இதனை இரைப்பு நோய் எனவும் கூறுவர். இது வாத கபங்
களின் விருத்தி, அசீரணபேதி, வாந்தி, விஷப்பாண்டு, விடாது சுரம், புகை, காற்று, தானியச்சுனை, அதிசீதள கபம், மர்மஸ்தானங்களில் அடிபடுதல், முதலிய காரணங்களினால் உண்டாகும். இதனால் அற்ப சுவாசம் மார்பிலும் விலாப்பக்கங்களிலும் குத்தல், திணறி,திணறி மூச்சு வாங்கல், வயிற்றுப்புசம், இரண்டு நெற்றியிலும் நோய் என்னும் இக்குணங்களை யுண்டாக்கும். இந்தசுவாச ரோகமானது ஐந்து வகைப்படும். அவையாவன :-
அற்ப சுவாசம் :- ஆயாசத்தினாலும், அபத்தினாலும்,
வாயுவானது அதிகரித்து சுவபாவகுணங்களோடுருக்கிற பித்த சிலேத்துமங்களுக்கு பலத்தை கொடுத்து அற்ப சுவாசம் உண்டாகும்.
தாமரகசுவாசம் :- மார்பிலும் விலாப்பக்கங்களிலும் நோயை உண்டாக்கி, கண்டத்தில் குறு குறு வென்ற சத்தத்துடன்,இருமல் பீனசம், சோருதல், அருசி, தாகம், என்னும் குணக்களை அதிகரிக்கச்செய்து இரைப்பினால் தேகமெல்லாம்,அதிர்ந்து குலுங்குதல், கண்டத்தில் அடைத்த கோழை விழுந்து விட்டால், சிறிது செளக்கியமாக காணல், உட்கார்ந்தால் சிறிது செளக்கியம், மேல்பார்வை,நெற்றியில் வியர்வையோடு நோய், அடிக்கடி வாயுலரல், தேகம் நடுக்கல், உஷ்ண திரவியத்தில் இச்சை முதலிய குறிகுணங்களைப் பெற்றிருக்கும். இது
பஞ்சசேந்திரியங்களுக்கு மயக்கம் உண்டாக்குவதால் தமரகசுவாசம் எனப்படும். மேலும் பனிக்காலம், குளிர்ந்த ஜலம், சீதள பதார்த்தம், கீழ்க்காற்று, இவைகளால் சுவாசம் அதிகரிப்பதனால் மந்தார சுவாசமென்றும், மந்தாரகாசமென்றுங் கூறப்படும். இந்நோய் தனித்து இருப்பின் சாத்தியமென்றும், இத்துடன் சுரமும் மூர்ச்
சையும் உண்டானால் அசாத்தியமென்றும் கூறுவர்.
3. விச்சின்ன சுவாசம் :- சாதாரண சுவாசமானது உள்ளில்
மறிபட்டு மறிபட்டுப் பெருஞ்சுவாசமாக வருதல், மர்மஸ்தானங்களில் நோய், வியர்வை, மூர்ச்சை, மேல்வயிற்றுப்பிசம், அடிவயிறு, தேகம் எரிச்சல், மலமூத்திர சிக்கல், கண்ணில் சிகப்பு, வாயுலரல்,
பிரலாபம், தேகநிறமாறல், அதைரியம், ஞாபகமறதி என்னுங் குணங்களுடையது. இந்த ரோகி மயக்கத்துடன் சேர்ந்திருப்பான்.
4. மகா சுவாசம் :- கண்டத்தில் கலகலவென்று சத்தத்
துடன் பெருஞ்சுவாசம், வயிற்றுப்பிசம், முகத்திலும், கண்களிலும் காந்தியின்மை, கையினால் மார்பில் அறைத்துக்கொள்ளல், மலமூத் திர சிக்கல், மெல்லிய வார்த்தை, நெஞ்சுவுலரல், சோருதல், காதிலும் நெற்றியிலும் சிரசிலும் நோய் என்னுங் குணங்களுடையது.
ஊர்த்துவ சுவாசம் :- சுவாசம் மேல்நோக்கி வருவதால்
தலைகுனியக்கூடாமை, முகத்து நரம்புகள் உப்புதல், மேல்பார்வை, மயக்கம், சுற்றிசுற்றி பார்த்து விழித்தல், மர்மஸ்தானங்களின் நோயினால் அழுதல், பேசக்கூடாமை என்னுங் குணங்களுடையது. சிகிச்சை செய்யும்போது குணங்கள் குறைந்தால் சாத்தியம். குறையாவிட்டால் அசாத்தியம்.
காசரோகிக்கும், சுவாசரோகிக்கும் சுரம், வாந்தி, தாகம்,
பேதி, வீக்கம் காணுமாகில் அசாத்தியம்.
0 comments:
கருத்துரையிடுக