ஞாயிறு, ஜனவரி 10, 2010

குரல் கம்மல் நோய் -ரோக நிதானம்1. வாதக் குரற்கம்மல் :- குரல்வளையில் உள்ளீரம் வறண்டு சுட்கித்து முட்சொருகுதல்போல் நோய், வழுவழுத்த பதார்த்தத்திலும், உஷ்ண பதார்த்தத்திலும் விருப்பம், நடுக்கலான தொனி என்னுங் குணங்களுடையது.

2. பித்த குரற்கம்மல் :- குரல் வளையிலும் தாழ்வாய்த்தானித் திலும் எரிச்சலுடன், வரட்டல், பேச முடியாமை, கம்மிய பேச்சு என்னுங் குணங்களுடையது

3.சிலேத்தும குரற்கம்மல் :- குரல் வளைக்குள் கோழை பூசினது போல் இருத்தல், கம்மலானவார்த்தை என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ குரற்கம்மல் :- குரல் வளையை இருக்கிப்பிடிப்பது போல் இருத்தல், மூன்று தோஷ குரற்கம்மல்களுக்குண்டான குணங்கள், கீச்சுக்குரல், தொனியை மறிப்பது போல தோன்றும் என்னுங் குணங்களுடையது.

5. கஷயகுரற்கம்மல் :- குரல் வளையில் புகை கம்மியாய் பட்டது போல் இருத்தல், குரற்கம்மல் என்னுங் குணங்களுடையது.

6. மேதோகுரற்கம்மல் :- குரல் வளையில் வழு வழுப்பான சிலேத்தும குரற்கம்மல் குணங்களுடையது.

குரற்கம்மல் நோய் சாத்தியா சாத்தியங்கள் :- வாதம், பித்தம், சிலேஷ்ம, கஷயரோம குரற்கம்மல்கள் சாத்தியம். திரிதோஷமேதோகுரற் கம்மல்கள் அசாத்தியம்.

Post Comment

1 comments:

கருத்துரையிடுக