ஞாயிறு, ஜனவரி 10, 2010

ரக்த பித்தம் -ரோக நிதானம்


இந்த நோய் இரத்த ஸ்தானமாகிய இருதயத்திலிருந்தாவது
இருதயத்திற்கு வலது இடபுறங்களிலுள்ள மாமிசகண்டங்களாகிய கல்லீரல் மண்ணீரல்களிலிருந்தாவது பிறக்கின்றது. இது ரத்தா
திக்கத்தினாலும், அல்லது இரத்த கெடுதியினாலும் வாதாதிகளின் செய்கையினால் வெளிப்பட்டு துற்நாற்றத்துடனாவது, இயற்கை நாற்றத்துடனாவது இருப்பதுடன் சில சமயம் அற்பமாகவும் சில
சமயம் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் காணப்படும்.

இரத்தபித்த நோயின் பேதம் :- மேற்கூறிய இரத்தபித்த
நோய் திரிதோஷங்களினாலும் அவைகளின் இணைப்புகளினாலும் சந்நிபாதத்தினாலும் எழுவகைப்படும். இந்நோய் ஊர்த்துவமுகம்,
அதோமுகம், உபயமுகம் என்ற மேல்நோக்கு கீழ்நோக்கு, இரு நோக்கு என்னும் மூவகையாகவும் கண்டு காது, நாசி, வாய், உரோமம், சலத்துவாரம், மலத்துவாரம் என்னும் ஏழுவாசல் வழிகளாகவும் வெளிப்படும். கண்கள், காதுகள், மூக்கு, வாய் என்னும் நான்கு வழிகளாக இரத்தம் வெளிப்படுதல், ஊர்த்துவமுக இரத்த பித்த நோயென்றும், சலத்துவாரம், மலத்துவாரம், உரோமத்து வாரம் வழியாக இரத்தம் வெளிப்படுதல், அதோமுக இரத்தபித்த நோயென்றும், ஒரே காலத்தில் ஏழு துவாரங்களின் வாயிலாய் இரத்தம் வெளிப்படுதல், உபயமுக ரத்தபித்தம்மெறரிக. இவற்றுள் ஊர்த்துவமுகம் சாத்தியம், அதோமுகம் கடின சாத்தியம்,
உபயமுகம் அசாத்தியம்.

வாதபித்தம் :- நுரையுடன் சிவந்தரத்தம் வெளியாதல்,
இந்த நோயில் அதிக பித்தமும், அற்ப்ப வாதமும் இருப்பதால் அசாத்தியம்.

பித்தரத்தபித்தம் :- பசுவின் மூத்திரநிறமாகவும், கஷாயத்
தின் நிறமாகவும், குழம்பாகவும் ரத்தம் வெளிப்படும்.

சிலேத்துமரத்தபித்தம் :- வெண்மையாகவும், தேய்த்துக்
கழுவினால், வழு வழுத்திருப்பதாகவும், இருக்கின்ற ரத்தத்தை வெளிப்படுத்தும். இம்மூன்று தவிர எஞ்சியுள்ள நான்கு வகைகளாகிய வாதபித்த, வாதகப, பித்தகப, திரிதோடரத்தபித்தங்களில் மேற்கூறிய குறிகுணங்களில் தொந்தம் காணப்படும் இவைகள்யாவும் அசாத்தியமாகும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக