசம், வெற்றிச்சாறு, முதலிய அனுபானங்களில் குழந்தைகட்குக் கொடுக்க கபக்கட்டு, கக்கிருமல், மாந்தபேதி, கபமாந்தம், பித்தசுரம் முதலியவைகளைகுண
மாக்கும். இதை இரண்டொருதுளி அண்டத்தைலத்துடன் சேர்த்து வழங்க மாந்தம், இசிவு, வலி, வாய்வு முதலியன குணமாகும். கோரோசனை, சண்பகப்பூ, அதிமதுரம், கோஷ்டம், ஏலம், சகஸ்திர பேதி, மாசிப்பத்திரி, வெட்டிவேர், விலாமிச்சவேர், வகைக்கு வராக
னெடை 1 இவைகளை கல்வத்திலிட்டு மாசிப்பத்திரி சாறுவிட்டு ஒரு ஜாமம் அரைத்து உளுந்தளவு மாத்திரைகள் செய்து நிழலி லுலர்த்தி குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம்
2-3 வேளை முலைப்பால், இஞ்சிச் சாறு துளசிச்சாறு, மாசிப்பத்திரிச்சாறு முதலிய அனுபானங்களில் கொடுத்துவர சுரம், ஜலுப்பு, கபம், இருமல், மாந்தம், பேதி, பல நிறமாகக் கழிதல் தோஷம் முதலியன குணமாகும்.

நண்டுக்குழிநீர் :- இதனால் வாந்தி, விக்கல், தேக வெப்பம்,
எரிவு முதலியன குணமாகும். வயல்களில் நண்டுகள் இருக்கும் குழியில் உள்ள சலத்தை வடிக்கட்டி வேளைக்கு 1-2 அவுன்சு வீதம் கொடுத்துவர வாந்தி, விக்கல் தீரும்.

கோழிமுட்டை :- இது வாததோஷம், கபப்பிணி, விரணம்
இவைகளை நீக்கும். சுக்கிலத்தையும், பலத்தையும் பெருக்கும்.  இதை அரைவேக்காட்டுடன் சமைத்து சிறிது மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டுவர உடலுக்கு பலத்தையும் இந்திரிய புஷ்டியையும் உண்டாக்கும். முட்டை வெண்கருவை ஜலத்தில் கலந்து கொடுக்க இரசம், வீரம், பூரம், துருசு, பாஷாணம் முதலிய கொடிய சரக்குகளின் நஞ்சுக்குணம் முறிவதுடன் அதனால் ஏற்பட்ட விரணம்
முதலியவைகளும் ஆறும். முட்டை வெண்கருவுடன் சமன் எருக்கம்பால் சேர்த்து அதில் சிறிது வீரமும் சேர்க்க அண்ட எருக்கு ஜெயநீராகும். இது மருந்துகளை நீற்ற பயன்படும். தேவையான அளவு முட்டைகளை அவித்து, அதனிலுள்ள மஞ்சட் கருவைமட்டும் எடுத்து ஓர் கடாயிலிட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து
கரண்டி கொண்டு தேய்த்து வர கருவானது தீய்ந்து கருத்து புகையுடன் தைலங் கக்கும் . அந்தத்தருணம் கீழிறங்கி அழுத்திப்பிழிய தைலம் கிடைக்கும். இதில் 2-3 துளி வீதம் குழந்தைகட்கு தனியாகவாவது அல்லது கரோஜன மாத்திரைகளில் கூட்டியாவது ,தாய்ப்பாலில் கொடுக்க
மாந்தம், இசிவு, வாய்வு, கபக்கட்டு, முதலியன குணமாகும். பெரியவர்களுக்கு 5-6 துளி வீதம் நாவில் தடவி வர நாவைப்பற்றிய நோய் குணமாகும்.

தேன் :- இவற்றினால் பித்தம் வாந்தி கபநோய்கள்
இரத்தத்திலுள்ள குற்றங்கள் முதலியன குணமாகும். இதற்க்கு முக்குற்றத்தையும் போக்கும் குண்முடையதால் இது மருந்துகளுக்கு முக்கிய அனுபானமாக ஏற்ப்பட்டுள்ளது. இதில்1-2 தேக்கரண்டிவீதம்
நீருடன் கலந்து அருந்து வர மலமூத்திரங்களை சரிவர வெளிப்படுத்தி பசிதீபனத்தை உண்டாக்குவதுடன் இரத்தத்திலுள்ள குற்றங்களையும் நீக்கும்.

தேன் மெழுகு :- இதனால் பாரிசவாசம், வீக்கம், வாதநோய், கபநோய், சுக்கில நஷ்டம், தேள்விஷம், பைசாசம், குட்டம், ஆகதுகவிரணம் துஷ்டவிரணம் முதலியன குணமாகும். இதை விஷேசமாக புற சிகிச்சை
களுக்கே பயன்படுத்தப்படும். இதில் வெள்ளைக்குங்கிலியில் 4 வராகனெடை பொடித்துப்போட்டு கிளரி அரைத்து களிம்பு போல் வைத்துக்கொண்டு
இதை சீலையில் தடவி புண், விரணம் முதலியவைகளுக்கு மேலுக்குப்பூசி
வர விரைவில் குணமாகும். இன்னும் இம் மெழுகைக் கொண்டு மெழுகுத்தைலம் செய்வதுண்டு. இது பாரிசவாதம் முதல் சகலவாத நோய்கட்
கும் மேற்பிரயோகமாக வழங்கப்படும் ஓர் சிறந்த மருந்தாகும்.

சங்கு :- இதனால் ரத்தபித்தம், வாததோஷம், இசிவு, கபம்
முளைகட்டி, விழிநோய், முதலியன குணமாகும். தீபனமுண்டாகும் இதை உரைத்து கண்கட்டி முதலியவைகளுக்கு பூசுவதுண்டு.இதைசுத்திசெய்து கீழ்காய் நெல்லி கற்கத்துடன் சேர்த்து சீலை மண்
செய்து புடமிட பற்பமாகும். சரிவராவிடில் கீழ்காய் நெல்லி சாறு விட்டரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கி மீண்டுமொரு புடமிட பற்ப்பமாகும். இதில் 2-3 குன்றி எடை கீழ்காய் நெல்லி கற்கத்துடன் அனுபானித்து 3 நாள் உப்பில்லா பத்தியத்துடன் வழங்க காமாலை தீரும். இப்பற்பத்தில் 1-2 குன்றி எடை வீதம் ஆடாதோடை சுரசத்தில் கொடுக்க கபக்கட்டு, இருமல், இரைப்பு முதலியவைகளும்,திரிகடுகு சூரணத்துடன் கொடுக்க குன்மம், சூலை, வாயு, முதலியவைகளும் குணமாகும்.

முத்து :- இதனால் அஸ்திசுரம், சிலேஷ்மம், விழிநோய், வீரிய நாசம், பலவீனம், இளைப்பு, அக்கினிகீட விஷம் முதலியன குணமாகும். இதை முறைப்படி பற்பம்செய்து வழங்க மேற்கண்ட பிணிகள் தீரும். இருதயத்திற்கு பலத்தையும், சுக்கில விருத்தியையும் தைரியத்தையும் தரும்.

முத்துச் சிப்பி :- இதனால் இருமல், ஈளை, காசம், க்ஷயம், மேகக்கட்டி முதலியன குணமாகும். இதனை சுத்திசெய்து பொடித்துக் கல்வத்திலிட்டு ஆடாதோடை, துளசி, கண்டங்கத்திரி இம்மூன்றின் சாறுஞ் சமனெடையாகக் கலந்து விட்டு இரண்டு ஜாமம் அரைத்து
வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண்செய்து 40-50 விரட்டியில் புலமிட பற்பமாகும். இதில் குன்றி எடை வீதம் தினம் இரு வேளையாக அருந்திவர மேற்கூறிய பிணிகள் தீரும். இதை ஆடாதோடை மணப்பாகு, கண்டங்கத்திரிலேகியம், தாளிசாதிசூரணம், முதலிய ஏதேனும் ஓர் அனுபானத்துடன் அருந்திவர விசேஷ
பலனைத் தரும்.

பவனம் :- இதனால் சுரதோஷம், ஈளை, காசம், கபக்கட்டு,
தாகம், அழலை, நீர்சுருக்கு, பேதி, விந்துநட்டம் முதலியன குணமாகும். எலுமிச்சம்பழச்சாற்றில் ஊறவைத்து கழுவி சுத்தம் செய்த பவளத்தை குப்பைமேனி இலைக் கற்கத்தினிடையே வைத்து அகலி லடக்கிச் சீலைமண்செய்து 50-60 வறட்டியில் புடமிட பற்பமாகும்.
நிறம் சரிவர இல்லாவிடில் மீண்டும் மேனிச்சாறு விட்டரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிடக்கி சீலைமண்செய்து முன்போல் புடமிட பற்பமாகும். அரைத்து வைத்துகொள்க. இதில் வேளைக்கு குன்றி எடை வீதம் தினம் இரு வேளை நெய், பால் அல்லது தக்க
அனுபானங்களுடன் கொடுத்துவர இருமல், ஈளை, கபக்கட்டு, கபசுரம், பேதி முதலியன குணமாகும்.

நத்தை :- இதனால் மூலநோய், மலாசயப் பிணிகள் முதலி
யன தீரும். தேவையான அளவு நத்தைகளை ஓர் சிறு குடுவையிலிட்டு வாய்மூடிச் சீலைசெய்து புடமிட பற்பமாகும். இதில் 1-2 குன்றி எடை வெண்ணெயில் அருந்திவர சீதபேதி, இரத்த மூலம், மூலச்சூடு முதலியன குணமாகும். நத்தை சதையை சமைத்துண்ண மூலம் குணமாகும்.

பூநாகம் :- இதனால் தாகம், சன்னிபாதம், ஊருஸ்தம்பவாதம், வலி, இசிவு, கபநோய் முதலியன குணமாகும். பூநாகமென்ற நாக்குப்பூச்சியை மோரிலிட்டு கழுவி எடுக்க சுத்தியாகும். இத்துடன் சிறிது ஏலரிசி சேர்த்து அரைத்தெடுக்க கற்கம் பாக்களவு வீதம் கொடுத்துவர வலி, இசிவு முதலியன குணமாகும். பூநாகத்துடன் நொச்சியிலை சேர்த்தரைத்து நல்லெண்ணெய்யில் கலந்து தைல பதமாக காய்ச்சி முடித்தைலமாக,வழங்க மண்டை குடைச்சல் கழுத்து நரம்பு இசிவு, சீதள்த்தினால் ஏற்ப்பட்ட தலைவலி, தலைபாரம் முதலியன குணமாகும்.

புற்றாஞ்சோறு :- இதனால் நீரிழிவு, மதுமேகம், தாகம் முதலியன குணமாகும். காது பலப்படும். இதனை நன்கு சூரணித்து வஸ்திராயஞ் செய்து வைத்து கொள்க. இதில் வேளைக்கு 5 குன்றி எடை வீதம் சேர்த்து கலந்து 2 வேளை வீதம் பால் அல்லது மோரில் கலந்து அருந்தி வர
நீரிழிவு மதுமேகம், தாகம், கிரகணி, முதலியன குணமாகும்.

பலகறை :- இதனால் விஷசுரம்,மந்தம், கிரகணி, சூலை,
கபம், கபவாதப்பிணிகள் முதலியன குணமாகும். தேவையான அளவு பலகறை களை, பழச்சாற்றில் வைத்து கழுவியுலர்த்த சுத்தியாகும். பிறகு இதை பொரித்து கல்வத்திலிட்டு பழச்சாற்றில் அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில்லடக்கி சீலைமண் செய்து புடமிட பற்பமாகும். இதில் 1/2 குன்றி எடை வீதம் தேனில் அருந்த சுரம், பித்தாதிக்கம், ஈரல்களில் ஏற்ப்படும் வீக்கம், தாகம், பேதி, சூதகவாயு, வயிற்றுவலி, குன்மம்,இருமல்
கபம், முதலியன குணமாகும். இதை திரிகடிப்பிரமாண சூரணத்துடன் அருந்த சூதகவாயு, , வயிற்றுவலி, குன்மம்,இருமல் முதலியன குணமாகும் இத்துடன் பொரித்த வெங்காரம் சேர்த்து அருந்தி வர நீர்ச்சுருக்கு
உடல்காங்கை, பித்தஎரிச்சல், முதலியன குணமாகும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக