ஞாயிறு, ஜனவரி 10, 2010

இலவணங்கள் - பண்புகள் & பயன்கள்





கறியுப்பு :- இதற்கு வமனத்தை உண்டாக்கல், விரேசனத்தை யுண்டாக்கல், வீக்கத்தை கரைத்தல், கிருமிகளைக் கொல்லுதல் முதலிய செய்கைகள் உண்டு. இதனை முறைப்படி மருந்தாகச்செய்து அருந்திவர பசியின்மை, அசீரணம், குன்மம் முதலிய பிணிகள் குண
மாகும். இதில் 4-5 வராகனெடை நீரில் கரைத்து குடிக்க பேதியாகும். சுமார் 1-பலம் உப்பை தூள் செய்து சம சீதோஷ்ணமுள்ள ஒரு டம்பளர் ஜலத்தில் கரைத்து குடிக்க வாந்தியாகும். இத்தகைய வமனசிகிச்சைகள் சில நஞ்சுப்பொருட்களைத் தின்றவர்களுக்கு வழங்க உதவும். உப்பைக் கரைத்த ஜலத்தை ஆசனவழியில் பீச்ச கிருமிகள் செத்து வெளிப்படும். இச்சலத்தைக் கொண்டு சொறி
சிரங்கு விரணங்களையும் கழுவிவர விரைவில் ஆறும். உப்புத் தூளைக் கொண்டு பல் தேய்த்துவர பல், ஈறு இவைகளின் நோய்கள் குணமாகும். உப்பை நீர் விட்டரைத்து அடிபட்ட வீக்கங்களுக்கு பற்றிட
வீக்கங்கள் கரையும்.

கல்லுப்பு :- இதற்கும் வீக்கத்தை கரைத்தல், கிருமிகளைக்
கொல்லுதல், மலத்தைப் போக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதை முறைப்படி மருந்தாக செய்து அருந்த பித்தம், குன்மம் முதலியன குணமாகும். இதனுடைய குணமும் ஏறக்குறைய கறியுப்பை யொத்திரிக்கும். இதை தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் பற்ப செந்தூரமாகவோ அல்லது இதர மருந்துகளுடன்
கூட்டியோ வழங்கப்படும்.

இந்துப்பு :- இதற்கு பேதியாக்கும் செய்கையுண்டு. இதனால் மலபந்தம், குன்மம் முதலய பிணிகள் தீரும். இதனைப் பெரும்பாலும் விரேசனத்திற்காகப் பயன்படுத்தப்படும். இதில் சுமார் 2-முதல் 4-வராகனெடை நீரில் கலந்துகொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். சூரத்து நிலாவாரை, சுக்கு, கடுக்காய் பிஞ்சு
ரோஜாமொக்கு, சோம்பு, கொட்டை தீராட்சை இவைகள் சேர்ந்த குடிநீரில் இந்துப்பைச் சேர்த்துக்கொடுக்க நன்கு பேதியாகும். இதனால் மலக்கட்டு, சுரம், வயிற்றுவலி, பித்தத் தலைவலி, நீர்க் கோவை பித்தாதிக்கம் முதலியன குணமாகும்.

வெடியுப்பு :- இதற்கு முக்கியமாக சிறுநீரை பெருக்கல்,
வியர்வை யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நீர்கட்டு, சோபை, மகோதரம், குன்மம் முதலியன குணமாகும். ஏழாங்காய்ச்சல் வெடியுப்பு அல்லது முறைப்படி சுத்திசெய்த வெடியுப்பைப் பொடித்து வேளைக்கு 4-5 குன்றி எடை வீதம் தினம் 2-3
வேளையாக நீராகாரம்(கழுநீர்), சோம்புக் குடிநீர் முதலியவற்றில் போட்டுக் கொடுத்துவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, சோபை, சுரக்கொதிப்பு முதலியன சாந்தப்படும். வெடியுப்பு பலம் 4, நவாச்சாரம் பலம் 4, இவைகளை நன்கு பொடித்து 2 1/2 ஆழாக்கு ஜலத்
தில் கரைத்து வைத்துக்கொண்டு இதில் ஓர் துணித்துண்டை நனைத்து, நோயுடன் கூடிய கீல்களின் வீக்கம், அடிபட்ட வீக்கம் அண்ட வீக்கம், தலைவலி, முதலியவைகளுக்கு முறையே அவ்வவ் விடங்களில் மேலுக்கு போட்டு, சீலை உலர உலர திரவத்தை விட்டு
வர விரைவில் அவ்விடங்களிலுள்ள விரணம், வலி, வீக்கம் முதலியன யாவுங் குணமாகும்.

நவாச்சாரம் :- இதற்கு சிறுநீரைப் பெருக்குஞ் செய்கை
யுண்டு. இதனால் கல்லடைப்பு, பெருவயிறு, வயிற்றுவலி, வாத நோய் முதலியன குணமாகும். நவாச்சாரத்தைப் பொடித்து ஓர் மண்ணோட்டிலிட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயில் சிறிது லேசாக வறுத்து ஈரம் உலர்ந்த பதத்தில் எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு இதில் வேளைக்கு 3 அல்லது 4 குன்றி எடை வீதம் தினம் இரு வேளையாக நீர்முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, மூக்காட்டை,
சோம்பு முதலியன சேர்ந்தக் குடிநீருடன் சேர்த்துக் கொடுத்துவர நீரடைப்பு, கல்லடைப்பு, சோபை, மகோதரம் முதலியன குணமா கும். மற்றும் இதனை வாதத்தை சமனப்படுத்தும் குடுநீருடன் சேர்த்துக் கொடுத்துவர வாதரோகங்கள் குணமாகும்.


பூநீறு :- இதற்கு சிறு நீரை பெருக்கல், விரேசனமாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் குன்மம், சூலை, வயிற்றுவலி, முதலியன குணமாகும். ஆனால் இதை தனியாக வழங்குவதில்லை. குன்ம குடோரி
முதலிய மருந்துகளில் சேர்த்து வழங்குவதுண்டு.

வளையலுப்பு :- இதற்கு அற்பமாக சிறு நீரை பெருக்கும் செய்கையும், வயிற்றிலுள்ள வாய்வை அகற்றும் செய்கையும் உண்டு. இதனால் பித்தவாய்வு, வயிற்றுவலி, குன்மம், பீலிக நோய் முதலியனகுணமாகும்.  இதையும் தனியாக வழங்குவதில்லை. குன்மம் முதலிய நோய்கட்கு
வழங்கப்படும், சூரணம், மெழுகு முதலிய மருந்துகளில் சேர்த்து வழங்கு வதுண்டு.

அன்னபேதி :- இதற்கு துவற்ப்புச்சுவையினால் மலத்தை
கட்டல், விரணத்தை ஆற்றல், பலத்தை தருதல், முதலிய செய்கைகளும் கிருமி நாசினி செய்கையும், இரத்த விரித்தி செய்கையும் உண்டு.  இதனால் பேதி, பாண்டு, சோபை, ஈரல் கட்டி, முதலியன குணமாகும். இதனை செந்தூரித்து உள்ளுக்குள் கொடுத்து வர மேற்கூறிய நோய்கள் குணமாகும். இதனை நீர் விட்டரைத்து ஆசனம் வெளித்
தள்ளல் முதலியவைகட்கு மேலுக்கு போட சுருங்கி உள்ளுக்குள் போவதுடன் அதில் விரணம் இருப்பின் விரைவில் ஆறும்.

அப்பளகாரம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றும் செய்கையும் உண்டு. இதனால் பித்தவாய்வு, வயிற்றுவலி, குன்மம், குடல் சூலை, வாதநோய் முதலியன குணமாகும். இதை சுத்திசெய்து
திரிகடிபிரமாணம் பழச்சாற்றுடன் தினம் 1 வேளையாக காலையில் 3 நாள் மாதாந்திர சமயத்தில் கொடுத்துவர பெண்களுக்கு காணப்படும் சூதக வயிற்றுவலி குணமாகும்.

கந்தியுப்பு :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றும்
செய்கையும் உண்டு. இதனால் வயிற்றுவலி, குன்மம், பீலிக நோய், சூலை முதலியனகுணமாகும். கந்தியுப்புடன் இரண்டு பங்கு சோம்பு சூரணஞ்செய்து வேளைக்கு 1/2 தோலா வீதம் தினம் 2 வேளை நீரில்லாவது சோம்புக ்குடிநீரிலாவது கொடுத்துவர குன்மம், சூலை, ஈரல் கட்டி,
வீக்கம் முதலியன குணமாகும்.

கடல்நூரை :- இதனால் நேந்திர நோய், செவிநோய், சிரங்கு
முதலியன குணமாகும். இதை பன்னீர் விட்டரைத்து கோடைக்கொப்புளம் முதலியவைகட்கு மேலுக்கு பூச குணமாகும்.

படிகாரம் :- இதற்கு துவற்ப்புச்சுவையினால் மலத்தை
கட்டல், விரணத்தை ஆற்றல், இரத்தப்போக்கை தடுத்தல் முதலிய செய்கைககள் உண்டு . இதனால் பேதி, சீதபேதி, ரத்தபேதி, உட்சூடு விரணம் முதலியன குணமாகும். படிகாரத்தைப் பொடித்து நசிய மிட நாசியினின்று ரத்தம் வடிதல் நிற்கும். இதைப் பற்பொடி களில் சேர்த்து வழங்க பல்லில் ரத்தம் சீழ்வடிதல் முதலியன குணமாகும். வேலம்பட்டைக் குடிநீருடன் சிறிது படிகாரத் தூளைச்
சேர்த்துக் கரைத்து வாய்கொப்பளிக்க வாய் ரணம், ரசதோஷம் முதலியவற்றால் ஏற்பட்ட வாய் ரணம் முதலியன குணமாகும். இதைப் பொரித்து அரைத்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 5-குன்றி எடை வீதம் தனியாகவாவது அல்லது சமன் காசிக்கட்டிச்
சூரணத்துடன் சேர்த்தாவது தினம் 2-3 வேளை வீதம் கொடுத்துவர சீதபேதி, ரத்தபேதி, பெருன்பாடு முதலியன குணமாகும். பொரித்த படிகாரத்தை வேளைக்கு 2-3 குன்றி வீதம் தினம் இரு வேளை வெண்ணெயில் கொடுத்துவர வெள்ளை, வெட்டைச்சூடு, நீர் சுருக்கு, உஷ்ண வயிற்றுவலி முதலியன குணமாகும்.

வெங்காரம் :- இதற்கு அற்ப மூத்திரப்பெருக்கி செய்கையும் ருதுவை யுண்டாக்குஞ் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு, புண், குன்மம், மூத்திரகிரிச்சரம், கபாதிக்கம், இரத்தமூலம், வாதம் முதலியன குணமாகும். இதைப் பொடித்து ஓர் புதுச்சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி எரித்துவர பூத்துவரும். நன்றாக பூத்தபின்பு கீழிறக்கி ஆறவைத்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைத்துக்
கொள்க. இதில் வேளைக்கு 2-3 எடை குன்றி வீதம் தினம் இரு வேளையாக வெண்ணெயில் கொடுத்துவர நீர்சுருக்கு, வயிற்றுவலி, உஷ்ண இருமல் முதலியன குணமாகும். இதில் 5 முதல் 10 குன்றி எடை இளநீர் சோம்புக் குடிநீர் முதலியவற்றில் கொடுக்க நீர்க் கட்டு குணமாகும். பொரித்த வெங்காரத்தை தேன்விட்டுக்
குழைத்து நா, உதடு, தொண்டை முதலிய விடங்களில் காணும் விரணங்களுக்கு பூசிவர விரைவில் ஆறும். பொரித்த வெங்காரத்தை தேங்காயெண்ணெய் விட்டுக் குழைத்து சொறி சிரங்கு விரணங்கட்குப் பூசிவர விரைவில் ஆறும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக