ஞாயிறு, ஜனவரி 10, 2010

கீரைகள் -பண்பு & குணங்கள்

சிறு கீரை :- நீரைப்பிரிக்கும், மருந்தையும் விஷத்தையும் முறிக்கும், சிறிது உஷ்ணத்தை
உண்டாக்கும்.

அறு கீரை :- இதனால் வாதமும் கபமும் மட்டாகும், மலம் இளகும், வீரியவிருத்தி முதலியவைக
ளை உண்டாக்கும்.

அரைக்கீரை: - இதனால் பித்தம் தணியும் , நீரை வரட்டும்.

அகத்திக் கீரை:- இதனால் பித்தம் தணியும் , மலமும் நீரும் போகும். மருந்தையும் விஷத்தையும் முறிக்குமென்க.

முருங்கைக் கீரை :- பித்தத்தைதணிக்கும். மலத்தை இளக்கும்.

புதியனா :- இதனால் அரோசகம்,வாந்தி, பசியின்மை நீக்கும், ஜீரணசக்தியுண்டாகும்.

கருவேப்பிலை :- இதனால் அரோசகம், பேதி,சுரம், பித்தம், பசி மந்தம் இவைகள் போம்.

கொத்தமல்லிகீரை :- இதனால் அரோசகம், பித்தாதிக்கம், போம், சுக்கிலம் பெருகும்.

துத்திக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், விரணத்தை ஆற்றும்.

சுக்கான்கீரை :- உஷ்ணத்தைதணிக்கும், ஜீரணசக்தியையும், இரத்தசக்தியையும் உண்டாக்கும்.

சிறுபசலைகீரை :- உஷ்ணத்தைதணிக்கும், கபத்தை விருத்திசெய்யும் புணர்ச்சி யிச்சையை
உண்டாக்கும்.

புளிச்சகீரை :- பித்தம் தணியும் , வீரியவிருத்தியாம்.

சோகிக்கீரை :- வாய்வையும், உதிரச்சிக்கலையும் போக்கி, ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

மணலிக்கீரை :- இது வாத பித்த கப தோஷங்களை தணிப்பதுடன் கிருமிகளை மடியச்செய்யும்
பத்தியத்திற்குதவும்.

புளியாரைக்கீரை :- இதனால் உஷ்ணமும், பித்தமும் சமனப்படும்

பொண்ணாங்காணிக்கீரை :- இதனால் உடலில் உஷ்ணம் தணியும்,கண்களுக்கு ஒலியும், உடலுக்
கு பலமும் மேனியுமுண்டாகும்.

மணத்தக்காளிக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், வாய்ரணத்தை ஆற்றும். மலத்தை இளக்கும்,
நீரைப்பிரிக்கும்.

காசினிக்கீரை :- இது இரத்தத்தை சுத்தி செய்வதுடன், இரத்த விரித்தியையும் உண்டாக்கும்,
மலத்தையும் நீரையும் பிரிக்கும்.

வெந்தயக்கீரை :- இது வயிற்றுவலி, பசிமந்தம், வாதகோபம், உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல்
முதலிவைகளையும் போக்கும்.

முள்ளங்கிக்கீரை :- நீரைப்பெருக்கும், பசிதீபனத்தையும்,ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

முளைக்கீரை :- இவைகள் உஷ்ணத்தை தடுத்து நீரைப்பெருக்கும், சீதளமென்பர்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக