ஞாயிறு, ஜனவரி 10, 2010

அஸ்தி சிராவ நோய் -ரோக நிதானம்


ரசதாதுகொதிப்பினால் ரத்தத்தின் சுபாவ நிறங்கெட்டு அல்
குல் மார்க்கமாக இரத்தமானது வெளுத்து அல்லது மிகவுஞ் சிவந்து துர்க்கந்தத்துடன் வெளிப்பட்டால் ரத்தசிராவ நோயெனவும், எலும்புகளின் மத்தியிலிருக்கிற மச்சையை யுருகி சூலையுடன் வெளிப்பட்டால் அஸ்திசிராவநோய் அல்லது எலும்புருக்கி நோய் என்றும், கூறப்படும். இவைகள் அசாத்தியம்.

காச நோய்

இதனை இருமல் நோய் எனவுங் கூறுவர். இந்நோயில் மேல் நோக்கும் வாய்வானது மார்பில் சேர்ந்து, முதுகு, மார்பு, விலா பக்கம், தொண்டை முதலிய விடங்களில் வலியை உண்டாக்கி, ஒட்டை வெண்கல ஒலியைப்போன்ற ஒலியை கண்டத்தில் பிறப்பித்து இருமலை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும். இது ஐந்து வகைப்படும்.

1. வாதகாசம் :- வாதாதிக்க வஸ்துக்களின் உபயோகத்தினால் வாதமானது அதிகரித்து மார்பு, கண்டம், முகம் இவைகளை வற்றப் பண்ணி, சிரசு, விலாபக்கம், குண்டிக்காய், மார்பு இவைகளில் குத்தலையுண்டாக்கி சோருதல், மனக்கலக்கம், ஈனத்தொனி, அதிக வேதனை, பொடி இருமல், வேற்றுக்குரல், ரோமச்சிலிர்ப்பு முதலியவைகளை உண்டாக்கும். மேலும் நெஞ்சில் இளகிய கோழையை
கெட்டிப்படுத்தி கொஞ்சங் கொஞ்சமாக வெளிப்படுத்தும்.

2. பித்தகாசம் :- கண்களும், நகங்களும் மஞ்சள்நிறம், வாய் கசப்பு, மஞ்சள்நிற கோழைவிழல், ரத்தவாந்தி, பிரமை, தாகம், கம்மியபேச்சு, புளியேப்பம், எப்போதும் பொடி இருமல் கண்களில் இருட்கம்மல் என்னுங் குணங்களுடையது.

3. சிலேத்துமகாசம் :- மார்பிலும், தலையிலும் நோய், இறுக்கிப் பிடித்ததுபோல் குண்டிக்காயில் நோய், தேகபாரிப்பு, நெஞ்சுக்குள் அறுவருப்பு, மூக்கில்சதா ஜலம்வடிதல், அரோசகம், சரீரமினு மினுப்பு, வெளுப்பாகிய கோழை, வாந்தி என்னுங் குணங்க
ளுடையது.

4. ரத்தகாசம் :- கடின வேலைகள் செய்வதால் தேகம் மெலிந்தவர்கட்கு சுபாவபலம் ஒடுங்கியதால் வாயுவானது மார்புக்குள் சேர்ந்து பித்தத்துடன் கலந்து கண்டத்தில் வேதனையை யுண்டாக்கி ரத்தத்துடன் மஞ்சள்நிறமாகவும், உலர்ந்ததுபோலவும், உண்டை
உண்டையாக கபத்தை வாந்தியாக்கும். ஒருவேளை மார்பை பிகுவாக்கி சுத்த ரத்தத்தையே வாந்திசெய்யும். ஒருவேளை ஊசிகளால் குத்துதல்போல் மார்பில் குத்தலை உண்டாக்கி ரத்தத்தை வெளிப்படுத்தும். அப்போது கீல்களில் வேதனை, சுரம், சுவாசம், ஈனத்தொனி, நடுக்கல், புறசத்தம், பக்கநோவு, இந்தீரியம்,பசி
பலம், தேகவண்மை, இவைகள் குறைந்து, இரத்தமூலம்
முதுகுநோய், இடுப்பு நோய் உண்டாகும்.

5. கஷயகாசம் :- இந்த கஷயகாச ரோகமானது முதலில் இரு மலைப்பிறப்பித்து, பின்னர் தூர்நாற்றத்துடன் மஞ்சள், பச்சிலை ரசம் இரத்தம் இவைகளின் நிறமாக புளிப்பு வாசனையாக வாயினாற் கோழயை கக்கப்பண்ணும். அப்போது பக்கங்களிலும், மார்பிலும் நோயுண்டாகும். உஷ்ணசீதள வஸ்துகளின் மீது நல்லகாந்தி முதலிய
கஷயரூப குணங்களும் உண்டாயிருப்பின் இந்தகாசம், துர்ப்பபல முடையவர்களுக்கும், வயது சென்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வந்தால் தீறாது. சரீர பலமுள்ளவர்களுக்கு வந்தால் ஒரு வேளை
சாத்தியமாம். தொந்தகாசங்கள், கஷாயத்தின் மீது சாத்தியம் மற்ற இரண்டும் அசாத்தியம். கஷயரோகத்தின் பேதங்கள் முதலியது கஷயரோகத்தில் காண்க .

இருமல், இரைப்பு, சுரம், வாந்தி, பேதி என்னுங் குணக்களுடைய காசரோகம் அசாத்தியமாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக