வமனரோகமென்றும் பெயர். இது 6 வகைப்படும். அவையாவன :-
1. வாதவாந்தி :- வாய் வரளல், மார்பு நோய், தலை நோய், குரற் கம்மல், இருமல், இளைப்பு, கண்டத்தில் வேதனையுடன் சத்தம், நல்லசலமாகவும் வாந்தி என்னுங் குணங்களுடையது.
2. பித்த வாந்தி :- உப்பு நீராகவும், புகைநிற சலமாகவும்,
பச்சிலைரசம் மஞ்சள் ரத்தத்தோடு புளிப்பாகவும், காரமாகவும், கடுமையாகவும் வாந்தி, தாகம், தேகஎரிச்சல், தலைசுழலல், மூர்ச்சை என்னுங் குணங்களுடையது.
3. சிலேத்தும வாந்தி :- வழுவழுப்பாகவும், தடிப்பாகவும்,
கோழையாகவும், நூலைப்போல் கொடிகொடியாகவும், வாந்தி, ரோமச் சிலிர்ப்பு, முகத்தில் கொஞ்சம் அதப்பு, சோர்வு, வாயில் இனிப்பு, மார்பு துடித்தல், இருமல் என்னுங் குணங்களுடையது.
4. திரிதோஷ வாந்தி :- மார்பிலும், கண்டத்திலும், தலை
யிலும் நோய், இருபக்கத்திலும் இசிவு, கண் பிதுங்குவதுபோலிருத்தல், சர்வாங்கத்திலும் எரிச்சல், அதிக தாகம், பிரமை, மூர்ச்சை, நடுக்கல் என்னுங் குணங்களுடையது. இது அசாத்தியம்.
5. திருஷ்டி வாந்தி :- இந்த வாந்தியில் அசுதி, துர்நாற்றம்
இருக்கும். இதற்கு கண்ணேறு வாந்தி என்று பெயர்.
6. கிருமி வாந்தி :- வாந்தியில்கிருமிகள் விழும். வயிறுநோய் தேகம் நடுக்கல், மார்புநோய் என்னுங் குணங்களுடையது.
வாந்தி நோயில் சாத்தியா சாத்தியம் :- மலமாகவும், ரத்த மாகவும் சீழாகவும் மலமூத்திர நாற்றமாகவும், ரத்தபுள்ளிக விருப் பதாகவும் வாந்தியாகுதல், இருமல், இரைப்பு, திரிதோஷ வாந்தியின் குணங்கள் காணல் என்னுங் குணங்களுடையது அசாத்தியம்.
மற்றவை சாத்தியம்.
0 comments:
கருத்துரையிடுக