ஞாயிறு, ஜனவரி 10, 2010

அசிர்கர நோய் -ரோக நிதானம்

அசிர்க்கரநோய்

மாதர்கட்கு மாதாந்திர ருதுகாலத்தில் காணும் ரத்தம் சரி
வர வராமல் தப்பினால், அதனால் அசிர்க்கரநோய் உண்டாகும். இதனை பெரும்பாடு, பிரமியம், பிரமேகம், என வழங்கப்படும்.இந்நோயில் பெண்களுக்கு அல்குல் வழியாக வெளிப்படுவதுடன், வாயினாலும் ரத்தம் விழுமென்று அறிய வேண்டும். இந்த நோயானது வாதாசிர்க்கரம்,
பித்தாசிர்க்கரம், சிலேத்துமசிர்க்கரம், சந்நிபாதாசிர்க்கரம்,
எனப்படும்.

வாதாசிர்க்கரம் :- வயிற்றில் வலியை யுண்டாக்கி, கருத்தநிற  ரத்தத்தை அல்குல் வழியாக வெளிப்படுத்தும். வாதத்துடன் சேர்ந்தால் ரத்தமானது கண்டவுடன் மறைந்து விடும்.

சிலேத்துமசிர்க்கரம் :- மாதர்கட்கு ரத்தமானது பிணநாற்றத்துடன் வெண்மையாக அல்குல் வழியாக வெளியாகும். சிலேத்துமத்துடன் வாதம் கூடினால் சீழை போல் வெளியாகும்.

பித்தாசிர்க்கரம் :- சுரத்தோடு நீல நிறமாக ரத்தத்தை அல்குல் வழியாக வெளிப்படுத்தும். பித்தத்துடன் சிலேத்துமமும் கூடினால், ரத்தமானது உருண்டை, உருண்டையாக விழும்.

சந்நிபாதாசிர்க்கரம் :- மேற்கூறிய மூன்று தோஷங்களின் நிறமாகவும், மலமூத்திர நிறமாகவும், நாற்றமுடையதாகி அல்குல் வழியாக வெளிப்படுத்தும். இந்நோயில் சுரமும் மூர்ச்சையும் உண்டாகும் தொந்தமும் இதுவும் அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக