ஞாயிறு, ஜனவரி 10, 2010

தாக நோய் -ரோக நிதானம்

தாக நோயின் இலக்கணம் :- இந்த ரோகமானது மன
பிரமையுண்டாக்கும், நடுக்கல், தேகத்தில் எரிச்சலோடுகாணல் சோர்வு, தாகம், நாவின்மூலத்திலும், கண்டத்துக்குள் தாடையிலும் இருக்கின்ற நரம்புகள் உலரல், எவ்வளவு உணவு அருந்தினாலும் பூர்த்தியுடையாமை, அன்னத்துவேஷம், குரற்கம்மல், இளைப்பு பிரலாபம், மனக்கெடுதி, மலம் நழுகல் என்னும் குணம் பெற்றிருக்கும்.

1. வாததாகம் :- அதைரியம், இளைப்பு, தலைநோய், அரோ
சகம், காதுமநதம், நித்திரையும், பலமுங்குன்றல், தாகமதிகரித்தல், என்னும் குணங்களுடையது.

2. பித்ததாக :- மூர்ச்சை, வாய்கசப்பு, கண்கள சிவப்பு,
மிகவும் நாவரளல், வாயில் புகை எழல் என்னும் குணங்களுடையது.

3. சிலேஷ்ம தாகம் :- நெஞ்சில் முட்சொருகல், நித்திரையின்மை வாயினிபு, வயிறுப்பிசம், தலை தேகம் மாத்தல், வாந்தி, அரோசகம், சோம்பல், அசீரணரோக குறி என்னும் குணங்களுடையது.

4. திரிதோஷதாகம் :- 
வாதாதி, தாகரோக குணங்களுடையது.

5. ரஷகஷய தாகம் :- நாக்கு உலரல், மதிபிரமை, இளைப்பு, எந்த கந்தத்திலும் அசங்கிதம், என்னும் குணங்களுடையது.

6.உபசர்க தாகம் :- இனிப்பு, உப்பு, முதலிய வஸ்துகளை
பிராணந்தப்பி சாப்பிடுங்காலத்தில், களைத்த காலத்தில், சோர்வு அடையுங்காலத்தில், தாபச்சுரகாலத்திலும், நெடுநாளாக பற்றிய ரோகங்களின் விஷமகாலத்திலும், இத்தாக ரோகம் பிறகும்.

தாகநோயில் சாத்தியா சாத்தியம் :- அறிவழிந்த காலத்திலும் நாவானது பயன்படாமல் ரோகத்தால் வெளியில் நீண்டு விட்ட  காலத்திலும், வாய்க்குள் உண்டான ரோகத்தால், தொண்டைக்குள் சலமிறங்காத காலத்திலும், தாகரோக முண்டானால், அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக