தங்கம் :- இதனால் ஈளை, காசம், க்ஷயம், தேகவெப்பு, தாது நட்டம், தாவர விஷங்கள், விழிநோய் முதலியன குணமாகும்.
வெள்ளி :- இதனால் வெள்ளை, வெட்டை, காசம், க்ஷயம்,
இரத்தபேதி, நாட்பட்ட சுரம், மேகவாய்வு பிடிப்பு, விழிநோய்
குன்மம் முதலியன குணமாகும். தாது விருத்தியு முண்டென்பர்.
செம்பு :- இதனால் இரத்த பித்தம், குன்மம், பிலீக நோய்
குட்டம் வெண்குட்டம், சுவாசகாசம், கபாதிக்கம் சன்னிபாதம்
முதலியன குணமாகும்.
நாகம் :- இதனால் அதிசாரம், கிரகணி, மூலம், பெளத்திரம்
உட்சூடு, வெள்ளை, வெட்டை, பெரும்பாடு முதலியன குணமாகும்.
வங்கம் :- இதில் கருவங்கம் வெள்வங்கமென இருவகையுண்டு இவ்விரண்டின் குணங்களும் ஏறக்குறைய ஒத்திருக்கும். இவற்றால் மேகப்பிணிகள், குட்டம், பகந்தரம், கிரந்தி, புண், மதுமேகம் முதலியன குணமாகும்.
அயம் :- இதனால் பாண்டு, சோபை, காமாலை, தாதுநட்டம், வெண்குட்டம், அதிஸ்தூலரோகம் முதலியன குணமாகும். மற்றும் இதனால் மல விருத்தியும் தீபனமும் உண்டாகும்.
வெண்கலம் :- இதனால் விழிநோய், இரத்தபித்தம், வெகு
மூத்திரம், பெருவயிறு, குன்மம், சூலை, இரைப்பு முதலியன குணமாகும்.
பித்தளை :- இதனால் சுரம், வாதம், பித்தகுன்மம் முதலிய
பிணிகள் தீரும். சுக்கிலப் பெருக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும்
உண்டாகும்.
தரா :- இதனால் கீழ்பிடிப்பு, வெள்ளை வீழ்தல், கபவாததொந்தம் ஆகியவைகள் போகும். இது தாம்பரமும் நாகமும் சேர்ந்த கூட்டுறவான லோகமெனப்படும்.
மேற்கூறப்பட்ட உலோகங்களை பற்பங்களாகவோ செந்தூரங்களாகவோ செய்துதான் பெரும்பாலும் வழங்கப்படும். அத்தகைய மருந்துகளுக்கே மேற்கூறப்பட்ட குணங்களென்றறிய வேண்டும்.
இவைகளில் வெங்கலம், பித்தளை, தரா முதலிய உலோகங்களை தனியாக பற்ப செந்தூரங்கள் செய்து வழங்குவது வழக்கிலில்லை. மற்ற உலோகங்களைக் கொண்டு செய்யும் மருந்து முறைகளில் சில
வற்றை இந்நூலில் காணலாம். மற்றுமிவைகளைக் குறித்து விசேஷமாக பொருட்பண்பு விளக்க நூல்களில் கண்டுணர்க.
தங்கம்
சுவர்ண பரீ¨க்ஷ :- பொன்னை நெருப்பிலிட்டுக் காய்ச்சினால் அது சிகப்பு நிறத்துடன் கலந்ததாகயிருந்தால் சிறந்ததென்றும் வெண்மை நிறமாகயிருந்தால் மட்டமென்றும் அறியவும்.
சுவர்ணமாரணம் அல்லது பொன் பற்பம் :- சுத்தி செய்த
பொன்னை ராவிப் பொடித்துக் கல்வத்திலிட்டு அதற்குச் சமமாக சுத்தி செய்த பாதரசத்தைவிட்டு அரைத்து உருண்டையாக்கி அந்த உருண்டைக்குச் சமமாக சுத்தி செய்த கெந்தியை அரைத்து அந்த உருண்டையின் மேல் கவசஞ்செய்து அகலில்வைத்து மேலுக்கு ஒரு அகலை வைத்து மூடி, சீலைமண்செய்து முப்பது காட்டுவிறட்டி
யில் புடம்வைக்க வேண்டியது. இப்படி பதினாறு புடம்போட
பொன்பற்பமாகும்.
வேறு :- சுத்தி செய்த பொன்னை மூசையிலிட்டு அது உருகும் போது அதில் வீசம்பாகம் ஈயத்தைக்கலந்து நன்றாய் உருகினபிறகு ஆறவைத்துக் கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாறுவிட்டு அரைத்து உருண்டையாக்கி அதற்குச் சம எடை சுத்தி செய்த கெந்தியைப் பொடித்து அதில் பாதிபாகம் அகலில்வைத்து அதன்மேல் உருண்
டையைவைத்து அதன்மீது மற்ற கெந்தியைபோட்டு மேலகல்மூடிச் சீலைமண்செய்து முப்பது காட்டெருவில் புடம் போடவும். இப்படி ஏழு புலமிட பொன்னானது தோஷமற்ற பற்பமாகும்.
வேறு :- சுத்தி செய்த பொன்னை மெல்லிய ரேக்குகளாக்கி கரி சாலைச்சாற்றால் சவ்வீரத்தையரைத்து அந்த ரேக்குகளின்மீது தடவி அகலில்வைத்து சீலைசெய்து ஒருகஜபுடமிட நல்ல பற்பமாகும்.
சுவர்ன பற்பத்தின் குணம் :- பொன் பற்பமானது காந்தி
யையும், வலியையும், தீபனத்தையும் உண்டாக்கும். வாதம், பித்தம், பிரமேகம், காசம், சுவாசம், க்ஷயம், கிரகணி, அதிசாரம், சுரம், குஷ்டம், விஷம் ஆகிய ரோகங்களை குணப்படுத்தும். வாலிபத்தையும், காமத்தையும், பலத்தையும், சுகிலத்தையும் விருத்திசெய்யும். ருசியை உண்டுபண்ணும்.
அபக்குவ தங்கபற்ப தோஷம் :- இதை அருந்துவதால் பலத்தையும் வீரியத்தையும் கெடுக்கும். ரோகவிருத்தி, அசௌக்கியம், மரணம் இவைகளை உண்டுபண்ணும். ஆகையால் சுத்தமான பஸ்பத்தை அருந்தல்வேண்டும்.
அபக்குவ சுவர்னபற்ப தோஷசாந்தி :- கடுக்காய்ச்சூரணம், கற்கண்டு இவைகளை சம எடையாக சேர்த்து மூன்றுநாள் சாப்பிட்டால் அபக்குவத்தால் வாய்ந்த ரோகங்கள் சகலமும் நீங்கிவிடும்.
சுவர்ணபற்ப அனுபானங்கள் :-சுவர்ணபற்பத்தை கரிசாலைச் சாற்றிலருந்த புணர்ச்சியில் வலிவும், பாலில் அருந்த உடல் வலிவும் உண்டாகும்.
வெள்ளைச்சாரனை சாற்றில் கொடுத்தால் நேத்திர ரோகம்
போம். பசுவின்நெய்யில் கலந்து கொடுத்தால் கிழத்தனம்போம்.
வசம்புகியாழத்தில் கொடுத்தால் அதிக ஞாபகசக்தி யுண்டா
கும். கடுகுரோகணி கியாழத்தில் கொடுத்தால் தாபத்தைப்
போக்கும்.
குங்குமப்பூவுடன் கலக்கிக் கொடுத்தால் சரீரத்தில் காந்தி ஏற்படும். இத்துடன் கறந்தபாலும் சேர்த்துக்கொடுத்தால் கடினமான க்ஷயரோகமும் போம்.
இலவங்கம், சுக்கு, மிளகு இவைகளின் சூரணத்துடன் கலந்
துக் கொடுத்தால் உளமாந்தை, பைத்தியம், திரிதோஷ பிரகோபம் முதலியன நீங்கும்.
தேன், நெல்லிக்காய் இவைகள் இரண்டையும் கலந்து சுவர்ன பஸ்பம் சேர்த்துக்கொடுத்தால் கிரகணி நீங்கும். தேனில் கலந்து கொடுத்தால் விஷ உபத்திரவங்கள் நிவர்த்தியாகும்.
தாமரைத்தண்டு இரசத்துடன் கலந்துக்கொடுத்தால் ஆயுள்
விருத்தியும் நிலப்பூசினிக்கிழங்கு கியாழத்துடன் கலந்து கொடுத்தால் புத்திரோற்பத்தியும் உண்டாகும்.
வெள்ளி
வெள்ளியின் பேதங்கள் :- ரஜிதமென்ற வெள்ளியானது,
கனிஜம் வேதஜம்-வங்கஜம் என மூன்று வகைப்படும்.
மேற்கூறிய மூன்றுவித வெள்ளியில் வேதஜம்-வங்கஜம் என்கிற இருவகை வெள்ளி மிருதுவாயும் வெண்ணிறமாயும் யிருப்பதால் இவைகள் சிரேஷ்டமானவைகள். ஆகையால் இவைகள் பஸ்மாதி
களுக்கு உபயோகமானவை. கனிஜமானது வெண்மையாக யிருந்தாலும் மிருதுத்துவ மில்லாமையால் ஔடதங்களுக்கு உபயோகிக்கக் கூடாதென்று கூறப்பட்டுள்ளது.
ரஜிதமாரண விதம் :- சுத்திசெய்த வெள்ளியை சிறியரேக்குகளாக அடித்து இதற்குச் சமனெடையாக இரசத்தையும் கெந்தியையும் ஜலம்விட்டு அரைத்து அந்த வெள்ளி ரேக்குகளின்மீது தடவி நிழலிலுலர்த்தி ஒரு பானையில் வைத்தும் மேல்மூடி ஒருநாள் முழு
தும் காடாக்கினியில் எரித்தால் சுத்தமான பற்பமாகும்.
வேறு :- சுத்திசெய்த வெள்ளிரேக்குகளுக்கு நான்குபாகம்
சுத்திசெய்த தாளகத்தைப் பழச்சாற்றால் அரைத்து ரேக்குகள்மீது தடவி உலரவைத்து அகலிலிவைத்து மேல் அகல் மூடிச் சீலைமண் செய்து, 30-காட்டு எருவில் புலமிடவும். இம்மாதிரி மூன்று புடமிட்டால் சுத்தமான வெள்ளி பற்பமாகும்.
வேறு :- சுத்திசெய்த வெள்ளியை மிருது ரேக்குகளாக்கி
அதற்கு நான்குபாகம் மாதுளையிலை, முள்ளங்கியிலை இவைகளின் கற்கத்தில் வெள்ளிரேக்குகளைப்போட்டு இரண்டுநாள் ஊறவைத்து அதை ஒரு அகலில் வைத்து மேலுக்கு மற்றொரு அகலால்மூடி சீலை மண் செய்து வராகபுடமிடவும். இப்படி மூன்று புடமிட வெள்ளி
சுத்தமான பற்பமாகும்.
ரஜிதபற்ப குணம் :- வெள்ளி பற்பம் சாதாரணமாய் சகலமான ரோகங்களையும் போக்கடிக்கும். பித்தம், வாதம், கபம், குன்மம், பிரமேகம், சுவாசம், காசம், பீனசம், க்ஷயம், இருதய பலயீனம், விஷம், நரை, தாதுநஷ்டம், சோபை, இவைகளைப் போக்கும். காந்தி, புஷ்ட்டி, ஆயுசு இவைகளை விருத்திச் செய்யும். அக்கினி தீபனத்தை யுண்டாக்கும்.
அபக்குவ ரஜிதபற்ப தோஷம் :- அபக்குவமான வெள்ளிபற்பம் சாப்பிடுவதால் சரீரத்தில் தாபம், மலபந்தம், சுக்கிலநாசம், பலயீனம், ஆயாசம், கோரமான வியாதிகள் உண்டாகும்.
சாந்தி :- சர்க்கரை தேன் இந்த இரண்டையும் கலந்து மூன்று நாள் இருவேளை சாப்பிட்டால் அபக்குவ ரஜிதபற்பத்தால் உண்டான ரோகங்கள் நீங்கும்.
ரஜித பற்ப அனுபானங்கள் :- வெள்ளி பற்பத்தை தாப
ரோகத்திற்கு சர்க்கரையுடனும், வாதபித்த ரோகத்தில், திரிபலை சூரணத்துடனும், பிரமேகத்தில் திரிசுகந்தம் சூரணத்துடனும், குன்மத்தில் சத்திக்ஷ¡ரத்தோடும், காசம், கபம் இந்த ரோகங்களுக்கு திரிகடுகு சூரணத்துடனும், ஆடாதோடை இரசத்துடனும், சுவாசரோகத்தில் சிறுகேக்கு, சுக்கு இவைகள் சூரணத்தோடும், கஷய ரோகத்திற்க்கு சிலாசத்து பற்பத்தோடும், தாதுநஷ்டம், பலயீனம் முதலியவைகட்கு பசுவின் பாலோடும், யகீருந்து
பீலிகைரோகம் இவைகட்கு திரிபலை திப்பிலி சுரணத்தோடும் சோபைக்கு வெள்ளைச்சாரணை இரசத்தோடும், பாண்டுரோகத்திற்கு, மாண்டுரத்துடலும் புசித்தால் மேற்கூறிய ரோகங்கள் சூரியயனைக்கண்ட பனிபோல் நீங்கி விடும். இந்த பற்பத்தை நெய்யில்
சாப்பிட்டால் கணம் பித்தநரை இவைகள் நீங்கும்.
தாம்பரம்
தாம்பர பேதங்கள் :- தாம்பரம் என்ற செம்பானது மிலேச்சம், நேபாளஜம் என இரு வகைப்படும். இவற்றுள் மிலேச்சம், என்பது கழுவினாலும் சிறிது கருஞ்சாயலாக இருக்கும். நேபாளம் என்பது சிவந்த நிறமாகத்தோற்றும், ஆசையால் மருஞ்து முறைகட்கு இந்த நேபாளஜத்தையே உபயோகிக்க வேண்டும்.
தாம்பர தோஷம் :- வாந்தி,பிராந்தி, விரேசனம், இளைத்தல் தாபம், வீரியநாசம், நமைச்சல், சூலை என்கிற எட்டு வித தோஷங்கள் செம்புக்கு உடைத்தானது.
நல்லெண்ணெய், மோர்,நோமூத்திரம், இவைகள் வாந்தியை யும், புளித்த காடி, கொள்ளு, இவைகள் பிராந்தியையும் கள்ளிப்பால், பசும்பால் இவைகள் இளைப்பையும், புளியின் இரசம், பழச்சாறு இவைகள் தாபத்தையும், காட்டுவாழை, கற்றாழை இவைகளின்
இரசம் சுலைரோகத்தையும், பசும்பால், நெய், இவைகள் நமச்சலையும் தேன் வீரியநாச தோஷத்தையும், தயிரின் ஏடு,காட்டுகருணைக்கிழங்கு ரசம் இவைகள் பேதியையும் போக்கும்.
ஆகையால் தம்பரத்தை சிறிய துண்டுகளாக்கி தகடடித்து
நெருப்பில் சிவக்க காய்ச்சி மேற்கூறிய ஒவ்வொரு சாற்றிலும் ஏழு முறை தேய்த்து எடுக்க தாம்பரம் நல்ல சுத்தியாகும்.
தாம்பரமரணம் :- சுத்தி செய்த தாம்பரத்தை கல்வத்தி
லிட்டு அதற்கு பாதி பாகம் சுத்தி செய்த பாதரசத்தைச் சேர்த்து தாம்பரதுண்டுகள் வெள்ளையாகும் வரையிலும், பழச்சாற்றால் ஆட்ட வேண்டியது, பிறகு அந்த துண்டுகளுக்கு இரண்டு பாகம் சுத்தி செய்து கெந்தியை காடி நீரில் அரைத்து அந்த தாம்பரத்துண்டுகளுக்குத் தடவி உலர்த்தி அகலிலடக்கி சீலை மண்செய்து, அதை
மணலும், சாம்பலும், போட்ட பெரிய பானையின் மத்தியில் வைத்து மந்தாக்னியாக நான்கு ஜாமங்கள் எரித்தால் தாம்பரம் பற்பமாகும்.

பிறகு அந்த பற்பத்தையும் அடற்க்குப் பாதிபாகம் சுத்தி செய்த கந்தகத்தையும் அத்துடன் கலந்து காட்டுக ்கருணைக்கிழங்கு இரசத்தால் இரண்டு ஜாமம் அரைத்து அகலில் வைத்து சீலைமண் செய்து முன்போல்
கஜபுடமிடவும் பிறகு அந்த தாம்பிர பற்பத்தையும் அதற்கு கால் பாகம் சுத்தி செய்த கெந்தியையும் சேர்த்து, பசுவின் பால், மோர், நெய், நோமயம் இவைகளில் தனித்தனியே அரைத்து புடமிடவும்.
சுத்தமான தாம்பர பற்பம் மயிலின் கண்ட நிறத்திற்க்கு சமான நிறத்தைப் பெற்றிருக்கும் அந்த தாம்பிர பற்பத்தை சாப்பிடுவதில் வாந்தியாகுமாயின் மறுபடியும் அதை பசுவின் பாலில் அரைத்து சில புடமிட்டு பிறகு உபயோகிக்கவும்.
வேறு :- தாம்பரத்துண்டுகளுக்கு சமயெடையாய் சுத்திசெய்த இரசம், சுத்திசெய்த கெந்தி இவை இரண்டையும் கல்வத்திலிட்டு புளியின் இரசத்தால் அரைத்து அதை செம்புத் துண்டுகளுக்கு தடவி
அகலில் வைத்து அதன் மேல் மறு அகலில் மூடி சீலை செய்து கஜபுடமிடவும், இந்தமாதிரி மூன்று கஜபுடமிட செம்பானது தோஷமற்ற பற்பமாகும்.
வேறு :- சுத்திசெய்து செம்பு ரேக்குகளுக்கு, கால் பாகம் சுத்தி செய்த பாதரசம் தடவி புளியின் இரசத்தால் சுத்திசெய்த கெந்தியை அரைத்து அதை செம்பு ரேக்குகளுக்கு, தளமாய் தடவி உலர்த்தி
பானையில் புளிகரைத்ததை வார்த்து, அதற்கு நடுவில்
தாம்பிரரேக்குகளை வைத்து ஒரு ஜாமம் எரித்தால் தாம்பிரபற்பமாகும். இந்த பற்பம் சகலரோகங்களையும் குணப்படுத்தும்.
தாம்பர பற்பகுணம் :- தாம்பர பற்பத்தால் காசம், சுவாசம்
கபம், வாதரோகம், பீலிகம், உதரரோகம்,கிருமிரோகம், குட்டம், சூலைகள், சுரங்கள், நமைச்சல், வாந்தி,சோபை, பாண்டுரோகம், மூர்ச்சை, மூலரோகம், அதிசாரம், கஷயம், குன்மம், தலைவலி, விக்கல், பிரமேகம், பிரமை முதலிய ரோகங்கள் குணமாகும்.
அபக்குவதாம்பர பற்பதோஷம் :- அபக்குவபற்பத்தால்
வாந்தி, பேதி, தாபம், பிரமை, மூர்ச்சை, பிரமேகம், பலநாசம்
முதலிய ரோகங்கள் உண்டாகும்.
சாந்தி :- கற்கண்டு, காட்டுதானிய அரிசி அல்லது கொத்து
மல்லி இவை இரண்டையும் சமபாகமாக எடுத்து ஜலத்தில் விட்டு அரைத்து மூன்று நாள் காலை மாலை குடித்து வந்தால் அவ்விஷத்தினால் உண்டாகும். நோய்கள் குணமாகும்.
தாம்பர பற்ப அனுபானம் :- தாம்பர பற்பத்தை, திப்பிலி
தேன், முதலிய அனுபானத்தில் சகலரோகங்களுக்கு கொடுக்கலாம். மற்றும் இதனை தங்க அனுபானங்களில் கொடுத்து வர பல பிணிகள் போம்.
நாகசுத்தி :- நாகத்தை நெருப்பில் வைத்து உருக்கி கற்றாழை சாற்றிலும் திரிபலை குடிநீரிலும் தனித்தனியே ஒவ்வொன்றிலும் ஏழு முறை வீதம் சாய்த்து கழுவியெடுக்க நல்லசுத்தியாகும்.
நாகமாரணம் :- சுத்திசெய்த நாகத்தை சட்டியிலிட்டு அடுப்
பில் ஏற்றி எரித்து கெட்டியான அருக்கன் வேரால் மூன்றுஜாமங்கள் தேய்த்து வந்தால் பற்பமாகும்.
வேறு :- நாகம் அதற்கு சமபாகம் சுத்திசெய்த மனோசிலை
இவைகளை கல்வத்திலிட்டு ஆடாதோடை சாற்றால் அரைத்து மூன்று குக்குட புடமிட பற்பமாகும்.
நாகபற்பகுணம் :- நாகபற்பத்தால் வாதரோகம், கஷயம்,
குன்மம், பாண்டு, சூலை, பிரமை, கபம், அக்கினிமந்தம், காசம், சுக்கிலதோஷம், முதலியாதி, கிரகணி, கிருமிரோகம், முதலியவை கள் நிவர்த்தியாகும். நூறு யானையின் பலமும் ஆயுள் விருத்தியும் உண்டாகும்.
அபக்குவநாகபற்பதோஷம் :- அபக்குவநாகபற்பத்தால்
ரத்ததோஷம், கபம், பாண்டு, குன்மம், கஷயம், குஷ்டம், அருசி, சுரம், அஸ்மரீரோகம், மூத்திரகிரிச்சரம், சூலைகள், பகந்தர முதலிய நோய்கள் உண்டாகும்.
நாகதோஷசாந்தி :- வசம்பு, கடுக்காய் முதலிய சூர
ணத்தை சர்க்கரையுடன் சேர்த்து மூன்று நாள் சாப்பிட்டால் அபக்குவநாகபற்பத்தால் உண்டாகும் ரோகங்கள் தீரும்.
நாகபற்பஅனுபானம் :- நாகபற்பத்தை கற்கண்டுடன் சாப்
பிட்டால் வாதம், பித்தம், தலைநோய், நேத்திரரோகம், சுக்கில தோஷம், தாபம், பிதற்றல் இவை நீங்கும். காமவிருத்தியாகும். மற்றும் இதனை நோய்க்கு தக்க அனுபானங்களில் வழங்குவது வைத்தியர்களின் கடமையாம்.
வங்கம்
வங்கபரீஷை :- வெண்மையாயும் கடினமாயும் இருக்கும்
வங்கமே மருந்துகள் செய்வதற்குச் சிறந்தது. இதர தாதுக்களுடன் மிசிரமான வங்கத்தை உபயோகிக்க கூடாது. சுத்திசெய்த வங்கத்தை சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி எரித்து உருகி வரும் போது வங்கத்தின் எடைக்கு இரண்டு எடையுள்ள திரிபலை சூரணத்தை சிறிது சிறிதாக தூவி வேப்பங்கொட்டை கொண்டு தேய்த்து வறுத்து வர வங்கமானது மடிந்து பூர்த்து பற்பமாகும்.
வேறு :- சுத்திசெய்த வங்கத்தை சட்டியிலிட்டு அடுப்
பில் ஏற்றி எரித்து உருகி வரும் போதுநாயுருவியுப்பு வங்கத்தின் எடையில் நான்கிலொன்றை கிராசங்கொடுத்து இரும்பு கரண்டிகொண்டு தேய்த்து வர மடிந்து பற்பமாகும். பிறகு இதை நாயுருவிச்சாறு விட்டரைத்து வில்லைத்தட்டி கஜபுடமிட பற்பமாகும்.
வங்க பற்பகுணம் :- வங்க பற்பம் சுவசம், பிரமேகம், வாதம் பெரும்பாடு, சூலை, கபம், கபம், பாண்டு, வாந்தி, கஷயம், முதலிய நோய்கள் உண்டாகும்.
அபக்குவவங்கதோஷம் :- இதன் உபயோகத்தால் குன்மம் குட்டம், பிரமேகம், வாதம், ரத்ததோஷம், அக்னிமந்தம், பாண்டு, பலயீனம்முதலிய நோய்கள் உண்டாகும்.
சாந்தி :- கற்கண்டு, ஒத்தியன்பட்டை இவைகளை சமமாக சூரணித்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் வங்க தோஷத்தால் சனித்த ரோகங்கள் நீங்கும்.
வங்க பற்பஅனுபானம் :- வங்க பற்பத்தை பசுவின்
பாலுடன் அல்லது சாதிக்காய் சூரணத்துடன் சாப்பிட்டால் புஷ்டி யுண்டாகும். பிரமேக ரோகத்திற்கு துளசி சாற்றிலும், குன்மந்திற்கு இஞ்சிசாற்றிலும், பாண்டு ரோகத்திற்கு பசுவின் நெய்யிலும், மேற்சுவாசம் இரத்தபித்தம் இவைகளுக்கு மஞ்சள் சூரணத்தோடும், பித்தத்திற்கு சர்க்கரையோடும், உட்கொள்ளகுணமாகும்.
இன்னும் வங்க பற்பத்தை பலத்திற்கு தேனிலும் வீரிய தம்பனத்திற்கு கஸ்தூரி அல்லது வெற்றிலையுடனும், அக்னிமந்ததிற்கு திப்பிலிச் சூரணம் கஸ்தூரி இவைகளுடனும் அஜீரணத்திற்கு நெல்லிவற்றல்
சூரணதுடன் அல்லது கொட்டைப்பாக்கு சூரணதுடனும்
அஸ்திகத சுரத்திற்கு வங்காயத்துடனும், குட்டத்திற்கு நொச்சிலை சூரணதுடனும் அருந்த குணமாகும்.
லோகம்
இதற்கு இரும்பு அயம் என்ற வேறு பெயர்களுமுண்டு.
லோகபேதம் :- காந்தம், தீஷணம், முண்டம், என லோக
மானது மூவகைப்படும். அவைகளில் காந்தம், தீஷணம், உத்தமம் மத்திமம், முண்டம், அதமம் என்றும், வைத்திய சாஸ்திரம் முறையிடுகின்றது. ரோமகம், பிராஜிகம், சும்பகம், திராவகம் என காந்தமானது நான்கு விதப்படும் அவைகள் ஒன்றைவிட மற்றொன்று மிகவும் சிறந்தது.
லோகசுத்தி :- லோகத்திற்கு தாம்பரத்திற்கு சொல்லிய பிர
காரம் சுத்திகள் செய்ய வேண்டும். ஆனால் திரிபலை கியாழத்தால் விசேஷமாய் சுத்தி செய்ய வேண்டும். சுத்தி செய்யும் லோகமானது சுமார் பதிமூன்று பலத்திற்கு மேற்படாமலும் ஐந்து பலத்திற்கு குறையாமலும் இருக்கவேண்டியது.
லோகமரணம் :- லோகத்தை சிறிய ரேக்குகளாக்கி சுத்தி
செய்த கந்தகத்தை சலத்தால் அரைத்து ரேக்குகளுக்கு தடவி நெருப்பில் காய்ச்சி பொண்ணாங்கண்ணி இரசத்தில் தேய்க்கவேண்டியது அந்த ரேக்குகள் பொடியாகிற வரையில் பல தடவை நெருப்பில் காய்ச்சி பொண்ணாங்கண்ணியிலை இரசத்தில் தேய்த்துக் கொண்டிருக்க வேண்டியது. பிறகு அந்த துண்டுகளுக்கு சமனெடை சுத்தி செய்த பாதரசம், சுத்திசெய்த கந்தகம் இவைகளை சேர்த்து பொண்ணாங்கண்ணியிலை, நொச்சியிலை, ஆடாதோடாயிலை இவைகளின்
சாற்றில் தனித்தனியே அரைத்து வெவ்வேறாக கஜபுடம் போட்டால் லோகம் பற்பமாகும்.
வேறு :- சுத்திசெய்த லோக சூரணத்தை திரிபலை கியாழத்
தால் உருண்டை செய்து உலர்த்தி சராவசம் புடத்தில் வைத்து சீலை செய்து காற்று இல்லாத இடத்தில் பதினாறு அங்குலம் ஆழமான பள்லத்தை தோண்டி அதில் புடமிட வேண்டியது. இந்த மாதிரி அறுபத்திநாலு புடம் போட்டால் புஷ்பராகத்திற்கு ஒப்பாக நிறமுள்ள லோக பற்பமாகும்.
வேறு :- சுத்திசெய்த பாதரசம் 1-பாகம், சுத்திசெய்த கந்தகம்
2-பாகம் லோக சூரணம் 3-பாகம் இவைகளை கல்வத்தில்போட்டு கற்றாழைசாற்றால் அரைத்து அதை செம்பு பாத்திரத்தில் வைத்து அந்த பாத்திரத்தின் முகத்தை ஆமணக்கு இலையால் செவ்வையாக மூடி இரணடு ஜாமங்கள் வரையிலும் கடூரமான வெய்யிலில்வைத்து
பாத்திரத்திற்கு உஷ்ணம் உண்டான உடனே அதையெடுத்து நெற் குவியலினிடையே மூன்றுநாள் வரையிலும் மூடிவைத்து பிறகு அதை எடுத்து அரைத்தால் பற்பமாகும்.
லோக பற்ப குணம் :- லோக பற்பத்தால் கிருமிரோகம்,
வாதரோகம், பாண்டு, விஷம், சுரம், பிரமை, வாந்தி, சுவாசம், கிரகணி, கபம், கிழத்தனம், காசம், க்ஷயம், காமாலை, அருசி, பீநசம், பித்தம், பிரமேகம், குன்மம், ஆமவாதம், பிலீகம் என்கிற ரோகங்கள் நிவர்த்தியாகும்.
அபக்குவ அய பற்ப தோஷம் :- அபக்குவமான அய பற்பத்
தால் விஷம் சிலேத்துவம் இவைகள் உண்டாகும். வீரியம் காந்தி இவைகளை நாசப்படுத்தும்.
சாந்தி :- கற்கண்டு, தேன் இவைகளில் ஏலரிசி சூரணத்தை
கலந்து மூன்று நாள் அருந்தினால் அபக்குவ பற்பத்தால் ஏற்பட்ட சகல வியாதிகளும் நிவர்த்தியாகும்.
லோகபற்ப அனுபானம் :- கண்டுபாரங்கி, திரிகடுகு, தேன்
இந்த அனுபானங்களுடன் சாப்பிட்டால் தாதுவிகாரங்கள் நீங்கும். இலவங்கம், இலவங்கப்பத்திரி, ஏலரிசி, சிறுநாகப்பூ இவைகளின் சூரணமும் சர்க்கரையும் சேர்த்த அனுபானத்துடன் அயபற்பம் கூட்டிக் கொடுத்தவர பித்தரோகம் நிவர்த்தியாகும். வெள்ளைச் சாரணை சூரணம் பசுவின்பால் அனுபானத்தில் சாப்பிட்டால்
விஷேச பலம் உண்டாகும். வெள்ளைச்சாரணை கியாழத்தில் அனு பானித்து சாப்பிட்டால் பாண்டுரோகம் நீங்கும். மஞ்சள் சூரணம், தேன் இவைகளுடனாவது, திப்பிலி சூரணம் தேன் இவைகளுடனாவது சாப்பிட்டால் அநேகவித பிரமேகங்கள் நீங்கும். சிலா சத்து பற்பத்துடன் அனுபானித்து சாப்பிட மூத்திர கிருச்சிர ரோகங்கள் நிவர்த்தியாகும். ஆடாதோடை, லோகபற்பம், திப்
பிலி சூரணம், திரா¨க்ஷ, தேன் இவைகளை யொன்றாய் கலந்து புசித்தால் ஐந்துவிதமான காசங்கள் நிவர்த்தியாகும். இந்த லோகபற்பத்தை வெற்றிலையுடன் சாப்பிட்டால் தாதுபுஷ்டி, சரீரகாந்தி, பசி தீபனம் இவைகளுண்டாகும்.
மண்டூரம்
லோகத்திற்கு சொல்லியிருக்கும் சகல குணங்களும் இரும்பு சிட்டமென்ற மண்டூரத்திற்கும் உண்டாயிருக்கும். இதை நெருப்பில் காய்ச்சி கோமூத்திரத்தில் ஏழுமுறை தோய்த்தெடுக்கசுத்தியாகும். இம்மாதிரி சுத்திசெய்த மண்டூரத்தை இடித்துச் சூரணித்து கோமூத்திரத்தால் அரைத்து பில்லைசெய்து உலர்த்தி அகலிலடக்
கிச் சீலைமண் செய்து ஒரு கஜபுடமிட்டால் சுத்தமான மண்டூர செந்தூரமாகும். இதை லோகபற்பத்தைப்போலவே உபயோகிக்கவும். அயசம்பந்தமான பற்ப செந்தூரங்களைப் புசிக்கின்றவர்கள் கடுகு, கள்ளு, உளுந்தினால் செய்த சகலவித பண்டங்கள், புளிப்பு, நல்லெண்ணெய், கீரைகள், பூசணிக்காய், வாழைத்தண்டு முதலிய பதார்த்தங்களை நீக்கவேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக