ஞாயிறு, ஜனவரி 10, 2010

க்ஷய ரோகம் -ரோக நிதானம்

இந்த கஷயரோகத்தையே யஷீமரோகம், ராஜயஷீமரோகம், ராஜரோகம், கபரோகம், ஈளைரோகம், என்ற்ம் கூறுவர். அதிக இருமல், மந்தாக்னி, தேகம் வற்றல், மார்புவலி, வாந்தி, அரோசகம், முதலிய நோய்களையுடையது. இதில் 11 குணங்களுடைய
தோஷங்கள் உண்டு.

1. மேல்நோக்கு தோஷம் :- பித்த கபஸ்தானத்திலும்
மேலாக வாயுவை சஞ்செரிக்கச்செய்து பீனசம், இருமல்
தோளில் நோய்,தலை நோய், இருமற்கம்மல், அரோசகம்
என்னுங் குணங்களுடையது.

2.கீழ்நோக்கு தோஷம் :- நாபியின் ஸ்தானத்தில்
வாயுவை சஞ்செரிக்கச்செய்து அடிக்கடி மலம் விழுதல்,
வாயுலகலும் என்னுங் குணங்களுடையது.

3. அகட்டு தோஷம் :- வயிற்றுக்குள் வாயுவை சஞ்
செரிக்கச்செய்து, வாயுவாகிய ஒரு குணத்தை மாத்திரம் உண்டாக்கும்.

4. சூலை தோஷம் :- இருபக்க விலாக்களிலும் வாயுவை
சஞ்செரிக்கச்செய்து அவ்விடங்களில் சூலை நோய் குணத்தை மாத்திரம் உண்டாக்கும்.

5. கீல்தோஷம் :- சகல கீல்களிலும் வாயுவை சஞ்சரிக்கச்
செய்து சுரமாகிய ஒரு குணத்தை மாத்திரம் உண்டாக்கும்.
க்ஷயரோகிகளுக்கு ஐவகைதோஷத்தினால் பதினொரு குணங்களதிகரிக்கும்போது கண்டத்திலும் மார்பிலும் நோய், தேகவேதனை, கொட்டாவி, கோழைவிழுதல், மந்தாக்கினி, வாயில் துர்க்கந்தம்வீசுதல் என்னுங் குணங்களுண்டாகும். இது நான்கு வகைப்படும்.

வாதக்ஷயரோகம் :- சிரசு, தோள், கண்டம் இவைகளில் நோய், விலாபக்கங்களில் குத்தல், குரற்கம்மல், கருப்பு வெண்மை நிறங்கலந்த கோழைவிழுதல் என்னுங் குணங்களுடையது.

பித்தக்ஷயரோகம் :- கை, கால், முகம் எரிச்சல், ரத்தவாந்தி, பேதி, வயிற்றினின்று துர்கந்தம் வீசுதல், மஞ்சள் அல்லது சிவப்பு கோழை விழுதல் என்னுங் குணங்களுடையது.

சிலேஷ்மக்ஷயரோகம் :- சிரசும் தேகமும் பாரித்தல், அரோ சகம், வாந்தி, இருமல், வாயிற் சலமூறல், பீனிசம், ஈனத்தொனி, இரைப்பு, மந்தாக்கினி, வெண்மை நிறமாகிய கோழைவிழுதல் என்னுங் குணங்களுடையது.

திரிதோஷ க்ஷயரோகம் :- முற்கூறிய வாத பித்த கப க்ஷய ரோகங்களில் கூறிய குணங்கள் யாவுங் கலந்து காணும்.

க்ஷயரோக சாத்தியா சாத்திய லக்ஷணம் :-க்ஷயரோகிக்கு பக்க நோய், வயிற்றுப்புசம், ரத்தவாந்தி, சீழானவாந்தி, இரண்டு புஜங்களிலும் உபாதை, சீழாகவும், சிகப்பாகவும் கருப்பாகவும் கோழைவிழு
தல் சுரம், இருமல், இரைப்பு இவைகள் அதிகரித்தல், தேககாந்தி, பலம், தொனி இவைகள் குறைவுபடுதல், சரீரம் சுட்கல், பீசத்திலும் வயிற்றிலும் வீக்கம் என்னும் குணங்களுண்டானால் அசாத்தியம், மேற்சொல்லியவை யில்லாதிருப்பின் சாத்தியம். சில நூற்களில் வாதக்ஷயம், பித்தக்ஷயம், சிலேஷ்மக்ஷயம், திரிதோஷக்ஷயம், வாத
பித்த்க்ஷயம், சிலேஷ்மவாதக்ஷயம், சிலேஷ்மபித்தக்ஷயம், சுட்க க்ஷயம், சூலைக்ஷயம், ராஜயக்ஷ£மக்ஷயம், விவர்ணக்ஷயம், மந்தாக்கினி க்ஷயம், வாந்திக்ஷயம், ஏப்பக்ஷயம், சோஷைக்ஷயம், மூர்ச்சைக்ஷயம்
என்று இருபது விதங்களாக எழுதப்பட்டிருக்கின்றது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக