ஞாயிறு, ஜனவரி 10, 2010

கஞ்சி,அன்னப்பால் , அரிசி -பண்பு & குணங்கள்

அரிசியுடன் முறைப்படி நீர் சேர்த்து கொஞ்சங்கூட கஞ்சியில்லாம்ல் வடித்தெடுத்த அன்னத்திற்கு ஒதனமென்று பெயர். இதுவே சாதாரண அன்னமாம். இதனால் விரணயோகம், நேத்திரரோகம், துர்பலம், தைல பாணத்தால் உண்டான தோஷம் முதலியன நீங்கும். தீபன முண்டாகும்.

ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு நீர் விட்டு கஞ்சியை வடிக்காமல் எடுத்த அன்னத்திற்கு விலேபி என்று பெயர். இது தேகத்திற்கு ஆரோக்கியம், பசி பாசனம் முதலியவைகளை உண்டாக்கி கிரகணி முதலியவைகளை போக்கும்.

ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பாகம் நீர் சேர்த்து சிறிது சாதம் தென்படும்படி காய்ச்சிய கஞ்சிக்கு பேயம் என்று பெயர். இது பசி, தாக்ம், ஆயாசம், துர்பலம், சுரம், வாதம் இவைகளை தணித்து பசிதீபனத்தை யுண்டாக்கும்.

ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பங்கு நீர் சேர்த்துக்கொஞ்சங்கூட அன்னம் தெரியாம்ல் சுத்த கஞ்சி சலம்போல் காய்ச்சிய கஞ்சிக்கு மண்டமென்று பெயர். இது தாகம், ஆயாசம், தோஷம் இவைகளை நீக்கும். தாதுவிருத்தி, தீபனம், வியர்வை இவைகளை யுண்டாக்கும். இது மிகவும் மெலிந்தவர்களுக்கும் அதிசார நோயினருக்கும் பயன்படும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக