ஞாயிறு, ஜனவரி 10, 2010

அஷ்ட வித பரீட்சைகள்




மருத்துவன் நோயாளியை பரீ¨க்ஷ செய்யும்போது, நோக்கு, ஸ்பரிசம், கேள்வி என்னும் மூன்றுவித உபாயங்களினால் எண்வகைப் பரீ¨க்ஷகளைச் செய்து, அவற்றின் மூலமாய் நோய்களைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சைகளைச் செய்தல்வேண்டும்.


அதாவது நோயாளியின் உடல் முதலியவற்றை கண்ணால் பார்த்தல், கைகளால் தொட்டு உணர்தல், கேள்விகள் கேட்டு நோயாளியுடன் சம்பாஷித்தல் முதலியவற்றால் எண்வகைப் பரீ¨க்ஷ என்ற நாடி, ஸ்பரிசம், நா, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்னும் இவைகளைப் பரீ¨க்ஷ செய்து அதன் மூலமாக நோய்களை நிதானிக்கவேண்டும் என்பதாம்.


1. நாடி

நாடி பரீ¨க்ஷயானது அஷ்டவித பரீ¨க்ஷகளில் மிக முக்கியமும் நுட்பமும் வாய்ந்ததென்றும், இதனைத் தக்க ஆசானிடத்துக் கற்பினும் பன்னாள் பயிற்சியின் பிறகே நன்குணர முடியுமென்றும் அறிதல் வேண்டும். இந்த நாடியின் நிலையைக்கொண்டு நோய்களைக் கண்டறிவதுடன், அந்நோயின் வன்மை மென்மைகளையும், அசாத்திய மரண நிலைகளையும் நிச்சயித்துக் கூறமுடியுமெனவும் அறியக்கிடக்கின்றது.


நாடியின் தோற்றமும் தொகையும் :- மனித உடலில் ஸ்தூலமாகவும் சூட்சமமாகவும் மூன்றுகோடியே ஐம்பது லச்சம் நாடிகள் உள்ளனவென்றும்,இந்நாடிகள் யாவும் மூலாதரத்தினின்றே தோன்றிமேலும்,கீழும்,குறுக்குமாக பரவி உடல் முழுதும் வியாபித்துள்ளவென்றும்,இவைகட் கெல்லாம் ஆதாரமாயுள்ள சூட்சம வாயுவானது இந்நாடிகளின் மூலமாய் பிராணன் முதலியவாயுக்களைக்கொண்டு உடல் முழுதும் வியாபித்துள்ளவென்றும், இதுவே உடலானது உயிர் பெற்றிருப்பதற்க்குக்காரணமென்றும் அறியக்கிடக்கின்றன.ஆனால் மேற்கூறிய நாடிகளில் எழுபத்தீராயிரம் நாடிகளே வாயு சஞ்சரிப்பதற்குப் பொருத்தமானவை. இவற்றின் மூலமாகத்தான் பிராணாதி வாயுக்களும் உடலின் அன்னபாணாதிகளின் சத்துக்களும், உடலில் பரவி உடலானது போஷிக்கப்பட்டு வருகின்றது.


மற்றும் இந்த எழுபத்தீராயிரம் நாடிகளில் ஆயிரத்துஎழுநூற்றுஇரண்டு நாடிகள் ஸ்தூல
நாடிக ளென்றும் மற்றவை சூட்சம நாடிக ளென்றும், இவற்றுள் இந்த ஸ்தூல நாடிகளே சப்த
ஸ்பரிச ரச கந்தங்களை அறியும்படி செய்வதுடன்,புசிக்கும் உணவின் ரசத்தை உடலில் வியாபிக்
கச்செய்து வருகின்றதென்றும் காணக்கிடக்கின்றது.


தசநாடிகள்: மேற்கூறிய ஸ்தூல நாடிகளில் எழுநூறுநாடிகளே முக்கியமானவையென்றும், அவற்றுள் பத்து நாடிகள் மிகமுக்கியமானவையென்றும், இதனையே தசநாடிகளென்றும் கூறப்படும்.


தசநாடிகளாவன: இடகலை, பிங்கலை, சுழிமுனை, சிங்குவை,புருஷன்,காந்தாரி,அத்தி,அலம்புடை,சங்கினி,குரு என்பவை களாம். இடது நாசியில்இடகலையும்,வலதுநாசியில்பின்கலையும்,பிரம்மமந்திரத்தில்சுழிமுனையும், இடது நேந்திரத்தில் காந்தாரியும்,வலது நேந்திரத்தில் அத்தியும், வலது கையில் குருவும், இடது கையில்
சிங்குவையும், நாவில் அலம்புடையும்,ஆண்க்றியில் புருடனும்,சிரத்தில் சங்கினியும் வியாபித்துருக்கும்.


இவைகள் அபாணன்,பிராணன்,சமானன்,உதானன்,வியானன்,நாகன்,கூர்மன்,கிருதரன்,தேவ
தத்தன்,தனஞ்செயன், எனும் தச வயுக்களை ஆதாரமாகக்கொண்டுள்ளது.இந்த தச வயுக்களில் அபாணன்,பிராணன்,சமானன்,உதானன்,வியானன் என்ற பஞ்ச வாயுக்கள் முக்கியமானதாகும். இவற்றுள்
பிராணன் என்பது மிகமுக்கியமானதாகும்.


திரிநாடி :- மேற்கூறிய தசநாடியில் இடகலை, பிங்கலை,சுழிமுனை என்ற மூன்று நாடிகளே பிரதானமானவை.


இடகலையானது வலது பாத பெருவிரலினின்று புறப்பட்டு மூலாதாரத்தின் மார்க்காமாய் இருதயஸ்தானத்திற்கு இடதுபுறமாயோடிக் கத்திரிக்கோல் மாறலென மாறி சிரசிலுள்ள சந்திரமண்டலத்தையடைந்து, இடது நாசியின் வழியாக பதினாறு அங்குலத்திற்குப் பாய்ந்து இயங்கி நிற்கும்.


பிங்கலையானது இடது பாத பெருவிரலினின்று புறப்பட்டு மூலாதாரத்தின் மார்க்காமாய் இருதயஸ்தானத்திற்கு வலதுபுறமாயோடிக் கத்திரிக்கோல் மாறலென மாறி, சிரசிலிருக்கும் அக்கினிமண்டலத்தையடைந்து, வலது நாசியின் வழியாக பன்னிரண்டு அங்குலத்திற்குப் பாய்ந்து இயங்கி நிற்கும்.


சுழிமுனையானது இவையிரண்டிற்குமிடையே மூலாதாரத்தினின்று உச்சிவரையோடி சூரியமண்டலத்தையடைந்து, வலது இடது நாசித் துவாரங்களுக்கிடையே இயங்கி நிற்கும். இதுவே பிராணமயமான சீவனுக்கு இருப்பிடமாயும் உள்ளது.


மேற்கண்ட திரிநாடிகளில் இடகலையை வாதநாடியென்றும், பிங்கலையை பித்தநாடியென்றும், சுழிமுனையை கபநாடியென்றும் கூறப்படும்.


நாடிபார்த்தல் :- குதிச்சந்து, காமியம், உந்தி, மார்பு, காது, மூக்கு, கண்டம், கரம், புருவம், உச்சியென்னும் பத்து விடங்களிலும் நாடியைப் பார்த்தறியலாம். எனினும் கரமே எளிதில் அறியக்கூடியதாகவும், சுலபமாகவும் இருப்பதால், கரத்தையே நாடிபார்க்குமிடமாக வழக்கிலேற்படுத்தப் பட்டிருகின்றது.


ஆண்களுக்கு வலக்கரத்திலும், பெண்களுக்கு இடக்கரத்திலும் நாடி பார்த்தல் வேண்டும். பிணியாளருடைய முன்கையை நீட்டி, மணிக்கட்டிற்கு ஒரு அங்குலந்தள்ளி, பெருவிரல் பக்கமாகத் தனது மூன்று விரல்களை ஒன்றிற்கொன்று நெல்லிடைப்பிரமாண தூரத்திலுள்ளபடி மேலாகப் பொருத்தி, இலேசாக அழுத்தியும், தளர்த்தியும் பார்க்க, ஆள்காட்டி விரலிலுணர்வது வாதமென்றும், நடுலிலுணர்வது பித்தமென்றும், பெளத்திர விரலிலுணர்வது கபமென்று முணர்க.


நாடிகளின் மாத்திரை :- நோயற்ற மனிதனுக்கு இயற்கையாக வாதநாடியானது ஒரு மாத்திரையாகவும், பித்தநாடியானது அரை மாத்திரையாகவும், கபநாடியானது கால் மாத்திரையாகவும் இயங்குமென்றும், இவற்றின் நடை வேகமென்னும் மாத்திரையின் ஏற்றத்தாழ்வாகிய விகற்பத்தைக் கொண்டே வாதாதி முக்குற்றங்களின் நிலையை யறிந்து அதன் மூலமாய் நோயைக் கணிக்க வேண்டுமென்று முணர்க.


நாடி நடையும் விகற்பமும் :- நாடியின் நிலையை மாத்திரைக் கணக்கில் கூறுவதுடன், எளிதில் அறியும்பொருட்டு சில ஜீவஜந்துக்களின் நடைக்கு ஒப்பிட்டுங் கூறுவதுண்டு. அதாவது ஆண்களுக்கு வாதநாடி மயில் , அன்னம், கோழி என்னும் இவைகளின் நடையையொத்திருக்குமென்றும், பித்தநாடி ஆமை, அட்டை முதலியவற்றின் நடையையொத்திருக்குமென்றும் கூறப்படும்.


சாதாரணமாக வாதத்திற்கு ஒரு மாத்திரையென்றும் பித்தத்திற்கு அரை மாத்திரையென்றும், கபத்திற்கு கால் மாத்திரையென்றும், வாதம் இரண்டு மாத்திரையாயின், அதாவது இரட்டித்து வேகமாய் நடந்தால், அதனை வாதத்தில் வாதமெனவும், கபம் இரட்டித்து இருப்பின் கபத்தில் கபமெனவும், வாதம் இரண்டு மாத்திரையாகவும், பித்தம் ஒரு மாத்திரையாகவும் இருப்பின் அதை வாதபித்த மெனவும், வாதம் இரண்டு மாத்திரையுடன் கபம் ஒரு மாத்திரையாக இருப்பின் வாதகப மெனவும், பித்தம் இரட்டித்து வாதம் ஒன்றனால் பித்தவாத மெனவும், பித்தம் இரட்டித்து கபம் ஒன்றனால் பித்தகப மெனவும், கபம் இரட்டித்து வாதம் ஒன்றனால் கப வாதம் மெனவும், கபம் இரட்டித்து பித்தம் ஒன்றனால் கபபித்த மெனவும், வாத பித்த கபங்கள் மூன்றும் இரட்டித்து அல்லது மிக அடங்கியிருப்பின் அதனைத் திரிதோஷமெனவுங் கூறப்படும்.


நாடி விகற்பமும் நோய்களும்:- வாதபித்த கபங்களாகிய முக்குற்ற நாடிகளும் முறையே தனித்தோ தொந்தித்தோ விகற்ப முற்றிருக்குங்கால் ஒவ்வொன்றிலும் காணும் நோய்களைக் குறித்து இங்கு கூறப்படும். அவையாவன :


வாதநாடியிற் காணும் நோய்கள்:- மந்தம், வயிற்றுப்பொருமல், கிரகணி, மகோதரம், நீராமை சூலை, வாய்வு, கிருமிநோய், அண்டவாதம், மூலம், மூத்திரக் கிரிச்சரம், தந்துமேகம்.

பித்தநாடியிற் காணும் நோய்கள்:- வெப்பு, உஷ்ணவாயு, அதிசாரம், அஸ்திசுரம், பைத்தியம், சோகை, உடற்காங்கை, எரிச்சல், தாகம், மயக்கம், மூர்ச்சை, நித்திரையின்மை, கனவு, மனக்கலக்கம், மெய்யுளைவு, பெரும்பாடு, இரத்தப் பிரமேகம்.


கபநாடியிற் காணும் நோய்கள்:- சுரம், இருமல், கஷயம், ஈளை, காசம், பக்கசூலை, இருதயரோகம், வீக்கம், வாந்தி, விக்கல், நெஞ்சடைப்பு, சன்னி, விஷதோஷம், தூக்கம், பாண்டு, சோகை, காமாலை, கரப்பான், விரணம்.


வாதபித்தநாடியிற் காணும் நோய்கள்:- உஷ்ணவாயு, அஜீரணம், புளியேப்பம், வாந்தி, அரோசகம், நாகசத்தல், நீர் சிவந்து போதல், மலங்கருகல், தாதுநட்டம், உடல்வுளைதல், சோம்பல், கைகால் அசதி, இளைப்பு.


வாதகபநாடியிற் காணும் நோய்கள்:- திமிர், உளைச்சல், இருமல், சன்னி, விஷதோஷம், சூலை, இருதயரோகம், ஈளை, ம்ந்தாரகாசம், உள்வீச்சு, புறவீச்சு, வலி, மிகு சுரம்.


பித்தவாதநாடியிற் காணும் நோய்கள்:- அஜீரணம், குன்மம், சூலை, மந்தம், வயிற்றிரைச்சல், கிரகணி, தாதுநஷ்டம், ஆயாசம், மயக்கம், மூர்ச்சை, சுரம், முறைக்காய்ச்சல், விஷவீக்கம், மூலவாய்வு, இரத்தக்கெடுதி.


பித்தகபநாடியிற் காணும் நோய்கள்:- அஸ்திசுரம், இளைப்பு ஈளை, இரத்தவிப்புருதி, உளமாந்தை, பீநசம், சுரம், வயிறுபொருமல், கண்ணோய், கண் காது மலம் நீர் இவை மஞ்சளாக இருத்தல், பாண்டு, சோபை, காமாலை.


கபபித்தநாடியிற் காணும் நோய்கள்:- வீக்கம், விஷதோஷம், குளிர் காய்ச்சல், உடல் உளைச்சல், இருமல், ஈளை, வாந்தி, சுவாசம், விக்கல், வெகுசுரம், நாவறட்சி, பாண்டு, இரத்தாதிசாரம், நெஞ்சடைப்பு.


கபவாதநாடியிற் காணும் நோய்கள்:- வயிறுபொருமல், வீக்கம், வாந்தி, விக்கல், வலி, சன்னி, இளைப்பு, இருமல், சோகை, பாண்டு, விடபாகம், விஷசூலை, பக்கவாதம், நாசிகாபீடம், சிரநோய்கள்.


திரிதோஷநாடியிற் காணும் நோய்கள்:- சந்தி முதலியன.


அசாத்திய நாடி : அசாத்திய நாடி, மரண நாடி முதலியவைகளைக் குறித்து நூல்களில் விசேடமாகக் கூறப்பட்டிருப்பதுடன், ஒரு நாழிகை முதல் ஒரு நாளில் மரணமேற்படும் நாடி முதல், ஒரு மாதம் முதல், ஓராண்டில் மரணமேற்படும் நாடி வரையிலும், மற்றும் பலவிதமாக அசாத்திய மரண நாடிகளைக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இவற்றையெல்லாம் உணர்ந்து அனுபவிப்பது மிக மிக சிரமமான காரியமாகையாலும், அவற்றையெல்லாம் இங்குக்கூறின் பெருகுமாகையாலும் அவற்றைவிடுத்து அசாத்தியத்தைகுறிக்கும் சில அடிப்படைக் கொள்கைகளை மட்டும் இங்கு கவனிப்போம்.


'வாதமாய்ப் படைத்து, பித்தவன்னியாய் காத்து, சிலேத்ம சீதமாய்த்துடைத்து' என்பதனால் ஆக்கல் இருத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களை முறையேயுடைய வாதபித்த கப நாடிகளை பிரம்மநாடி, விஷ்ணுநாடி, ருத்திநாடி என்றுங் கூறப்படும். இம்மூன்று நாடிகளுக்கும் முறையே அபானன், பிராணன், சமானன் என்ற மூன்று வாயுக்கள் ஆதாரமாயுள்ளது.



இவ்வாறு பார்க்கும்போது அதில் விட்ட துளி பரவினதுபோல் இருப்பின் வாததோஷமென்றும்
குமிழ், குமிழாக கிளம்பின் பித்ததோஷமென்றும், முத்துப்போல் இருப்பின் ஓர் உருவாகத்தோன்றின்
சுபதோஷமென்றும், கூறப்படும்.மேலும் அந்த செய்த்துளியானது பரவி நின்றால்சாத்தியமென்றும்,மேலாக
முட்டை முட்டையாக கிளம்பினால் கஷ்டசாத்தியமென்றும், விட்ட துளி அப்படியே அழுத்தினால்
அசாத்தியமென்றும், அறியவேண்டும்.



மேலும் விட்ட துளியானது ஆமை நூகத்தடி,கலப்பை,எருது,நரி,ஒட்டகம்,பன்றி முதலியவற்றின்
உருவங்களைப்போல் காணப்படின் அசாத்தியமாகும்.


ஆயுதங்கள்,கத்தி,வில்,கேடயம்,உலக்கை,சுலம்,கதை முதலியஉருவங்களைப்போல் தோற்றுவ
தும், விட்ட துளியானது சிடு சிடுத்து பொங்குவதும்,தெற்கு கிழக்கு திக்குகளில் பரவுவதும் மரணக்குறி
களாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக