இரசம் :- இதனால் கிரந்தி முதலிய மேகப்பிணிகள், குன்மம், சூலை, வாயு, பாரிசவாதம், விரணம், குட்டம் முதலியன குணமாகும்.
கந்தகம் :- இதனால் சொறி சிரங்கு முதலிய சர்ம வியாதிகள் கிட்டம், குன்மம், பிலீகம், விஷக்கடி, சுரம், பேதி, கிரகணி முதலியயன குணமாகும்.
இலிங்கம் :- இதனால் சுரம், சன்னி, அதிசாரம், கிரந்தி,
விரணம், கரப்பான் முதலிய பிணிகள் குணமாகும்.
இரச செந்தூரம் :- இதனால் சுரம், சன்னி, தோஷம், தலை
வலி, கீல்வாயு முதலியன பிணிகள் குணமாகும்.
வீரம் :- இதனால் வாதம், கீல்பிடிப்பு, குன்மம், சூலை விரண்ம், புண், புரை, கிரந்தி, முதலியன குணமாகும்.
பூரம் :- இதனால் வாதசூலை, சுரோணித வாதம், குன்மம்,
சூலை, புரமேகம், முதலியன பிணிகள் குணமாகும்.
தாளகம் :- இதனால் காசம், சுவாசம், க்ஷயம், குள்ர், சுரம்,
கடிவிஷம், துஷ்ட விரணம் முதலியன குணமாகும்.
மனோசிலை :- இதனால் குட்டம், கொடியரணம், திமிர்படை கிரந்தி, சுரம், இரைப்பு, கடிவிஷம், முதலியன குணமாகும்.
வெள்ளைப் பாஷாணம் :- சுரம், முறைசுரம், சன்னி, புண்,
கிரந்தி, விஷக்கடி முதலியன குணமாகும்.
கௌரி பாஷாணம் :- இதனால் சுரம், வாதநோய், முதலியன குணமாகும்.
துருசு :- இதனால் புண், மேகரணம், சுவாசகசாம், கண்ணோய் முதலியன குணமாகும். வமனம், விரேசனம் இவைகளை உண்டாக்கும்
அப்பிரகம் :- இதனால் சுரம், நீரழிவு, மதுமேகம், பிரமியம்
வாதநோய், குடலண்டம், பெருவயிறு, தாவர ஜீவ விஷங்கள் முதலியன குணமாகும். வீரிய விருத்தியை யுண்டாக்கும்.
மிருதார் சிங்கி :- இதனால் பித்த விரணம், கரப்பான், கிரந்தி முதலியன குணமாகும்.
காந்தம் :- இதனால் பாண்டு, சோபை, காமாலை, மகோதரம், வெட்டை, பிரமேகம், வாதநோய், வெப்பு முதலியன குணமாகும்.
மண்டூரம் :- இதனால் பாண்டு, சோபை, காமாலை, மகோ
தரம், ஈரல்கட்டி, சுரம், இருமல், இரைப்பு முதலியன குணமாகும்.
இரசம்
இது சில பிரதேசங்களில் நிலத்திலிருந்து எடுக்கப்படு
கிறது. இதில் வெண்மை, செம்மை, மஞ்சள், நீலம் முதலிய
நான்கு நிறங்களையுடைய நான்கு வகைகள் உண்டு. இவற்றின் வெண்மை நிறமுள்ள ரசமே மருந்துகள் செய்வதற்கு சிறந்தது. இதனை பாதரச மெனவும் கூறுவர். லிங்கத்தினின்றும் இரசம் எடுக்கப்படும். இதனை வாலை இரசம் என்பர்.
இரசதோஷம் :- நாகம், வங்கம் நெருப்பில் விட்டால் நிற்
காமை, அசகயாகினி, விஷம், மலம், கிருமி என்கிற ஏழு தோஷங்கள் சுத்தியில்லாத பாதரசத்திற்க்கு இயற்க்கையாக உண்டு. இவற்றுள் நாகதோஷத்தால் ஜடத்துவம், வங்கதோஷத்தால் குஷ்ட ரோகமும் அக்கினி சஞ்சலியத்தால் விஷேசதாபம்,அசகயாகினியால் வீரியநாசம், விஷத்தால் மூர்ச்சை, மலத்தால் விஷ்போட
கம், பர்வதத்தால் மரணம் முதலியவை உண்டாகும்.
இரசசுத்தி :- லிங்கத்தை பழச்சாற்றால் ஒருநாள் அரைத்து
ஊர்த்துவ பாதன யந்திரத்தில் விட்டு 3 ஜாமங்கள் எரித்து சாங்க சீதளத்தில் இறக்கி மேல் பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் பாதரசத்தை எடுத்துக்கொண்டு பழச்சாற்றிலாவது கோவைப்பழச்சாற்றி
லாவது ஒரு ஜாமம் கழுவு எடுக்க நாகவங்காதி தோஷங்கள் நீங்கி சுத்தமாகும்.
சட்குணகந்தக சாரணபலம் :- பாதரசத்திற்கு சமமாக
சுத்திசெய்த கந்தக ரசத்தில் சேருமானால் அந்த ரசம் சுத்திசெய்த ரசத்தை விட 100 பாகம் அதிகமான குணங்களையுடையதாகயிருக்கும். ரசத்தை விட 2 பாகம் அதிகமாய் கந்தக ரசத்தில் சேருமானால் சகலமுட்டங்களை போக்கும். இம்மாதிரியே ரசத்தில்
6 பாகம் கந்தகம் அத்துடன் ஐக்கியபட்டு இரண்டும் சேர்ந்து நெருப்புக்கு ஓடாமல் சாரணை செய்து விட்டால் வெளிச்சம் உண்டாவது போல் , இந்த ரச ஜாரணத்தால் மனிதர்களுக்கு முத்திஞானம் உண்டாகும்.
இரசபற்பம் :- பிரம அத்திப்பாலால் பாதரசத்தை அரைத்து
உருண்டை செய்து மற்றொரு மூசையால் அந்த மூசையை மூடி மண் மூசையில் வைத்து ஏழு சீலை மண் செய்து திஷணமாக வெய்யிலில் உலர்த்தி மிருது புடமிட ரசம் பற்பமாகும்.
வேறு :- சுத்திசெய்த பாதரசத்தை வெற்றிலையில் அரைத்து உருண்டை செய்து அதன் மத்தியில் மேற்கூறிய பதரச உருண்டயை வைத்து மண் மூசையில் வைத்து புடமிட ரசம் பற்பமாகும்.
பாதரசகுணங்கள் :- பாதரசமானது 6 சரங்களுடன் கூடியி
ருக்கும் சுத்திசெய்து பற்பித்தால் திரிதோஷணங்களை நிவர்த்தி இலிங்கக்கட்டு இலிங்கச்செந்தூரம், இலிங்கமாத்திரை, படிகலிங்கச்செந்தூரம், சாதி, கம்பீரக்குழம்பு முதலிய மருந்துகள் தயாரிப்பதுண்டு. இவற்றை சிகிச்சா சாரத்தில் காண்க.
இலிங்கத்தினின்று ரசம் எடுக்கும் விதம் :- ஒரு பங்கு
இலிங்கத்திற்கு 4 பங்கு சித்திரமூல வேர்ப்பட்டையை எடுத்து தூள் செய்து ஒர் பானையில் பாதி பாகத்தை போட்டு , பொருத்தமான மேல் பாணை மூடி சீலை மண் செய்து அடுப்பிலேற்றி முறைப்படி எரித்து ஆறின பின்பு மேற்பானையின் உட்புறத்திலுள்ள பதங்கத்தை
சுரண்டி எடுத்து துணியில் வைத்து பிழிய ரசம் கிடைக்கும்.
இதே இலிங்க ரசம் எனப்படும். இது மிக சுத்தமான ரசம் எனப்படும்.
இரசசெந்தூரம்
இதுவும் இலிங்கத்தைப் போலவே ரசம், கந்தகம் முதலிய
வைகளைச்சேர்த்து செயற்கையில் செய்யப்பட்டு கடைகளில் விற்க்கப்படும். இயற்கையில் கிடைப்பதில்லை. இது பானையோட்டுத் துண்டுகளைப் போல் காணப்படும். இதை வில்லை இரசசெந்தூரம்
எனப்படும். இதன் செயற்கைகுணம் பயன் முதலிய யாவும் லிங்கத்திற்கு கூறியதேயாகும்.
பூரம்
இதனை ரசக்கற்ப்பூரம் என்றும் கூறுவர். இது ரசத்துடன் சில உப்புகளைச்சேர்த்து செய்வதாக கருதப்படுகிறது. இதற்கு மலமிளக்கி, பித்தநீர், புழுக்கொல்லி முதலிய செய்கை உண்டு. இதனால் குன்மம், சூலை, வாதநோய், சொறி, சிரங்கு, குணமாகும். பூரபற்பம், பூரஎண்ணெய்,
பூரக்கழிம்பு முதலிய வெளி மருந்துகளுஞ் செய்வதுண்டு.
வீரம்
இதுவும் ரசம் அல்லது ரச சம்பந்தமான பொருள்களுடன்
சில உப்பு வகைகள் சேர்த்து செயற்கையில் செய்யப்படுவதாம்.ஆனால் பஞ்ச பதங்களுக்குள் இது கொடிய நஞ்சு சரக்காகும். சர்மத்தின் மீது பட்டால் விரணத்தை உண்டாக்கும். இதை உள்ளுக்கு மருந்தாக முடித்து வழங்கும் போது ஜாக்கிரதையாக வழங்க வேண்டும். இதற்கு மேலுக்கு புண்ணுண்டாக்கி, புழுக்கொல்லி, அழுகலகற்றி முதலிய செய்கைகள்
உள்ளுக்கு உடல் தேற்றிய் செய்கை செய்யும். காமத்தை விருத்தி செய்யும். சகல ரோகங்களை குணப்படுத்தும். நேத்திரங்களுக்கு பலத்தையுண்டாக்கும். அறிவு, சவுந்
தரியம் இவைகளை விருத்திச்செய்யும். கிருமிரோகம், குட்டரோகம், சுரம், மேகநோய்கள், விரணம், வாதம், இவைகளைப் போக்கும்.
ரசதோட சாந்தி :- பசுவின் பாலில் சுத்திசெய்த கந்தகத்தை
சேர்த்து 7-நாள் அருந்த பாதரச தோஷத்தால் உண்டான ரோகங்கள் நீங்கிவிடும்.
இரச பற்ப அனுபானம் :- அந்தந்த ரோகங்களுக்குத் தகுந்த
அனுபானங்களுடன் ரசபற்பத்தை கால் முதல் அரை குன்றி எடை வரையிலும் தேகபலத்தையும் ரோகத்தின் பலா பலத்தையு மறிந்து கொடுக்க வேண்டும். மிளகு சூரணம் நெய் இவைகளுடனாகிலும் தேன் திப்பிலிச்சூரணம் இவைகளுடனாகிலும் தேன். பசுநெய்
இவைகளுடனாகிலும் சர்வ ரோகங்களுக்கும் கொடுக்கலாம். பித்த ரோகத்திற்கு பசும்பால் சர்க்கரையுடனும், வாதரோகத்திற்கு திப்பிலி சூரணத்துடனும், கபரோகத்திற்கு இஞ்சிசுரசத்துடனும்
சுரத்திற்கு பழச்சாற்றுடனும், ரத்த விகாரங்களுக்குத் தேனுடனும், அதிசார ரோகங்களுக்கு தயிருடனும் கொடுக்கவேண்டும். மேலும் அதிசாரரோகத்திற்கு மாத்திரம் பசும்பால், சுத்தசலம் இவைகளை சம எடையாய் கலந்து கற்கண்டு போட்டு பத்தியத்துடன் பானம்செய்விக்கவேண்டியது. ரத்தாதிசாரத்தில் சிறுகீரை
ரசத்தோடும், பீனசம் கபரோகம் இவைகளுக்கு வெல்லம், நெய், மிளகுசூரணம் இவைகளுடனும் கொடுத்து தயிர்சாதத்தை பத்தியமாய் கொடுக்கவேண்டியது. வீரியவிருத்தி, வீரியதம்பனம் இவைகளுக்கு உளுந்து, கலியாணபூசணி அதிமதுரம் இவைகளின் சூரணத்
துடன் கொடுத்து பசும்பாலுடன் சர்க்கரையை கலந்து அருந்தச் செய்விக்கவேண்டியது. மாதர்களுக்கு ரஜோநாசம், ரத்தகுன்மம் சூலைரோகம் ஆகிய இந்த ரோகங்களுக்கு கண்டுபாரங்கி, திரிகடுகு
பெருங்காயம், வெல்லம் இவைகளின் சூரணத்தில் பற்பகத்தை கலந்து கொடுத்து கருப்பு எள்ளின் கியாழத்தைக் குடிக்கும்படி செய்யவேண்டியது.
இலிங்கம்
இது இயற்கையாகவே சில பூமிகளில் கிடைக்கின்றது. ஆனால் பெரும்பாலும் நமக்குக் கிடைக்குஞ் சரக்கு வைப்பு முறையில் செய்கையில் செய்யப்படுவதேயாம். இது ரசம் கந்தகம் வெடியுப்பு முதலிய சரக்குகளை முறைப்படிக் கூட்டிச் செய்யப்படுவதாக தெரியவருகின்றது.
இதற்கு சுரமகற்றி, துவர்ப்பி, உடல்தேற்றி செய்கைகள்
உண்டு. இதனால் சுரம், சன்னி, கிரந்தி, முதலிய மேகநோய்கள், வாதநோய் அதிமூத்திரம் முதலியன குணமாகும்.யும் உண்டு. இதனால் குன்மம், குஷ்டம், மேக நோய்கள், விரணம் மகா வாதரோகங்கள், சூலை முதலியன குணமாகும். இதை கொண்டு வீர நீர், வீர வெண்ணெய், வீரக்களிம்பு முதலிய புற மருந்துகளும், வீர மாத்திரை, வீர மெழுகு, அயவீரச் செந்தூரம் முதலிய அக மருந்துகளும் தயாரிப்பதுண்டு.
கந்தகம்
இதில் நான்கு வகையுண்டு. அவைகளில் சுவேதகந்தகம்
விரணங்களுக்கு லேபணம் போடுவதிலும் ர்த்தகந்தகம் சுவர்ணாதி தாதுமாரணங்களினாலும், பீதவர்ணகந்தகம் ரசாயனங்களிலும், கிருஷ்ணவர்ணகந்தகம் சகல கிரியைகளிலும் உபயோகிக்க தகுந்த வைகளென்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த கிருஷ்ண கந்தகம்
அகப்படுகிறது மிகவும் கஷ்டம்.
கந்தக சுத்தி :- இரும்பு பாத்திரத்தில் கந்தகத்தைவைத்து
அதற்கு சமமாய் பசும் நெய் வார்த்து அடுப்பின்மீது ஏற்றி கந்தகம் கறைந்த உடன் பசும்பாலில் விட்டால் சுத்தியாகும்.
கந்தக அனுபானங்கள் :- மாழபிரமாணத்தில் பத்தில் ஒரு
பாகம் கந்தகத்தை உபயோகிக்க வேண்டியது. யவதானியத்தின் கஞ்சியில் சுத்திசெய்த கந்தகத்தை அரைத்து லேபனஞ் செய்தால் தலையின் விரணங்கள் நீங்கும். காசரோகத்திற்கு மிளகு சூரணம் பசு நெய் இவைகளுடனாகிலும் திப்பிலி சூரணம் பசு நெய் இவைக
ளுடனாகிலும் உபயோகிக்கவும். சுவாசரோகத்திற்கு திப்பிலி சூரணம் தேன் இவைகளுடனும், பார்சுவசூலைக்கு வெற்றிலைச் சாற்றிலும் விஷீசிகாரோகத்திற்கு பழச்சாற்றிலும், பிரமேகங்களுக்கு வெல்லத்திலும், அசீரணரோகத்திற்கு நெல்லி வற்றல் சூரணத்தி
லும் குஷ்டரோகத்திற்கு நிம்ப பஞ்சாங்கத்திலும், வாதரோகத்திற்கு துளசிரசம் நெய் இவைகளுடனும், பித்தரோகத்திற்கு பசு நெய்யுடனும், கபரோகத்திற்கு சுக்கு வெல்லம் இவைகளுடனும் கலந்து சாப்பிட்டால் ரோகங்கள் நீங்கும். கரிசாலைச் சூரணம் திரிபலைசூரணம் இவைகளுடன் சுத்திசெய்த கந்தகத்தைக் கூட்டி ஒரு வருஷம் கொடுத்தால் கிழத்தன மில்லாமலிருக்கும். சுத்தி
செய்த கந்தகம், 10-பலம், 5-பலம் கரசனாங்கணிசாற்றால் அரைத்து வெய்யிலி உலர்த்தி அதற்கு பாதிபாகம் கடுக்காய் சூரணத்தை சேர்த்து தேன் பசும்நெய் இவைகளுடன் இரண்டுமாதம் சாப்பிட்டால் கிழத்தனம் நீங்கி விசேஷ பலமும் வீரிய விருத்தியும் உண்டாகும்.
அபக்குவ கந்தகவிகார சாந்தி :- பசும்பாலில் நெய்யைகலந்து பானஞ்செய்தால் அபக்குவ கந்தகசேவையால் உண்டான விகாரங்கள் யாவையும் போக்கி சவுக்கியப்படுத்தும்.
தாளகம்
தாளகத்தை திரிபலைகியாழம், புளித்த கழுநீர், பூசனிச்சாறு,
எள் எண்ணெய், சுண்ணாம்பு நீர், முதலியவைகளில் ஒவ்வொரு ஜாமம் டோலாயந்திரத்தில் வேக வைத்தால் சுத்தியாகும்.
தாளகமாரணம் :- சுத்தி செய்த தாளகத்தை அரசன்பட்டை
சாற்றில் 20 நாள் ஊறவைத்து கல்வத்திலிட்டு அரைத்து பில்லை செய்து உலர்த்தி ஓர் மண் பானையில் அரசம்பட்டை சாம்பலை பாதி வரையிலும் போட்டு தாளக பில்லையை வைத்து அதன் மீது அரசம் பட்டை சாம்பலை நிரப்பி பனைவாயை மூடி சீலை மண் செய்து உலர்த்தி
அடுப்பிலேற்றி 4 ஜாமம் எரித்து சாங்க சீதளத்தில் இறங்கி பார்த்தால் சுத்தமான பற்பமாகும்.
வேறு :- சுத்தி செய்த தாளகத்தை வெள்ளைச்சாரண யிலை ரசத்தில் ஒரு நாள் முழுதும் ஊறவைத்து கல்வத்திலிட்டு அரைத்து பில்லை செய்து உலர்த்தி ஓர் மண் பானையில் அரசம்பட்டை சாம்பலை பாதி வரையிலும் போட்டு தாளக பில்லையை வைத்து அதன் மீது அரசம் பட்டை சாம்பலை நிரப்பி பனைவாயை மூடி சீலை மண் செய்து உலர்த்தி அடுப்பிலேற்றி 40 ஜாமம் எரித்து எடுக்க மேலான பற்பமாகும்.
தாளகபற்பகுணம் :- தாளக பற்பத்தால் எண்பதுவித வாத
ரோகங்கள், பித்தரோகங்கள், கபரோகங்கள், க்ஷயகாசம், குதரோகம் குட்டம், பிரமேகம் சுராதிரோகங்கள் முதலியன குணமாகும்.
அபக்குவ தாளக தோஷம் :- அபக்குவ தாளக பற்பமானது
மஞ்சள் நிறமும் நெருப்பில் போட்டால் புகை உண்டு பண்ணுவதுமாயிருக்கும். இதனால் வாதரோகம், பித்தரோகம், குட்டம், மரணம் இவைகள் சமபவிக்கும்.
சாந்தி :- கலியாணபூசனிக்காய் சுரசமாகிலும், சிறுகாஞ்
சொறி சுரசமாகிலும் சர்க்கரையுடன் கலந்து குடித்தாலும் அல்லது சீரகம் சர்க்கரை சமபாகமாய் கலந்து ஏழுநாள் சாப்பிட்டாலும் தோஷ பற்பத்தினால் உண்டான ரோகங்கள் நீங்கும்.
தாளக பற்பானுபானங்கள் :- சீந்தில்கொடி சூரணத்துட
னாவது அல்லது கியாழத்துடனாவது சாப்பிட்டால் வாதரத்தம், குட்டம் இவைகளை குணமாக்கும். மஞ்சள் சூரணத்துடன் ரத்த தோஷத்திற்கும், வெத்திலைச்சாற்றில் க்ஷயரோகத்திற்கும், பூசினி இரசத்தில் நமைச்சல், உபதம்சம், பகந்தரம், விசர்ப்பம், மண்டல குஷ்டம், வாதரத்தம், விஸ்போடகம் ஆகிய ரோகங்களுக்கும்,
சர்க்கரையில் பாண்டு, க்ஷயம், சுரம் ஆகிய ரோகங்களுக்கும் சாப்பிட்டால் குணமாகும். இந்த பற்பத்தை சாப்பிடும்போது சர்க்கரை பசும்பால் கலந்த அன்னத்தை மாத்திரமே பத்தியமாக சாப்பிட்டு வரவேண்டியது.
வெள்ளைப் பாஷாணம்
இதுவும் கொடிய நஞ்சு சரக்காகும். இதில் ஒரு குன்றி எடை யில் பதினாறில் ஒரு பாகத்திற்குமேல் பயன்படுத்துதல் நல்லதல்ல. ஆனால் இதை மிகச் சிறிய அளவில் முறைப்படி மருந்துகள் முடித்து வழங்கிவர அநேக நோய்களைப் போக்கும். இதற்கு சுரம், முறை
சுரம் முதலியவைகளைப் போக்கல், பசித்தீயை தூண்டல், நரம்புகளுக்கு பலத்தால், உடலைத்தேற்றல் தாதுவிருத்தி யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நாட்பட்ட சுரம், முறைசுரம் மேகப்பிணிகள், நரம்பு சம்பந்தமான வியாதிகள், வாதநோய் முதலியன குணமாகும். இதைக்கொண்டு பாஷாண பற்பம், பாஷாணக்
கட்டு, பாஷாண மாத்திரை முதலிய மருந்துகள் தயாரிப்பதுண்டு.
அப்பிரகம்
அப்பிரகமானது வெண்மை, கருமை, மஞ்சள், புகை முதலிய நிறங்களைத் தனித்தனியேயுடைய நான்கு வகைகளாக கிடைக்கப் படுகிறது. இவற்றுள் கறுப்பு நிறமுள்ள அப்பிரகத்தை கிருஷ்ணாப் பிரகம் என வழங்கப்படும். இதுவே சிறந்ததும் மருந்துகள் செய்வதற்குப் பெரும்பாலும் உபயோகப்படுத்துவதாகும். அபிரேக்கை நெருப்பில் காய்ச்சி பசும்பாலில் தேய்த்து ரேக்கு ரேக்குகளாக செய்து அந்த ரேக்கு களை புளித்தநீர், புளி இவைகளில் தனித்தனியே 2 நாள் வரை ஊற
வைக்க சுத்தியாகும். இவ்வாறு சுத்தி செய்த அபிரேக்கை புளித்தகழுநீர் அல்லது காடி விட்டரைத்து அதற்கு கால்பாகம் நெல்லை சேர்த்து கம்பளியில் கட்டி ஓர் பானையில் கழுநீர் வார்த்து அதில் கிழிகையால்
நன்றாக பிசைந்து தேய்க்கவேண்டியது, பிறகு அப்பானையில் இருக்கும் கழுநீரை கொட்டிவிட்டு அடியிலிருக்கும் அப்பிரகத்தை எடுத்துக்
கொள்ளவேண்டியது, இதை தானியாப்பிரகம் என்று சொல்லுவார்கள். சுத்தமான அப்பிரகத்தை நெருப்பில் காய்ச்சி இலந்தைப்பழ கஷாயத்தில் துவைத்து அரைத்து பில்லை தட்டி வெய்யிலில் உலர்த்தினால் அது தானியாப்பிரகத்தை விட மிகவும் சிரேஷ்டமானது.
அப்பிரகமாரணம் :- சுத்தி செய்த அப்பிரகத்தை எருக்கன்
பாலால் அரைத்து பில்லைசெய்து அந்த பில்லையை எருக்கன் இலைகளால் கவசம் செய்து சீலைமண் செய்து கஜபுடமிட வேண்டியது. இப்படி ஏழுமுறை செய்த பிறகு ஆலன் விழுது கஷாயத்தால் அரைத்து கஜபுடமிட வேண்டியது. இம்மாதிரி மூன்று தடவை கஜபுடமிட்டால் அந்த அப்பிரகம் சிவந்த பற்பமாகும்.
அப்பிரக பற்பகுணம் :- அப்பிரக பற்பத்தால் வாதம், பித்தம், கபம், பிரமேகம், நீரிழிவு, மதுமேகம், குட்டம், சுவாசம், விஷம், பிரமை, குன்மம், காசம், க்ஷயம், கிரகணி, பாண்டு, காமாலை, பசுந்தரம் முதலிய நோய்கள் குணமாகும். வீரியவிருத்தி, பவம் இவை
களை விருத்தி செய்யும்.
அபக்குவ பற்ப தோஷம் :- அபக்குவ அபிரேக்கு பற்ப
மானது தளுக்குகளை பெற்றிருக்கும் இதை உட்கொள்வதினால் நானவித வியாதிகள் உண்டாகி மரணமும் சம்பவிக்கும்.
சாந்தி :- நெல்லிபழத்தை ஜலத்தில் அரைத்து மூன்றுநாள்
காலை மாலை சாப்பிட்டால் தோஷத்தினால் உண்டாகும் ரோகங்கள் எல்லாம் நீங்கிவிடும்.
அபிரேக்கு பற்பபானுபானங்கள் :- அபிரேக்கு பற்பத்தை திப் பிலிசூரணம் தேன் இவைகளுடன் அனுபானித்துக் கொடுத்தால் காசம், சுவாசம், விஷம், பிரமை, குன்மம், காமாலை, பாண்டு, கிரகணிரோகம், கபம், க்ஷயம், பிரமேகம், வாதம், பித்தம், கபம், குட்டம், சீரணசுரம், அரோசகம் இந்த ரோகங்கள் நிவர்த்தியாகும். சிலாசத்து பற்பம், திப்பிலிசூரணம், தேன் இவைகளுடன் அபிரேக
பற்பத்தை கலந்து கொடுத்தால் பிரமேகம் நிவர்த்தியாகும். சுவர்ண பற்பத்துடன் கொடுத்தால் க்ஷயரோகங்கள் நிவர்த்தியாகும். தாது புஷ்டியும் உண்டாகும். ஏலக்காய், சர்க்கரை இவைகளுடன் சாப்பிட்டால் ரத்த பித்தம் போகும். கீழாநெல்லி, சர்க்கரை நெரிஞ்சல் ஏலக்காய் இவைகளின் சூரணத்தைப் பசும்பாலில் கலந்து அப்பிரக
பற்பத்தையும் சேர்த்துசாப்பிட்டால் மூத்திரகிரிச்சரம், பிரமேகம் நீங்கும். சீந்தல்சர்க்கரை, கற்கண்டு இவைகளின் சூரணத்துடன் உட்கொண்டால் சகலவித பிரமேகங்களும் நீங்கிவிடும். திரிபலை சூரணம், தேன் பசுநெய் இவைகளுடன் சாப்பிட்டால்வீரியவிருத்தி யுண்டாகும். நேத்திரரோகம் குணமாகும். சிறுதேக்குசூரணம், திப்பிலிசூரணம், தேன் இந்த அனுபானங்களுடன் கொடுத்தால் கபரோகங்கள் சகலமும் நிவர்த்தியாகும். இலவங்கம், தேன் இவைகளுடன் கொடுத்தால் சுக்கில விருத்தியுண்டாகும். பசுப்பால் சர்க்கரை இதுகளுடன் கொடுத்தால் பித்த ரோகங்களெல்லாம் தீரும்.
காவிக்கல் :- இதனால் உட்சூடு, இரத்தப்போக்கு, சீதரத்த
பேதி, பெரும்பாடு, அக்கிபுண், கண்ணோய் முதலியன குண
மாகும். இதனுடன் சமனெடை பொரித்த படிகாரத்தைச் சேர்த்தரைத்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 4-5 குன்றி எடை வீதம் தினம் 2-3 வேளை கொடுத்துவர எத்தகைய சீதரத்தபேதி பெரும்பாடு, இரத்த மூலம் முதலியனவும் குணமாகும்.
கற்சுண்ணம் :- இதனால் அசீரணம், பேதி, இரத்தப்போக்கு,
விரணம், நீர் சுருக்கு, கடிவிஷம், தீச்சுட்டபுண், நமை சிரங்கு, கபநோய் முதலியன குணமாகும். பசி தீபனம், எலும்பு, சுக்குலம் இவைகளுக்கு பலம் முதலியவைகளை உண்டாக்கும். கற்சுண்ணத்துடன் சிறிது நவாச்சாரங் கூட்டி சீலையிலூட்டி முகரச்செய்ய மூர்ச்சை, மயக்கம், தலைவலி, நாசியடைப்பு முதலியன குணமாகும்.
இதை தேள் கொட்டின விடத்தில் மேற்றேய்க்க விஷம் சற்று இறங்கும். கற்சுண்ணத்துடன் வெல்லம் சேர்த்து மத்தித்து வெட்டு காயம், அடிபட்ட காயங்களில் வைத்துக் கட்ட இரத்தப் போக்கை நிறுத்தும். இதனுடன் சிறிது குப்பைமேனி இலைச்சாறு விட்டு குழைத்து வண்டு, குளவி முதலிய பூச்சுகடிகளுக்கு தடவ குணமாகும். கற்சுண்ணத் தெளிவு நீருடன் சர்க்கரை சேர்த்து 1-2
அவுன்சு வீதம் அருந்த நீர்ச்சுருக்கு, நீரெரிச்சல், உஷ்ண இருமல் முதலியன குணமாகும். கற்சுண்ணத் தெளிவு நீருடன் சமன் தேங்காய்யெண்ணெய் சேர்த்து மத்தித்து நெருப்பு பட்ட விரணம் முதலியவைகட்கு பூசிவர விரைவில் குணமாகும்.
கற்பூரசிலாசத்து :- இதனால் நீர்சுருக்கு, பிரமேகம், உஷ்ண திக்கம், விந்துநஷ்டம் முதலியன குணமாகும்.
கோமூத்திர சிலாசத்து :- இதனால் மூத்திரக் கிரிச்சரம், உள்விரணம், பிரமேகம், உட்சூடு, இரத்தக் கொதிப்பு முதலியன குணமாகும்.
காடிக்காரம் :- இதனால் பேதி, வலி, கண்ணோய், விஷக்கடி கள், கரப்பான் முத்லியன குணமாகும்.
அஞ்சனக்கல் :- இதனால் சுரம், சன்னி, மேகம், கண் சிகப்பு கண் கூச்சம், கண்களில் உண்டாகும். விரணம், பார்வை மந்தம் முதலிய பல நேத்திர நோய்கள் குணமாகும்.
அடுப்புக்கரி :- இதனால் துர்நாற்றமுடன் கூடியஏப்பம், வயிற்றுப்புசம், அசீரண விஷ பேதிகள், சிரங்கு, புண் முதலியன குணமாகும். அடுப்புக்கரியை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு 1 வராகனெடை வீதம் தேனில் கொடுக்க அசீரணபேதி, விஷபேதி, வயிற்றுப்புசம், துர்நாற்றத்துடன் கூடி வருகின்ற ஏப்பம், அபான
வாயு பரிதல் முதலியன குணமாகும். இதை புண் சிரங்குகளுக்கு தூவிவர ஆறும்.
கற்பூரம் :- இதனால் சலதோஷம், இசிவு, சன்னி, வாந்தி, சுரம், மந்தம், தீப்புண், சிலேத்தும வாதப்பிணிகள், கிருமிநோய், செவி நோய், முகநோய் முதலியன குணமாகும். இதைச் சீலையில் முடிந்து முகர்ந்துவர சலதோஷம், தலைவலி, சுரதோஷம் முதலியன
குணமாகும். விஷபேதிகட்கு வழங்கும் மருந்துகளுடன் இதையும் குன்றியெடை சேர்த்துக் கொடுக்க விரைவில் குணப்படும். கற் பூரத்துடன் மஞ்சல்தூள் சேர்த்து சீதளம் மிகுந்துள்ள பாரிசம் களில் தேய்க்க உஷ்ணம் பிறக்கும்.
பச்சைக் கருப்பூரம் :- இதனால் குன்மம், சூலை, வாதம், கபம் மேகப்பிணிகள் முதலியன குணமாகும்.
சாம்பிராணி :- இதனால் சிரநோய், நீர்பீநசம், விழிநோய், பல் நோய், விக்கல், வாதகபம் முதலியன குணமாகும். இதன் புகை துர்நாற்றத்தையும் கிருமிகளையும் போக்கும். இதன் தூளை தேங்காய் நெய்யுடன் குழைத்து விரணங்களுக்கு பூச விரைவில் குணமாகும். இதை வெந்நீர்விட்டரைத்து சீதள சைத்திய வீக்கங்களுக்குபற்றிட
லாம். இதன் புகையை ஆசனத்தில் தாக்க மூலவிரணமும், காதில் தாக்க காதுவிரணம் சீழ்வடிதல் வலி முதலியவைகளும், தொண்டையில் படும்படி வாயில் தாக்க சுவாசகாசம், சலதோஷம் தொண்டை ரணம், இருமல் முதலியவைகளும் குணமாகும். சாம்பிராணியை
நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி முடித்தைலமாக வழங்க தலைவலி, நீர்பீநசம் முதலியன குணமாகும். சாம்பிராணியை சுத்தி செய்து இத்துடன் சமன் வெல்லம் சேர்த்து அரைத்து குன்றியளவு கொடுக்க விக்கல் தீரும்.
கல்நார் :- இதனால் நீர்சுருக்கு, விந்து நஷ்டம், தந்தநோய்,
வயிற்றுவலி, பித்தகாசம் முதலியன குணமாகும். இதில் சீமை கல்நார், நாட்டு கல்நார் என இருவகையுண்டு. இவற்றுள் சீமைக் கல்நாரையே பற்பமாக்கி உள்ளுக்கு வழங்குவதுண்டு. நாட்டுக் கல்நாரை சுத்திசெய்து வெளுக்க வறுத்து இடித்து தூள்செய்து பல்தேய்த்துவர தந்த ரோகங்கள் யாவும் குணமாவதுடன் பற்கள் இருகும்.
நண்டுக்கல் :- இதனால் நீர்சுருக்கு, நீரடைப்பு, கல்லடைப்பு, பிரமேகம், வெள்ளை முதலியன குணமாகும். இதனைச் சுத்தி செய்துப் பொடித்துக் கல்வத்திலிட்டு முள்ளங்கிச்சாறுவிட்டு 5-நாளும், சிறுபீளைச் சாறுவிட்டு 5-நாளும் நன்கு அரைத்து உலர்த்தி வைத்துக்கொண்டு வேளைக்கு 2-முதல் 4-குன்றி எடை தினம் இருவேளை
சோம்புக்குடிநீர், நீர்முள்ளி குடிநீர் முதலியவற்றுடன் சேர்த்துக் கொடுத்துவர நீரடைப்பு, கல்லடைப்பு, மகோதரம் முதலியன குணமாகும்.
செம்புக்கல் :- இதனால் காக்கைவலி, மனத்துயரம், கபப்
பிணிகள் முதலியன குணமாகும். இருதயத்திற்கு பலம் தரும்.
கோமேதகம் :- இது வாதபித்தகோபம், சுரவிகாரம் முதலிய வைகளைப் போக்கும்.
புட்பராகம் :- இதனால் மேக நோய்கள் விலகும். சுக்கில
விருத்தி யுண்டாகும்.
மரகதம் :- இதனால் பூதபைசாசங்களின் தோஷம், பலவிஷம், மதுமேகம் முதலியன குணமாகும். விந்துவை பெருக்கும்.
மாணிக்கம் :- இதனால் சுரம், சன்னி, திரிதோஷம், கண்ணோய் முதலியன போம். வசீகர முண்டாகும்.
வச்சிரம் :- இதனால் நேத்திரரோகம் முதல் பல ரோகங்கள் குணமாகும். சரீர அழகுண்டாகும்.
வைடூரியம் :- இதனால் சிலேத்தும வாத தோஷம், கப
தோஷகங்கள் பயித்தியம் முதலியன குணமாகும்.
நஞ்சுமுரிச்சான் கல் :- இதனால் தாவரவிஷம், மார்பு துடிப்பு, உள்ளுருப்புகளின் விரணம் முதலியன குணமாகும்.
பால் துத்தம் :- இதனால் கரப்பான் கொருக்குப்புண், விழி
நோய்கள் முதலியன குணமாகும்.
சகஸ்திரவேதி :- இதனால் அஸ்திசுரம், தாகசுரம், ரத்தபேதி, வமனம், சன்னி, கபாதிக்கம், கண்ணோய், பிரமேகம் முதலியன குணமாகும்.
எ·கு :- இதனால் தந்தநோய், தந்தமூலநோய், க்ஷ£னசுக்கிலம், வீக்கம், நேத்திரநோய், பாண்டு, சோபை, துர்பலம், க்ஷய காசம் முதலியன குணமாகும்.
கல்மதம் :- இதனால் பிரமேகம், கல்லடைப்பு, நீரடைப்பு,
சதையடைப்பு, மூத்திரக் கிரிச்சரம், தாது நஷ்டம் முதலியன குணமாகும்.
நீலக்கல் :- இதனால் மேகநீர், அதிபித்தம், பாண்டு மனச்
சோர்வு முதலியன குணமாகும். சுக்கில விருத்தி யுண்டாகும்.
மடல் துத்தம் :- இதனால் சுரம், சன்னி, கண்ணோய், மேகப் படைகள் முதலியன குணமாகும்.
1 comments:
very good and usefull article. i suggest to provide the chemical name of the poisons
கருத்துரையிடுக