ஞாயிறு, ஜனவரி 10, 2010

விக்கல் நோய் -ரோக நிதானம்

விக்கல் நோய்

விக்கல் ஐவகைப்படும். அவையாவன :-

1. அன்னதோஷ விக்கல் :- காரவஸ்து, மிக சுடுகை பதார்த்தம், சீரணமாகாத வஸ்து கடின பதார்த்தம், அன்னபானாதி வித்தியாசம் இவைகளினால் பிறந்து கண்டத்தில் அற்பத்தொனி, அற்ப இருமல் என்னுங் குணங்களை யுடையது. இதுவே அசனோற்பவ
விக்கல்.

2. அற்ப விக்கல் :- சாப்பிடும்போது அதிகரித்த வாயுவினால் அற்ப விக்கல் உண்டாகும். இந்த ரோகிக்கு பசிக்களையினால் உண்டாகும் ஆயாசத்தினால் நெஞ்சு குழியிலிருந்து விக்கலானது அதிகரிக்கும், கொஞ்சம் போசனம் பண்ணினால் சாந்தமாகும். இதுவே
கஷீத்திர விக்கல்.

அடுக்கு விக்கல் :- ஆகாரம் ஜீரணிக்குஞ்சமயம் சற்று
நேரம் பொறுத்து பொறுத்து இரண்டிரண்டாக பிறந்து வயிறுப்பிசம் பிரலாபம், வாந்தி, பேதி, கண்கலங்கல், கொட்டாவி என்னுங் குணங்களுடையது. இது யமளவிக்கல்.

மகாவிக்கல் :- அதிக விக்கலினால் இரண்டு கண்புருவம்
நெற்றிகள் தெறித்து விழுவது போலிருத்தல், சலம் வடிதல்
கண்கலங்கல், சர்வாங்கமும் மரத்தல், நினைவு மாறல், அன்னமிறங்க  வழிமறுபடுதல், கால்களில் நோய், நெஞ்சுக்குள் உலரல் என்னுங் குணங்களுடையது. இது மிகவும் கொடியது.

நீடொலி விக்கல் :- நாபி ஸ்தானத்திலாவது, பக்குவ
ஸ்தானத்திலாவது, பிறந்த மேற் கூறிய குணங்களுடையதாகி கொட்டாவி, தேகமுறுக்கல், அதிக சத்தத்துடன் நீண்டு வரும் விக்கல் என்னுங் குணங்களுடையது. இதுவே கம்பீர விக்கல்.

அன்னதோஷ விக்கல் :- அற்ப விக்கல் சாத்தியம். அடுக்கடுக்கான விக்கல் கஷ்ட சாத்தியம்.இந்த விக்கல் ரோகமானது சகல ரோகங்களைவிட அதிசீக்கிரத்தில் கொல்லும். ஆகையால் இது கண்ட போதே சிகிச்சை செய்து கொள்வது நல்லது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக