ஞாயிறு, ஜனவரி 10, 2010

மார்பு நோய் -ரோக நிதானம்

இந்த நோயானது ஐவகைப்படும். இதற்கு இருத்ரோகமென்
றும் தமர்வாதமென்றும் பெயர்கள் உண்டு. இதை ருத்திரவாத மென்றுங் கூறுவர்.

1. வாத மார்பு நோய் :- மார்பில் குத்தல், அதிரல், மார்பின்
உட்புறம் வறட்சியாகவும் காலியாகவும் இருப்பது போன்ற
உண்ர்ச்சி, அதைரியம், துர்ப்பலம், பயம், புரளல், பேச்சில் அசங்கி தம், சரீரம் நடுக்கல், மூச்சுபிடுப்பு, திணறலாண மூச்சு, அற்பநித்திரை என்னுங் குணங்களுடையது.

2. பித்த மார்பு நோய் :- மார்பெரிச்சல், தாகம், மனதிற்
பிரமை, மூர்ச்சை, வியர்வை, புளியேப்பம், வாந்தி, சுரம், எந்த பாதர்த்தத்தையும் புசிக்கவேண்டு மென்கிற இச்சை என்னுங்  குணங்களுடையது.

3. சிலேஷ்ம மார்பு நோய் :- மார்பை கெட்டியாக மூச்சுபிடித்ததுபோல் ஸ்தம்பமாக்கி பிடித்தல், பாராங்கல்லை வைத்துப்போலிருத்தல், இருமல், மந்தாக்கினி, வாயிற்கோழைபெருகல், நித்துரை,
சோம்பல், அரோசகம், சுரம் என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ மார்பு நோய் :- மார்பில் ஈட்டியால் குத்துவது போல் ஓடி,ஓடி குத்தல் பிளப்பது போல் இருத்தல், எரிச்சல், கனத்தல், அழுகை, பிரமை, தாகம், சுரம், முதலியவற்றுடன் வாதாதி மூன்று மார்புநோய்களின் துர்குணங்களையும், ஒரே காலத்தில்
உண்டாக்கும். இது கஷ்ட சாத்தியம்.

5.கிருமிமார்பு நோய் :- கிருமிகள் இருதயஸ்தானத்திற்கு
மேல் எதிர்த்தேறுவதனால் மார்பில் துடி துடித்தலுடன் அதரல், வீக்கம், அதிக நமைச்சல், தெரித்து விழுவது போலும் வாளால் லறுப்பது போலும் இருத்தல், கண்கள் கறுப்பாக தோன்றல் கோழை விழுதல், என்னுங் குணங்களுடையது. அதிகவிரைவில் கிருமிகள் விழும்படியாக கசப்புள்ள விரேசனங்கள் கொடுக்க
வேண்டும்.

சாத்தியா சாத்தியங்கள் :- வாத பித்தசிலேத்தும மார்பு
நோய்கள் சாத்தியம். திரிதோஷ மார்பு நோய் கஷ்ட சாத்தியம்.  கிருமிமார்பு நோய் அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக