ஞாயிறு, ஜனவரி 10, 2010

காய்கள் -பண்பு & குணங்கள்

அத்திக்காய் :- இதனால் பிரமேகம், வெட்டை, விரணம்,சூலை முதலியன நீங்கும், மலங்கழியும்.

அவரைப்பிஞ்சு :- இது இரவு போஜனத்திற்கும், மருந்துண்பவர்களுக்கும்,திரிதோஷத்திற்கும்
பத்திய உணவாகும்.

கத்திரிப்பிஞ்சு :- பித்தம், கபம் நீங்கும், காயாக இருப்பின் சிறிது உஷ்ணத்தைத்தரும்.

கொத்தவரை :- இது அபத்திய உணவாகும், மருந்தை முறிக்கும்,பித்தாதிக்கம், பித்தவாயு, கபம்
முதலிவைகளை உண்டாக்கும்.

சுண்டைக்காய் :- கைப்பு சுவையுள்ள காயால் , மார்புச்சளி, கிருமிநோய், வாதாதிக்கம் முதலியன
குணமாகும். இதன் வற்றல் சீதபேதி,கிரகணி இவைகட்கு நன்று.

சுரைக்காய் :- இதனால் வாதபித்தம், மார்புநோய், புலிகநோய் முதலியன உண்டாகும். பத்தியத்
திற்காகாது. சீதளமென்பர்.

பூசனிக்காய்:- இது உஷ்ணாதிக்கம்,மிகு பித்தம் இவைகளை நீக்கும். கபத்தையும் பசியையும்
உண்டாக்கும். உடலுக்கு வன்மை தரும்.

பாகற்காய் :- இதனால் கிருமி நோய்,திரிதோஷகோபம், பாதரசதோஷம் முதலியன குணமாகும்.
விரேசனத்தையுண்டாக்கும்.

பீர்க்கங்காய் :- இதனால் பித்தமும், சீதளமும் அதிகரிக்கும்.

புடலங்காய் :- இதனால் பித்தம், கபம், சுக்கிலம் இவைகள் அதிகரிக்கும்.

முருங்கைக்காய் :- இதனால் கபம் நீங்கும். விந்து கட்டும், பத்திய உணவாம்.

வாழைக்காய் :- இதனால் வாந்தி பித்தம் பேதி இவைகள் குணமாகும் இரத்த விரித்தியையும் பலமும் உண்டாகும். வாதம் மிகும்.

வெண்டைக்காய் :- இதனால் அதிசாரம் , கிரகணி, சீதபேதி, முதலியன குணமாகும். விந்து கட்டும்
கபவாதம் உண்டாகும்.

கலியாண பூசணிக்காய் :- உட்காய்ச்சல், பித்தம், மூத்திரகிரிச்சரம்,அஸ்திதாதுகதசுரம், இடுமருந்
து தோஷம் முதலியன போம் வாதம் மிகும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக